வில்லியம் ஷேக்ஸ்பியர்

ஆங்கிலேயப் பாவலர், நாடகாசிரியர் மற்றும் நடிகர் (1564-1616)

வில்லியம் சேக்சுபியர் (William Shakespeare) (26 ஏப்ரல் 1564 - 23 ஏப்ரல் 1616) ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகின்றார்.

சிலர் பிறக்கும் போதே மகத்துவத்துடன் பிறக்கிறார்கள்; சிலர் தங்கள் செயல்களால் மகத்துவத்தை அடைகிறார்கள்; சிலர் மீது மகத்துவம் திணிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  • சிலர் பிறக்கும் போதே மகத்துவத்துடன் பிறக்கிறார்கள்; சிலர் தங்கள் செயல்களால் மகத்துவத்தை அடைகிறார்கள்; சிலர் மீது மகத்துவம் திணிக்கப்படுகிறது.
  • மனிதனால் ஒரு முறைதான் இறக்க முடியும்.[1]
  • நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்.
  • நாம் அடிக்கடி அஞ்சுவதையே சில சமயங்களில் வெறுக்கிறோம்.[2]
  • மனிதன் மட்டும் நிலையாக நிற்பானானால் (அடிக்கடி மாறாமல்), அவன் பூரண ஒழுங்குள்ளவனாவான். அவ்வாறு நிற்காததால், அந்த ஒரு தவறு அவனிடம் பல குறைகளைச் சேர்த்துவிடுகின்றது: அவனைப் பல பாவங்களுக்கு உள்ளாக்குகின்றது. [3]
  • உலகத்தின் சோதனைகளுக்கு உட்படாமலும், அதனிடம் பாடம் படிக்காமலும். ஒருவன் நிறைவுள்ள மனிதனாக விளங்க முடியாது. அநுபவம் ஊக்கமாக உழைப்பதிலிருந்து கிடைக்கின்றது. காலத்தின் வேகம் அதைச் செம்மைப் படுத்துகின்றது.[4]
  • பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் கஷ்டநஷ்டங்களே ஆசிரியர்கள்.[4]
  • அநுபவம் ஓர் உயர்ந்த நகை. அது அவ்வளவு அரியதாகத்தான் இருக்கும்; ஏனெனில், மிகவும் கூடுதலான விலை கொடுத்தே அது வாங்கப்பட்டிருக்கின்றது.[4]
  • பகைகொள்ளல் எனக்கு மரணம் போன்றது. நான் அதை வெறுக்கிறேன். எனக்கு நல்லார் அனைவருடைய அன்பும் தேவை.[5]
  • அமைதியே கலைகளை வளர்த்து செழிப்பை உண்டாக்கி. இன்பமான புத்துயிரளிக்கும் செவிலித்தாய்.[5]
  • வேகமாக ஓடுகிறவர்கள் தடுமாறி விழுவார்கள் அறிவோடு மெதுவாகச் செல்ல வேண்டும்.[6]
  • சில அரசியல்வாதி கடவுளையும் ஏமாற்றக்கூடியவன்.[8]
  • அறத்தின் வழி நில்! அஞ்சவேண்டாம்! உன் லட்சியமெல்லாம் உன் தேசத்தை-உன் கடவுளை - உண்மையைப் பற்றியதாகவே இருக்கட்டும். அங்ஙனமாயின் நீ வீழ்ந்து விட்டாலும் பாக்கியம் பெற்றுத் தியாகியாகவே வீழ்வாய்.[9]
  • மனிதர் கவனமாய் வடித்து எடுப்பின், தீமையிலும் நன்மை தெளியலாம்.[9]
  • மனத்தைத் தவிர குறையுள்ளது இயற்கையில் வேறு கிடையாது. அன்பில்லாதவரே அங்கவீனர். அறமே அழகு. அழகான மறம் முலாம் பூசிய சூனியப் பேழையாகும்.[9]
  • மூடன் தன்னை அறிவாளி என்று மதித்துக் கொள்கிறான். ஆனால் அறிவாளியோ தன்னை முட்டாள் என்று அறிவான்.[10]
  • அறியாமை இறைவனின் சாபத்தீடு, அறிவுடைமை நாம் வானத்திற்குப் பறந்து செல்ல உதவும் சிறகு.[11]
  • 'அறிவு'-ஆம், அது நாம் வானுலகு ஏறுதற்குரிய வன் சிறகு.[12]
  • அறியாமை ஆண்டவன் சாபம், அறிவு தேவர் உலகத்திற்குக் கொண்டு செல்லும் சிறகு.[12]
  • ஆகா! உண்மை என்ற அணியைப் புனைந்துகொண்டால் அழகு எவ்வளவு பேரழகாகத் தோன்றுகின்றது.[13]
  • அழகு நன்மையானதுதான். ஆனால், வீணானது. அதன் பயனும் சந்தேகமானதுதான் அது திடீரென்று வாடும் வெளிப்பகட்டு அரும்பத் தொடங்கும் பொழுதே மடியக்கூடிய மலர்: சந்தேகமான தன்மை: ஒரு மினுக்கு ஒரு கண்ணாடி ஒரு மலர், அது ஒரு மணி நேரத்திற்குள் இழக்கப்பெறுவது: வாடக்கூடியது. உடையக்கூடியது அழியக்கூடியது.[13]
  • மாறுதல் கண்ட உடன் மாறிடும் அன்பு உண்மையிலேயே அன்பாகாது.[14]
  • பெண்களின் அழகிய தோற்றத்தைக்காட்டிலும், அவர்களுடைய அன்பே என் காதலைப் பெறும்.[15]
  • உணர்ச்சி தணிந்துவரும் சந்தர்ப்பம் பார்த்து நல்ல உபதேசங்களைச் சொல்ல வேண்டும்.[16]
  • நமக்கு வேண்டிய பரிகாரங்கள் நம்மிடமே இருக்கின்றன. அவை வானின் விதி என்று நாம் கூறுகின்றது விதிக்குக் காரணமான வானம் நம் விருப்பம் போல் செய்ய உரிமையளிக்கின்றது. நாம் சோம்பலாகவும் திட்டமிடுவதில் தாமதமாகவும் இருப்பதே நம்மைப் பின்னால் இழுக்கின்றது.[17]
  • இசையுணர்ச்சி இல்லாதவனும், இன்னிசையால் இதயம் இளகாதவனும் துரோகம், தந்திரம், திருட்டு முதலியன செய்யத் தகுந்தவர்.[18]
  • சயித்தான் உண்மையைப் போலக் காட்டி இருபொருளில் பொய் பேசுவதை நான் நம்புவதில்லை.[19]
  • பெரிய கொடையே யாகிலும் அன்பின்றிக் கொடுத்தால் கொடையாகாமல் தேய்ந்து போகும். [20]
  • உலோபியைப் போல், உள்ளம் நிறைந்த உண்மையும் ஒலைக் குடிசையிலேயே வாழ்கின்றது.[21]
  • விளக்கு ஏற்றுவது விளக்குக்கு வெளிச்சம் தருவதற்காக வன்று. அதுபோல் ஆண்டவன் அருளிய நம் நற்குணங்கள் பிறர்க்கு நன்மை தராவிடில் இருந்தும் இல்லாதனபோல் தான்.[22]
  • எவர் பேசுவதையும் கேட்டுக்கொள்; ஆனால் சிலரிடமே பேச்சுக்கொடு. எவர் கஷ்டத்தையும் தெரிந்து கொள்; ஆனால் உன் கருத்தைக் கூறிவிடாதே.[23]
  • நீ கடன் வாங்குபவனாகவோ, கொடுப்பவனாகவோ இருக்க வேண்டாம்; ஏனெனில், கடன் பெரும்பாலும் தன்னையும் இழந்து. ஒரு நண்பனையும் இழக்கச்செய்கின்றது.[24]
  • பணப்பையைப் பீடிக்கும் இந்தக் காச நோய்க்கு மருந்தே இல்லை: கடன் வாங்குதல் அதைச் சிறிது தான் இழுத்துக் கொண்டிருக்கச் செய்யும், ஆனால், நோய் குணமாகாது.[25]
  • நாம் எல்லோரும் பாவிகள். நாம் பிறரை மதிப்பிட வேண்டாம்.[26]
  • கருணையானது பிழியப்படுவதன்று. மழைபோல் பொழிவதாகும். அது அளிப்போனையும் பெறுவோனையும் ஆசிர்வதிக்கும். அதுவே ஆற்றல்களில் தலைசிறந்த ஆற்றல். அதுவே கடவுளின் இலட்சணம். நீதியின் கடுமையைத் தணிக்கும் கருணையுடன் கூடிய மனித சக்தியே கடவுள் சக்தியை ஒக்கும்.[27]
  • இனிய கருணையே பெருந்தன்மையின் அடையாளமாகும்.[27]
  • பைத்தியக்காரனும், காதல் கொண்டவனும், கவிஞனும் கற்பனையில் ஒன்றாவர்.[28]
  • காதல், கண்களால் காண்பதில்லை, மனத்தால் பார்க்கின்றது.[29]
  • மூன்று மணி நேரம் முன்கூட்டிச் சென்றாலும் செல்லலாம். ஒரு நிமிடம் பின்தங்கிவிடக்கூடாது.[30]
  • உலகில் நான் என்னைத் தவிர ஓர் சகோதரனைக் குறை சொல்ல மாட்டேன்; என் குறைகள் எனக்குத் தெரியும்.[31]
  • குற்றத்தின் நெஞ்சில் தேள்கள் நிறைந்துள்ளன. [32]
  • குற்றத்தைத் தவிர, இயற்கையிலுள்ள மற்ற எல்லாத் துயரங்களும் சேர்ந்து உடனே வந்தாலும் நாம் தாங்கலாம்.[32]
  • நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள் ஒவ்வொரு கண்ணும் தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்.[32]
  • குற்றமுள்ள நெஞ்சு சந்தேகத்தால் குறுகுறுத்துக்கொண்டேயிருக்கும் திருடன் ஒவ்வொரு செடியையும் ஓர் அதிகாரி யென்று அஞ்சுவான்.[32]
  • கேலியின் பெருமை கேட்பவரின் செவியைப் பொறுத்தது. ஒரு போதும் சொல்பவர் நாவில்லை.[33]
  • மக்கள் அதை இருக்கவிடுவதால்தான் கொடுங்கோல் ஆட்சி செய்கின்றது. அதன் சக்தியாலன்று.[34]
  • சாந்தியும் செழிப்பும் கோழைகளை அபிவிருத்தி செய்யும். கடுமையான நிலையே தைரியத்திற்குத் தாய்.[35]
  • கோழைகள் தம்முடைய மரணத்திற்கு முன்பே பலமுறை இறந்து போகின்றனர். வீரர்கள் மரணத்தின் உருசியை ஒருமுறையே அறிகின்றனர்.[35]
  • என் கௌரவமே எனது உயிர் இரண்டும் ஒன்றிலேயே வளர்கின்றன. கெளரவத்தை என்னிடமிருந்து எடுத்துவிட்டால், என் வாழ்க்கை முடிந்துவிடும்.[36]
  • சட்டப்படியுள்ள ஏழை மனிதனின் உரிமையைப் போல, வலையில் தொங்கும் மீன் அதை விட்டு வெளியே வருதல் அபூர்வம்.[37]
  • சட்டத்தின் பண்பு, இரக்கம்; கொடுங்கோலர்களே அதைக் கொடுமையாக உபயோகிப்பார்கள்.[37]
  • கூடி வாழும் இயல்பு இல்லாதவனுக்குச் சமுதாய வாழ்வு சுகமாக இராது.[38]
  • சான்றோர் என்பவர் குறைகளை அறியாதவர் அல்லர்; குறைகள் இருந்தும் அவைகளைத் திருத்திக் குணங்களை உண்டாக்கிக் கொண்டவரே சான்றோர் ஆவர்.[39]
  • உன் நோக்கத்தை வாளால் சாதித்துக் கொள்வதைவிட நகை முகத்தால் சாதித்துக் கொள்வதே சாலச் சிறந்ததாகும்.[40]
  • சுருங்கச் சொல்வதே பேச்சுத் திறனின் உயிர்நாடி-[41]
  • ஆண்ட்வனே எனக்கு உயிர் அளித்ததுபோல், நன்றி நிறைந்த இதயத்தையும் அளிப்பாயாக. [42]
  • வீசு, குளிர்காற்றே! வீசு. மனிதனுடைய நன்றியறியாமைப் போல நீ அவ்வளவு அன்பற்றவன் அல்ல; உன் மூச்சு சீறினாலும் உன் பற்கள் கூரியதாயில்லை. [43]
  • கடலில் நீர் பெருகும் சமயத்தில் சென்றால் நினைத்தயிடம் போய்ச் சேரலாம். அதுபோல வாழ்விலும் தக்க சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டால் லட்சுமியின் அருளைப் பெறலாம்.[44]
  • அதிர்ஷ்டதேவதை அதிகமாக அருள் செய்யப்போகும் பொழுது பார்த்தால் அதிக பயங்கரமாகத் தோன்றுவாள்.[44]
  • அருவருப்பான இந்த உலகத்தில் எந்த விஷயத்தைக்காட்டிலும் அதிகமான கொலைகளைத் தங்கம் செய்துள்ளது.விஷங்களைக் காட்டிலும் கொடிய தங்கம் மனிதர்களின் ஆன்மாக்களையே வதைப்பதாகும்.[45]
  • பேரின்பத்தை விரும்புபவன் பேரின்பமயமாக இருப்பான்.[46]
  • நன் மொழி கூறலும், ஒருவித நற்செயலே ஆயினும் மொழிகள் செயல்கள் ஆகா.[47]
  • சொற்கள் சுருங்கினால், பயன் வீணாவதில்லை. [48]
  • சோகம் தோன்றினால், வார்த்தைகளால் வெளியிட வேண்டும்: பேசாமல் அடங்கியுள்ள கோபம் முறுகிக் கிடக்கும் இதயத்தை உடையச் செய்துவிடும். [49]
  • ஒரு சோகம் (தனியே வராமல்) ஒரு வாரிசையும் கூட அழைத்துக் கொண்டு வரும். அதற்குப் பின்னால் வாரிசு தலையெடுக்கும்.[49]
  • நமது தத்துவ சாஸ்திரத்தில் நாம் கனவு கண்டும் அறியாத பல விஷயங்கள் விண்ணிலும் மண்ணிலும் உண்டு.[50]
  • இரங்குதல் இதயத்தின் சோகம். அதிலிருந்து தூய வாழ்க்கை தொடங்குகின்றது.[51]
  • இருபது அறிஞர்களுள் ஒருவர்கூட தம்மைத் தாமே புகழ்ந்து பேச மாட்டார்.[52]
  • துயில்தான் நமது வளர்ப்புத்தாய்.[53]
  • களைப்பு கல்லின் மேலும் குறட்டை விடும். அமைதியில்லாத சோம்பலுக்குத் தண்டனையும் உறுத்தும்.[53]
  • சாஸ்திரிகளும், சாவோரும் நரகத்தைப்பற்றிப் பேசட்டும். ஆனால் நரக வேதனைகள் எல்லாம் என் இதயத்திலேயே உள்ளவை.[54]
  • மனிதனிடமுள்ள பொய், செருக்கு, பிதற்றல், குடிவெறி மற்றும் எந்தத் தீமையைக்காட்டிலும். நன்றி மறத்தலை நான் மிகவும் வெறுக்கிறேன். அத்தீமைகள் நம் உதிரத்தைப் பாழாக்குகின்றன. [56]
  • நன்றியற்ற குழந்தையைப் பெற்றிருத்தல் நாகத்தின் பல்லைவிட எவ்வளவு கூர்மையானது.[56]
  • செங்குத்தான பாறைகளில் ஏறுவதற்கு முதலில் மெதுவாக ஏற வேண்டியிருக்கும். [57]
  • நீதியாயிருங்கள். அஞ்சவேண்டாம் உங்களுடைய நோக்கங்களெல்லாம் உங்கள் தேசத்திற்காகவும், உங்கள் கடவுளுக்காகவும், உண்மைக்காகவும் இருக்கட்டும்.[58]
  • செய்வதற்கு எது நல்லது என்று தெரிந்துகொள்வதைப் போலச் செய்வதும் அவ்வளவு எளிதாக இருந்தால், வீட்டுக் கோயில்களெல்லாம் பெரிய மாதாகோயில்களாகிவிடும். ஏழை மனிதர்களின் குடிசைகளெல்லாம் அரசர்களின் அரண்மனைகளாகிவிடும். ஒரு சமய குரு தாமே தம் உபதேசங்களின்படி நடந்தால் நல்லதுதான். செய்வதற்கு எது நல்லது என்பதை நான் இருபது பேர்களுக்கு எளிதாகக் கற்றுக்கொடுக்க முடியும். ஆனால், அந்த இருபது பேர்களுள் ஒருவனாக இருந்து என் உபதேசங்களின்படி நடப்பதுதான் அகைவிடக் கடினம்.[59]
  • என்னையா ஏழை என்று கூறுகிறாய்? என்னிடமுள்ள நூல்கள் இராஜ்யத்திலும் உயர்ந்தன அல்லவோ?[60]
  • அவனுடைய சொற்கள் உறுதிமொழிப் பத்திரங்கள், அவன் கூறும் ஆணைகள் அசரீரி வாக்குகள், அவன் சிந்தனைகள், தூய்மையானவை. அவனுடைய கண்ணீர்த் துளிகள் அவன், இதயத்தின் தூதர்கள். அவனுடைய இதயத்திற்கும் ஏமாற்றுக்கும் உள்ள தூரம் வானத்திற்கும் பூமிக்கும் உள்ள தூரம் போன்றது.[62]
  • வீட்டிலே சோம்பேறியாயிருந்து, வாலிபத்தை உருவில்லாத சோம்பலில் கழிப்பதைவிட வெளியே சென்று உலகத்தின் ஆச்சரியங்களைப் பார்.[63]
  • அருட்கண்ணீர் தோய்ந்த முகத்தினும் உண்மை காட்டும் முகம் கிடையாது. கண்ணிர்விட்டு வருந்துவதைக் கண்டு மகிழ்வதினும் கண்ணிர்விட்டு இரங்குவது எத்துணைச் சிறப்பாகும்![64]
  • அவதூறு வாளினும் அதிகமான கூர்மையும், நாகத்தினும் அதிகமான விஷமும் உடையது. அது மூச்சு விட்டால் போதும், அரைக்கணத்தில் அகிலலோகமும் பரவிடும்.[65]
  • துய வெண்மையான பண்பையும் பின் நின்று புண்படுத்தும் அவதூறு தாக்கிவிடும்.[66]
  • நீ பனிக்கட்டி போல் குற்றமில்லாதிருந்தாலும், பனிபோல பரிசுத்தமாயிருந்தாலும், நீ பழிச்சொல்லிலிருந்து தப்ப முடியாது. [66]
  • பழி வாங்குதல் வீரமன்று. ஆனால், பொறுப்பதே வீரம்.[67]
  • புதிய வழக்கங்கள். அவை பரிகசிக்கத்தக்கவையாக இருந்தாலும், அவை எவ்வளவு இழுக்காக இருப்பினும், பின்பற்றப்பெறுகின்றன.[68]
  • உலகம் அனைத்தையும் கட்டிக் காப்பாற்றி, அமுதூட்டி வரும் நூல்கள், கலைகள், கலை மன்றங்கள் யாவும் பெண்களே.[69]
  • பெண்களைப் பெருமிதம் கொள்ளச் செய்வது. அழகு; அவர்களை மிகவும் பாராட்டும்படி செய்வது, பண்பு அவர்களைத் தெய்விகமாகத் தோன்றச் செய்வது. அடக்கம்.[69]
  • மனிதர்களுக்கு மனம் பளிங்கு, பெண்களுக்கு மனம் மெழுகு.
  • பெண் கேட்பதில் ஆண்கள் வசந்தகாலமாக (ஏப்ரலாக) இருக்கின்றனர். திருமணத்தில் பனிக்காலமாக (டிசம்பராக) இருக்கின்றனர். [70]
  • நாவு ஒன்றுள்ள மனிதன், அதைக்கொண்டு ஒரு பெண்ணை அடைய முடியாவிட்டால், அவன் மனிதனே அல்லன்.[70]
  • சிலர், பிறப்பிலேயே பெருமையுடன் வருகின்றனர். சிலர், பெருமையை அடைகின்றனர். சிலர்மீது பெருமை திணிக்கப் பெறுகின்றது.[71]
  • பேசுபவர்கள் நல்ல செயலாளர்களாக இருப்பதில்லை.[72]
  • பேராசையை விட்டுத் தள்ளு. அந்தப் பாவத்தினால் அமரர்கள் வீழ்ச்சியுற்றனர். தன்னைப் படைத்தவரின் சாயலில் அமைந்த மனிதன் மட்டும் அதன் மூலம் வெற்றியடையலாம் என்று எப்படி நம்ப முடியும்? [73]
  • எல்லாவற்றிற்கும் மேலே இதை வைத்துக்கொள் நீ உனக்கு உண்மையாக நடந்துகொள்: பிறகு இரவைப் பகல் தொடர்வது போல, நீ வேறு எந்த மனிதனுக்கும் பொய்யனாக மாட்டாய்.[74]
  • பொறுமையில்லாதவர் எவ்வளவு எளியராயிருக்கின்றனர்! எந்தப் புண்தான் சிறிது சிறிதாக அல்லாமல் உடனே ஆறிவிடுகின்றது?[75]
  • நீர்க்குமிழி போன்ற புகழை நாடிப் போர்வீரன் பீரங்கியின் வாய்க்குச் செல்லுகிறான்.[76]
  • கவலையற்ற இதயம் நீடித்து வாழும்.[77]
  • இரண்டு வேலைகளுக்காகப் புறப்படும் மனிதனைப் போல. நான் எதில் தொடங்குவது என்று தயங்கி நிற்கிறேன். அதனால் இரண்டையும் கைவிடுகிறேன்.[79]
  • மனச்சான்று நம் அனைவரையும் கோழைகளாக்கிவிடுகின்றது.[80]
  • சிறு பொறியேயாயினும் துருத்திகொண்டு ஊதினால் பெருநெருப்பாவதுபோல் சிறிய தீமை செய்தவனேயாயினும் முகத்துதி பெறப் பெற அதிகக் கொடியவன் ஆகிவிடுகின்றான்.[81]
  • நன்றாகவும் கவனமாகவும் செய்யப்பெற்ற காரியங்களைப்பற்றி அஞ்ச வேண்டியதில்லை.[82]
  • உயர்ந்தோர் தோஷங்களாலேயே உருப்பெற்றவர் என்பர்.[84]
  • என்ன அழகான பழம்-இதனுள்ளே அழுகல்-பொய் எவ்வளவு அழகாய் வேஷம் போட்டுக் கொள்கிறது.[84]
  • கிழிந்த கந்தல் துணிகளின் மூலம் சிறுசிறு கெட்ட பழக்கங்கள் நுழைந்து வந்துவிடுகின்றன. நீண்ட அங்கிகளும், உயர்ந்த உடைகளும் எல்லாவற்றையும் மூடி மறைத்துவிடுகின்றன.[85]
  • பலாத்காரக் களியாட்டங்கள் பலாத்கார முடிவுகளையே அடைகின்றன.[86]
  • வழக்காடும் எதிரிகள், வல்லமையுடன் போராடுகிறார்கள். ஆனால், உண்பதிலும் பருகுவதிலும் அவர்கள் நண்பர்களைப் போலவே நடக்கின்றனர்.[87]
  • வாழ்வு என்ற ஆடையில் எப்பொழுதும் இரண்டு வகை நூல்கள் இருந்தே தீரும். அவை நன்மை, தீமையே![88]
  • வாழ்க்கை, இருமுறை சொன்ன கதையைப்போல், சலிப்பாயுள்ளது.
  • வாழ்க்கை (தறியிலுள்ள) ஓர் ஓடம்.
  • நல்லதும் கெட்டதுமான நூல்களைக் கலந்து நெய்தது தான் வாழ்க்கை.
  • ஒரு தோல்வியைக் கண்டு, நீ நிறைவேற்றக் கருதியதைக் கைவிட வேண்டாம்.[89]
  • வீரத்திற்குச் சிறந்த பகுதி, சாதுரியம்.[90]

நாடக மேடை

தொகு
இந்த உலகமே நாடக மேடை
அதில் எல்லோருமே நடிகர்கள்
ஒவ்வொருவருக்கும் அறிமுகமும் முடிவும் உண்டு
ஒருவருக்கே பல வேடங்களும் உண்டு.[91]

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

தொகு
    • பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்
    • பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
    • பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

சான்றுகள்

தொகு
  1. Henry IV, Part 2 (1597–8), Feeble, Act III, scene ii.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 11-12. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் -16. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. 4.0 4.1 4.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 29-31. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. 5.0 5.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 39-40. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 50-51. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 41-42. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  8. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 46-48. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  9. 9.0 9.1 9.2 என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21. 
  10. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவீனம். நூல் 61- 63. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  11. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; அறிவின்மை என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  12. 12.0 12.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  13. 13.0 13.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 58-61. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  14. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12. 
  15. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 78-81. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  16. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 91-92. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  17. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 93-95. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  18. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/இசை. நூல் 158-159. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  19. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 104-105. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  20. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/ஈகை. நூல் 141-143. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  21. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை. நூல் 23- 29. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  22. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/உபகாரம். நூல் 146-148. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  23. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/உரையாடல். நூல் 87- 88. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  24. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 146-147. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  25. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 147. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  26. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 150. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  27. 27.0 27.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கருணை. நூல் 69 - 70. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  28. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 158. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  29. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 159-160. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  30. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 246. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  31. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 162-163. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  32. 32.0 32.1 32.2 32.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 163-164. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  33. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 164-165. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  34. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 166. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  35. 35.0 35.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 169-170. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  36. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 170. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  37. 37.0 37.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 171-173. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  38. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 177. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  39. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சான்றோர். நூல் 67 - 69. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  40. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிரிப்பு. நூல் 96- 98. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  41. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 187. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  42. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 232. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  43. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்றியறிதல். நூல் 82- 84. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  44. 44.0 44.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  45. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 194-197. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  46. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 188. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  47. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சொல். நூல் 85- 87. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  48. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 198-199. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  49. 49.0 49.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 200-201. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  50. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/தத்துவ ஞானம். நூல் 42- 44. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  51. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 191. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  52. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 207. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  53. 53.0 53.1 53.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 132. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  54. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நரகம். நூல் 37-38. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  55. 55.0 55.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்மை-தீமை. நூல் 50- 52. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  56. 56.0 56.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 232-233. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  57. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 237. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  58. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 239-241. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  59. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 242-243. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  60. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல்கள். நூல் 163-168. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  61. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல் நிலையம். நூல் 171-172. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  62. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 31-32. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  63. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 268-269. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  64. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அனுதாபம். நூல் 77- 78. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  65. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பழி. நூல் 95- 96. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  66. 66.0 66.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 52-56. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  67. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 264. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  68. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 273-274. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  69. 69.0 69.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 278-281. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  70. 70.0 70.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 281-282. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  71. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 282-283. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  72. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 284. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  73. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 285-286. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  74. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 287-289. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  75. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 291-292. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  76. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 292. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  77. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 293-294. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  78. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/திருப்தி. நூல் 143-146. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  79. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 299. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  80. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 300-301. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  81. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/முகஸ்துதி. நூல் 92- 95. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  82. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 304. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  83. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மோட்சம். நூல் 36- 37. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  84. 84.0 84.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வஞ்சகம். நூல் 74- 75. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  85. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 311. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  86. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 259-260. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  87. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 309-310. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  88. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 21- 23. 
  89. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 315-316. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  90. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 316. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  91. As You Like It (1599–1600), Jaques, Act II, scene vii.

வெளி இணைப்புக்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:

வார்ப்புரு:Authority control

"https://ta.wikiquote.org/w/index.php?title=வில்லியம்_ஷேக்ஸ்பியர்&oldid=37394" இலிருந்து மீள்விக்கப்பட்டது