• தாங்கள் செய்யும் தவறுகளுக்கு, அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் அருமையான பெயர் தான் அனுபவம். -கென்னடி
  • உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
  • பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.
  • தியாகம் தான் வாழ்க்கை, இது இயற்கை கற்றுத் தந்த பாடம் – காந்திஜி
  • வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம். பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
  • மனிதன் தனக்கு அநியாயம் இழைக்கும் முழு உலகத்தையும் எதிர்த்து நிற்க முடியும். ஆனால்,தான் அநியாயமாக நடத்தும் ஒருவனின் எதிரில் நிமிர்ந்து நிற்கவே முடியாது. -வ.ஸ.காண்டேகர்.
  • இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல, அதில் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமே! -ஆபிரகாம் லிங்கன் முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன்!' - நேதாஜி
  • காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும். கடும் உழைப்பில் செலவழிக்கப்பட்ட ஒரு நாள், நல்ல உறக்கத்தைத் தருகிறது. கடும் உழைப்பில் செதுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை, என்றுமே அழியாத புகழைப் பெற்றுத் தருகிறது! -லியனார்டோ டாவின்சி
  • கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் குற்றங்களை உணராதவனே குருடன் – காந்திஜி
  • ஜனநாயகம் ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல, அது ஒரு கூட்டு வாழ்க்கைமுறை. சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கு! - அம்பேத்கர்
  • அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். —போவீ.
  • அநுபவம் ஒரு நம்பகமான விளக்கு அதைத் துணையாகக் கொண்டு வழி நடக்கலாம்: ஒரு மனிதன் வெற்றியடைவதற்குத் தான் முன்னால் கையாண்ட வழிகளையே எதிர் காலத்தில் பயன்படுத்த எண்ணினால், அவனை ஆலோசனையில்லாதவன் என்று சொல்ல முடியாது. - வெண்டல் ஃபிலிப்ஸ்[1]
  • பழமைகளின் கனி, அநுபவம், அதுவே எதிர்காலங்களையெல்லாம் உருவாக்குகின்றது. - ஆர்னால்டு[1]
  • அநுபவம் மெதுவாகத்தான் கற்பிக்கும் தவறுகள் அதற்குரிய செலவுகள். - ஃப்ருடு[1]
  • உனக்குப் பழமை தெரியும், அதிலிருந்து எதிர்காலத்திற். வேண்டிய எச்சரிக்கையைப் பெறமுடியும்; மனிதன் தன் தவறுகளிலிருந்து படிக்கிறான். அவைகளிலிருந்தே அவன் பவம் பெறுகிறான். - ஷெல்லி[1]
  • வாழ்க்கையில் படித்தலும், படித்ததை மறத்தலும் அடங்கியுள்ளன. ஆனால், பெரும்பாலும் படிப்பதைவிட மறந்து வருதலே அறிவுடைமையாகும். - புல்வெர்[1]
  • கஷ்டப்பட்டதன் சாரமே அநுபவம் - ஏ. ஹெல்ப்ஸ்[1]
  • அனுபவத்தைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்க முடியாத ஒரு மனிதன் மற்றொருவனுடைய கஷ்டத்திலிருந்து பாடம் கற்றுச் கொள்ளமாட்டான். அவன் தானே கஷ்டப்பட வேண்டும். கப்பலின் பின்பகுதியிலுள்ள விளக்குகளால் கப்பல் கடந்து வந்த வழிக்குத்தான் வெளிச்சம் தெரியும். இதைப் போலவே தான் பெரும்பாலான மனிதர்களுக்கு அநுபவமும். - காலெரிட்ஜ்[1]
  • அநுபவம் என்ற பள்ளிக்கூடம் செலவு மிகுந்தது. ஆனால் மூடர்கள் வேறு எங்கும் படிக்க மாட்டார்கள்: அந்தப் பள்ளியில் படிப்பதும் அரிதுதான். ஏனென்றால், நாம் ஆலேசனை சொல்லமுடியுமே அன்றி. ஒழுக்கத்தை அள்ளி ஊட்ட முடியாது. - ஃபிராங்க்லின்[1]
  • வயதையும் அனுபவத்தையும் கொண்டு புதிய அறிவு பெறாமல், எந்த மனிதனும் வாழ்க்கையை நடத்தத் தேலையான திறமை அனைத்தையும் பெற்றிருக்கவில்லை. - டெரென்ஸ்[1]
  • அநுபவம் தெரிவிக்கும் விதிகள், தத்துவம் பேசுவோர் தங்கள் நூல் நிலையங்களில் இருந்துகொண்டு கூறும் விளக்க உரைகளைவிட மேலானவை. - ஆர். எஸ். ஸ்டோர்ஸ்[1]
  • நான் சிறுவனாயிருந்த பொழுது ஒவ்வொரு விஷயத்தையும் உறுதியாக நம்பி வந்தேன். சில ஆண்டுகளுக்குப் பின்னால், ஆயிரம் தவறுகளைக் கண்டறிந்தபின், நான் முன்போல் பெரும்பாலான விஷயங்களைப் பாதியளவுகூட நம்ப வில்லை. இப்பொழுது கடவுள் அருள் கூர்ந்து தெளிவாக்கியுள்ளதைத் தவிர, வேறு எந்த விஷயத்தையும் நான் நம்புவதில்லை. - ஜான் வெஸ்லி[1]
  • உலகத்தின் சோதனைகளுக்கு உட்படாமலும், அதனிடம் பாடம் படிக்காமலும். ஒருவன் நிறைவுள்ள மனிதனாக விளங்க முடியாது. அநுபவம் ஊக்கமாக உழைப்பதிலிருந்து கிடைக்கின்றது. காலத்தின் வேகம் அதைச் செம்மைப் படுத்துகின்றது. _ ஷேக்ஸ்பியர்[1]
  • பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் கஷ்டநஷ்டங்களே ஆசிரியர்கள். - ஷேக்ஸ்பியர்[1]
  • அநுபவம் ஓர் உயர்ந்த நகை. அது அவ்வளவு அரியதாகத்தான் இருக்கும்; ஏனெனில், மிகவும் கூடுதலான விலை கொடுத்தே அது வாங்கப்பட்டிருக்கின்றது. - ஷேக்ஸ்பியர்[1]
  • ஒவ்வொரு நாளும் அதற்கு முன்னால் கழிந்து சென்ற நாளின் சீடனாகும். - பப்ளியஸ்ஸைரஸ்[1]
  • அநுபவத்திற்கு அளவு கடந்த சம்பளம் கொடுக்க வேண்டி யிருக்கின்றது. ஆனால், அதற்கு நிகராகச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் வேறில்லை. - கார்லைல்[1]
  • அறிவிலிகளுக்கும் அயோக்கியர்களுக்கும் அநுபவமே பொதுவான பள்ளிக்கூடம் அறிவும் ஒழுக்கமுமுள்ள மனிதர்கள் வேறு முறையில் பயிற்சி பெறுகின்றனர். - எராஸ்மஸ்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 29-31. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அனுபவம்&oldid=19192" இலிருந்து மீள்விக்கப்பட்டது