பெஞ்சமின் பிராங்கிளின்

ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர்

பெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin; (ஜனவரி 17, 1706 – ஏப்ரல் 17, 1790)) என்பவர் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார். இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார். மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகளுக்கும், கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்படுகிறார். அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் சீர்திருத்த முறைமை அவசியத்தை வலியுறுத்தியவர்.

மேற்கோள்கள்

தொகு
  • நீங்கள் தாமதிக்கலாம், ஆனால் காலம் தாமதிக்காது.
  • ஒரு காசு சேர்த்தது ஒரு காசு சம்பாதித்ததற்குச் சமம்.
  • ஒவ்வொன்றிற்கும் ஒரு இடம்; ஒவ்வொன்றும் அதனிடத்தில்.
  • அறிவில் போட்ட முதல் மிகச்சிறந்த வட்டியைத் தரும்.
  • நண்பனைத் தெரிவதில் தாமதம் காட்டுங்கள்; மாற்றுவதில் இன்னமும் தாமதம் காட்டுங்கள்.
  • ஏமாற்றும் பித்தலாட்டமும் எப்பொழுதும் அவசரப்படுவது வழக்கம். எல்லா விஷயங்களுக்கும் போதிய நேரம் வேண்டும். அதிக அவசரம் அதிக நஷ்டம்.[1]
  • கஷ்டங்கள். நஷ்டங்கள் அடைந்த பின்பு மனிதர் அதிக அடக்கத்தையும் அறிவையும் பெறுகின்றனர்.[2]
  • ஒரு மனிதன் தன் பணப்பையில் இருப்பதையெல்லாம் முளைக்குள் ஏற்றிக்கொண்டுவிட்டால், அந்த நிதியை அவனிடமிருந்து எவரும் கவர முடியாது.[3]
  • அறிவின் பெருக்கத்திற்காகப் போடும் விடுமுதல் எப்பொழுதும் மிக உயர்ந்த வட்டியையே கொடுக்கும்.[4]
  • அநுபவம் என்ற பள்ளிக்கூடம் செலவு மிகுந்தது. ஆனால் மூடர்கள் வேறு எங்கும் படிக்க மாட்டார்கள்: அந்தப் பள்ளியில் படிப்பதும் அரிதுதான். ஏனென்றால், நாம் ஆலேசனை சொல்லமுடியுமே அன்றி. ஒழுக்கத்தை அள்ளி ஊட்ட முடியாது.[5]
  • சுமுகமாயிருத்தல் என்பது விலையின்றிக் கிடைக்கும். ஆனால் அதைக்கொண்டு அனைத்தையும் வாங்க முடியும்.[6]
  • ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் இடம் உண்டு. ஒவ்வொன்றும் தன் இடத்தில் இருத்தல் வேண்டும்.[7]
  • கடன் வாங்குவதில் நீ என்ன செய்கிறாய் என்பதை நினைத்துப் பார். உன் சுதந்தரத்தின்மீது மற்றொருவனுக்கு அதிகாரம் அளிக்கிறாய். தவணைப்படி கடனைச் செலுத்த முடியாவிட்டால், உன் கடன்காரனை நீ பார்க்க வெட்கப் படுவாய் அவனிடம் பேசும்பொழுது அஞ்சி நடுங்குவாய் அற்பமான, இரங்கத்தக்க போலிச் சாக்குப்போக்குகளைச் சொல்வாய், படிப்படியாக உண்மை பேசுவதை நிறுத்தி பச்சைப் பொய் சொல்லத் தொடங்குவாய், கடனோடு இரண்டாவது தீமையான வெற்றுப்பை நிமிர்ந்து நிற்பது கஷ்டம்.[8]
  • பணத்தின் அருமை உனக்குத் தெரிய வேண்டுமானால், வெளியே போய்க் கொஞ்சம் கடனாகக் கேட்டுப் பார். கடன் வாங்கப் போகிறவன் துக்கப்பட்டுக்கொண்டே போகிறான். [9]
  • கடன்படுதல் வலைக்குள் சிக்கிக்கொள்வதாகும்.[9]
  • மற்ற மனிதர்களின் கண்களே நம்மைக் கெடுக்கும் கண்கள். என்னைத்தவிர மற்ற யாவரும் குருடர்களாயிருந்தால், எனக்கு நேர்த்தியான உடைகளோ, பெரிய வீடுகளோ, உயர்ந்த நாற்காலிகள் முதலியவைகளோ தேவையில்லை.[10]
  • துன்பத்தை எதிர்பார்க்க வேண்டாம், ஒரு காலத்தும் நடவாததற்குக் கவலைப்பட வேண்டாம். நல்ல சூரிய வெளிச்சத்தில் தங்கியிரு.[11]
  • கொடுங்கோலரை எதிர்த்துக் கலகம் செய்தல் கடவுளுக்குக் கீழ்ப்படிவதாகும்.[12]
  • இரண்டு வக்கீல்களுக்கிடையிலுள்ள வழக்காடுபவன். இரண்டு பூனைகளுக்கிடையில் அகப்பட்டுக்கொண்ட மீன் போலிருப்பான்.[13]
  • வருமானத்தைவிடக் குறைவாகச் செலவு செய்ய அறிந்துவிட்டால் ரசவாத ரகசியத்தை அடைந்து விட்டவர் ஆவோம்.[14]
  • உண்மையும் உழைப்பும் உனக்கு இடைவிடாத தோழர்களாயிருக்கட்டும். வருமானத்திற்கு ஓரணா குறைத்துச் செலவழிக்கவும். பின்னால் உன் பையில் பணம் மிஞ்சும் கடன்காரர் தொல்லை இராது. தேவையால் கஷ்டப்பட வேண்டாம். பசி வாட்டாது துணியில்லாமல் வாடையில் வருந்த வேண்டாம்.[15]
  • பைசாவை நீ கவனித்தால் போதும், ரூபாய்கள் தாங்களே தங்களைக் கவனித்துக்கொள்ளும்.[15]
  • பேகம் முன்னால், இருமுறை சிந்திக்கவும்.[16]
  • ஒவ்வொரு வருடமும் ஒரு தீய வழக்கத்தைக் களைந்துவந்தால், நாளடைவில் மிகவும் இழிவான மனிதன்கூட நல்லவனாகி விடுவான்.[17]
  • சோம்பல் எல்லா விஷயங்களையும் கஷ்டமாக்கும் சுறுசுறுப்பு எல்லாவற்றையும் எளிதாக்கும்.[18]
  • சுறுசுறுப்பு. கடன்களை அடைக்கும். சோம்பலும் கருத்தின்மையும் கடன்களைப் பெருக்கும்.[18]
  • சணலை நெருப்பிலிருந்து தொலைவில் வைக்கவும் இளைஞனைச் சூதாட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்கவும். [19]
  • ஒரு தீமைக்கு இடம் கொடுத்தால். அது இரண்டு குழந்தைகை அழைத்து வரும். கொஞ்சம் தேநீர் அல்லது கொஞ்சம் பழச்சாறு ஆகியவற்றை இடையிடையே குடித்து வரலாம் என்றும், சற்றுக் கூடுதலான விலைமதிப்புள்ள உணவை அருந்தி வரலாம் என்றும். சற்று உயர்ந்த ஆடைகளை அணியலாம் என்றும் கொஞ்சம் தமாஷாக்கள் பார்த்து வரலாம் என்றும் நீங்கள் ஒருவேளை எண்ணலாம். இவை பெரிய விஷயங்கள் அல்ல என்றும் கருதலாம். ஆனால், 'பலதுளி பெருவெள்ளம்’ என்பது நினைவிருக்கட்டும். சின்னச் சின்னச் செலவுகளில் எச்ரிக்கையாக இருங்கள். ஒரு சிறு துவாரம் இருந்தாலும், அது பெரிய கப்பலை மூழ்கச் செய்துவிடும்.[20]
  • உனக்கு அவசியமில்லாத பொருள்களை விலைக்கு வாங்கு சீக்கிரத்தில் உனக்கு இன்றியமையாத பொருள்களையும் விற்க நேரிடும்.[20]
  • செல்வம் தன்னை வைத்திருப்பவனுக்குச் சொந்தமில்லை. அனுபவிப்பவனுக்கே சொந்தம். -ஃபிராங்களின்[21]
  • செல்வத்தை அடையும் வழி, சந்தைக்குச் செல்லும் வழியைப் போல். தெளிவாக உள்ளது. அது முக்கியமாக இரண்டு சொற்களில் அடங்கியுள்ளது. சுறுசுறுப்பு சிக்கனம். - ஃபிராங்க்லின்[21]
  • முன்னதாகப் படுத்து. முன்னதாக எழுந்தால், மனிதனுக்கு உடல் நலமும், செல்வமும் அறிவும் பெருகும்.[22]
  • தந்திரமும் ஏமாற்றமும் அறநெறி நிற்கப் போதுமான அறிவில்லாத மூடர் செயல்.[23]
  • மனிதர் தற்சமய நிலைமையில் காணும் தீமைகளுக்காக வருந்தும்பொழுது, வேண்டுமென்று விரும்பும் நிலையில் ஏற்படக்கூடிய தீமைகளைப்பற்றிச் சிறிதும் சிந்திப்பதில்லை.[23]
  • எறும்பைப்போல் உபதேசிப்பவர் யாருமில்லை; ஆனால் எறும்போ பேசுவதே இல்லை.[24]
  • பயனில் சொல்லுக்குப் பொறுப்பாவதுபோல் பயனில் மெளனத்துக்கும் பொறுப்பாவோம். -[24]
  • ஒரு மனிதனின் நாணயத்தைப் பாதிக்கக்கூடிய மிகச்சிறிய விஷயங்களிலேகூடக் கவனமாயிருக்க வேண்டும். அதிகாலை ஐந்து மணிக்கும் இரவு ஒன்பது மணிக்கும் உன் சம்மட்டியின் ஓசையை உனக்குக் கடன் கொடுத்தவன் கேட்டால், அவன் உன் கடனை மேலும் ஆறு மாதத்திற்குக் கேளாமலிருப்பான். நீ வேலை செய்துகொண்டிருக்க வேண்டிய நேரத்தில், அவன் உன்னை மேடைப் பந்தாட்டத்திலே கண்டாலும், மதுக்கடையிலே உன் குரலைக் கேட்டாலும், மறு நாளே அவன் தன் கடனைக் கேட்டு ஆளனுப்புவான். [25]
  • கடன் வாங்கியவர்களைவிடக் கடன் கொடுத்தவர்களுக்கு ஞாபகம் அதிகம்.[25]
  • பகைவருள் சிறு பகைவன் என்பது கிடையாது.[26]
  • பணத்தைப் பயன்படுத்துவதுதான் அதைப் பெற்றிருப்பதன் பயன்.[27]
  • பணம். பணத்தைப் பெறும் அதன் குட்டிகளும் பணம் பெறும். இவ்வாறு சேர்ந்துகொண்டேயிருக்கும்.[27]
  • தான் சுதந்தரமாக வாழ விரும்புபவன் மற்றொருவருக்காகப் பிணையாகக்கூடாது.[28]
  • வெற்றி வந்தவுடன் பாராட்டும் வருகின்றது: நிலையில்லாத பொது மக்கள், வெள்ளத்தில் மிதந்து செல்லும் துரும்பு போல வெற்றியைத் தொடர்ந்து செல்கின்றனர்.[29]
  • மருந்துகளுள் முதன்னையானவை ஓய்வும். உபவாசமும்.[30]
  • யுத்தங்களிலே ஒருகாலும் நல்ல யுத்தம் என்பதே கிடையாது. அதே போலத் தீமையான அமைதி என்பதும் கிடையாது.[31]
  • வறுமை, மனிதனுடைய ஊக்கம், பண்பு எல்லாவற்றையும் பறித்து விடுகின்றது. காலியுள்ள பை நட்டமாக நிற்க முடியாது.[32]

குறிபுகள்

தொகு
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 50-51. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் -12-16. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 67-68. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 69-75. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 29-31. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/உரையாடல். நூல் 87- 88. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 142. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  8. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 145-146. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  9. 9.0 9.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 147. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  10. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 33-37. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  11. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 157. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  12. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 166. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  13. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 171-173. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  14. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிக்கனம். நூல் 113- 114. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  15. 15.0 15.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 180-181. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  16. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 182. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  17. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 184-185. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  18. 18.0 18.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 188-189. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  19. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 189-190. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  20. 20.0 20.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 194. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  21. 21.0 21.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 194-197. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  22. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 132. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  23. 23.0 23.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்மை-தீமை. நூல் 50- 52. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  24. 24.0 24.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நா' அடக்கம். நூல் 87- 88. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  25. 25.0 25.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 236. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  26. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 249-250. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  27. 27.0 27.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 252-253. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  28. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 267-268. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  29. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 294. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  30. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 298. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  31. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 307-309. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  32. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 311. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  33. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 319-320. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.

வெளி இணைப்புக்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:

1735 - 1737 - 1738 - 1739 - 1742 - 1753 - 1758

"https://ta.wikiquote.org/w/index.php?title=பெஞ்சமின்_பிராங்கிளின்&oldid=36355" இலிருந்து மீள்விக்கப்பட்டது