கடன் வாங்குதல்
கடன் வாங்குதல் என்பது ஒரு பொருளையோ அல்லது பணத்தையோ திருப்பித் தருவதாக பெறுவதாகும்.
- கடன் வாங்குதல் பிச்சையெடுப்பதைவிட மிகவும் மேலானதன்று.--லெஸ்ஸிங்[1]
- பணத்தின் அருமை உனக்குத் தெரிய வேண்டுமானால், வெளியே போய்க் கொஞ்சம் கடனாகக் கேட்டுப் பார். கடன் வாங்கப் போகிறவன் துக்கப்பட்டுக்கொண்டே போகிறான். -ஃபிராங்க்லின்[1]
- கடன்படுதல் வலைக்குள் சிக்கிக்கொள்வதாகும். -ஃபிராங்க்லின்[1]
- பணப்பையைப் பீடிக்கும் இந்தக் காச நோய்க்கு மருந்தே இல்லை: கடன் வாங்குதல் அதைச் சிறிது தான் இழுத்துக் கொண்டிருக்கச் செய்யும், ஆனால், நோய் குணமாகாது. - ஷேக்ஸ்பியர்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 147. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.