தாமஸ் கார்லைல்

ஸ்காட்லாந்து மெய்யியலாளர், எழுத்தாளர், வரலாற்றாளர், ஆசிரியர்

தாமஸ் கார்லைல் (Thomas Carlyle) (4 திசம்பர் 1795 - 5 பிப்ரவரி 1881) ஒரு ஸ்காட்டிஷ் தத்துவவாதி, அங்கத எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், வரலாற்றாசிரியர், கணித வல்லுனர், ஆசிரியர் ஆவார்.

இவரது மேற்கோள்கள் தொகு

அதிர்ஷ்டம் தொகு

  • கெட்டகாலத்தைத் தாங்குவது கஷ்டம்தான். ஆனால் நல்லகாலத்தைத் தாங்கக் கூடியவர் ஒருவர் இருந்தால் கெட்டகாலத்தைத் தாங்கக் கூடியவர் நூறுபேர் இருப்பர்.[1]
  • அதிர்ஷ்டக் குறைவால் ஆனந்தம் கிடையாமல் இருக்கலாம். ஆனால், அவனவனேதான் தன்னை இழிஞனாக ஆக்கிக் கொள்கிறான்.[1]

அன்பு தொகு

  • கண்டிக்க அறியாதவன், தெரியாதவன், எப்படி கருணை காட்டுவான்?[2]

அறம் தொகு

  • நன்றாய் எழுதப்பட்ட ஜீவிய சரிதம் நன்றாய் வாழப்பட்ட ஜீவியத்தைப் போலவே அரியதாகும்.[3]

அறிவு தொகு

  • சாத்தானுக்குச் சிந்தனை செய்பவனைப் போன்ற கொடிய சத்துரு கிடையான்.[4]
  • பயபக்தியில்லாத அறிவு அறிவாகாது. அது மூளை அபிவிருத்தியாயிருக்கலாம் அல்லது கைத்தொழில் அறிவாயிருக்கலாம். ஆனால் ஆன்ம அபிவிருத்தியாக மட்டும் இருக்காது.[4]
  • நாம் கஷ்டப்பட்டுச் சேர்த்துள்ள அறிவு ஓர் உடமையாகும் அது முற்றிலும் நமக்கே சொந்தமான உடமை.[5]

அனுபவம் தொகு

  • அநுபவத்திற்கு அளவு கடந்த சம்பளம் கொடுக்க வேண்டி யிருக்கின்றது. ஆனால், அதற்கு நிகராகச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் வேறில்லை.[6]

ஆணவம் தொகு

  • குறைகளில் எல்லாம் பெரிய குறை யாது? குறையிருந்தும் குறையிருப்பதாக உணராததே. [7]

ஆன்மா தொகு

  • மனிதனையும் அவன் செயல்களையும் அடக்கியாள்வது ஜட சக்தி அன்று, ஆன்மா சக்தியேயாகும். [8]

இயலாமை தொகு

  • இயலாது என்ற இந்தச் சொல் ஆக்கமுள்ள வார்த்தையன்று இதை அடிக்கடி நாவிலே தரிப்பவர்களிடமிருந்து எவ்வி நன்மையும் வராது.[9]

உழைப்பு தொகு

  • தன் வேலையைக் கண்டுகொண்ட மனிதன் பாக்கியசாலி. உலகிலே ஓர் அசுரன் இருக்கிறான். அவன்தான் சோம்பலுள்ள மனிதன்.[10]

கடமை தொகு

  • தொலைவிலே மங்கலாகத் தெரிவதைக் காண்பது நம் கடமையன்று, நம் கண் முன்பு உள்ளதைச் செய்வதே நம் மேலான கடமை.[11]

கவிதை தொகு

  • நாம் செய்ய வேண்டியதைக் காட்டுபவர் தீர்க்கதரிசி; நாம் நேசிக்க வேண்டியதைக் காட்டுபவர் கவிஞர்.[12]
  • அனைவரிடத்திலும் கவிதையம்சம் உண்டு. முற்றிலும் கவிதையம்சமாக உள்ளவர் யாருமிலர். கவிதையைச் சரியாக வாசிக்கக் கூடியவர் அனைவரும் கவிஞரே.[12]

சான்றோர் தொகு

  • சான்றோர் சரிதையை அரை குறையாகவே கற்றாலும் அதனால் நன்மை அடையாமல் இருக்க முடியாது.[13]
  • தமது உயர்வை அறியாதவரே சான்றோர்.[13]
  • பெரியோர் எப்பொழுதும் வானிலிருந்து இறங்கும் மின்னலே ஆவர்; மக்கள் எல்லோரும் அவர் வருகைக்காகக் காத்திருப்பர், வந்ததும் அவர்களும் ஜோதியாவர்.[13]

சிரிப்பு தொகு

  • எத்தனை விஷயங்கள் சிரிப்பில் அடங்கியுள! நெஞ்சைத் திறந்து அறிவதற்கேற்ற திறவுகோல் அதுவே. நகைக்க முடியாதவன் துரோகம், தந்திரம், திருட்டு முதலியன செய்யத் தகுந்தவன்.[14]

தவறுக்கு வருந்துதல் தொகு

  • (தவறு செய்ததற்கு வருந்துதலே மனிதனுடைய செயல்களுள் மிகவும் தெய்விகமானது.[15]

தியாகம் தொகு

  • தன்னை ஒடுக்கும் தியாகம்- இதுவே இறைவன் மனிதனுக்கு அருளியுள்ள தலை சிறந்த ஞானமாகும். [16]

நல்லதும் கெட்டதும் தொகு

  • எப்பொழுதும் நமது சூரிய ஒளியில் ஒரு கறுப்புப் புள்ளி உண்டு, நமது நிழலே அது.[17]

நாவடக்கம் தொகு

  • பேச்சு பெரியதே. ஆனால் மெளனம் அதனினும் பெரியதாகும்.[18]

நூல்கள் தொகு

  • இக்காலத்தும் அற்புதங்கள் நிகழ்வதில்லையோ? நூல்கள் மக்கள் மனத்தை வயப்படுத்துகின்றனவே.[19]
  • இதயத்திலிருந்து உதிக்கும் நூலே இதர இதயங்களையும் கவர வல்லது. அது முடியுமானால் வேறு கலைத்திறமை எதுவும் அவசியமில்லை.[19]

நூலகங்கள் தொகு

  • இந்தக் காலத்தில் உண்மையான பல்கலைக் கழகம் என்பது நூல்கள் நிறைந்த நூல் நிலையமே.[20]

நேர்மை தொகு

  • உன்னை யோக்கியமான மனிதனாகச் செய்துகொள் பின்னர் உலகில் ஓர் அயோக்கியன் குறைந்தான் என்பது நிச்சயம்.[21]

பரிவு தொகு

  • முகமது நபியின் அழகிற் சிறந்த இரண்டாம் மனைவி அயேஷா ஒருநாள் 'முதல் மனைவி கதீஜாவிடமுள்ளதை விட என்னிடந்தானே தங்கட்கு அதிகப் பிரியம்?' என்று கேட்டபொழுது அவர் 'இல்லை இல்லை அல்லா சாட்சியாக இல்லை. என்னைப் பிறர் நம்பாத காலத்தில் ஆதியில் அவள்தான் நம்பினாள். அப்பொழுது அவள் ஒருத்தியே என் நண்பர்” என்று பதிலுரைத்தார்.[22]

பழக்கம் தொகு

  • மனித இயற்கையன ஆழ்ந்தமைந்த சட்டம், பழக்கம்.[23]

பழி தொகு

  • 'இகழ்தல்' -அதனோடு விளையாடினால் ஆபத்து; அதனோடு வாழ்ந்தாலோ அழிவேதான்.[24]

புகழ் தொகு

  • புகழை வைத்துத் தகுதியை அளக்க முடியாது. தகுதியை ஓரளவு அறிய முயலலாம். அவ்வளவுதான். அது தற்செயலாக ஏற்படுவது. மனிதனின் குணத்தை வைத்தல்ல.[25]

பொய்மை தொகு

  • பொய்யை எங்கே கண்டாலும் மிதித்து அணைத்துவிட வேண்டும். என்னைச் சுற்றி எங்காவது பொய் நடமாடுவதாய்ச் சந்தேகம் ஏற்பட்டால், தொற்று நோய்களுக்குச் செய்வது போல காற்றிலே புகையூட்டி வைப்பேன்.[26]

மகிழ்ச்சி தொகு

  • பாடிக்கொண்டே வேலை செய்யும் மனிதனே நமக்கு வேண்டும்![27]

மதம் தொகு

  • விக்கிரகங்கள் சந்தேகத்திற்கு இடமாயும், வணங்குவோர் இதயத்திற்கு எல்லாவித நல்லுணர்ச்சியும் தரச் சக்தியற்ற சர்வ சூனியமாயும் ஆகும்பொழுது தான் விக்கிரக ஆராதனை தவறாகும்.[28]

வழக்கம் தொகு

  • வழக்கம் நம் அனைவரையும் நலிந்து மெலிந்த முதியவர்களாக்கி விடுகின்றது.[29]

வாழ்க்கை வரலாறு தொகு

  • எல்லா நூல்களிலும் ஜீவிய சரிதைகளே எல்லோர்க்கும் இனியன, பயன் அளிப்பன.[30]
  • நல்ல முறையில் நடத்திய ஜீவியத்தைப் போலவே நல்ல முறையில் எழுதிய ஜீவிய சரிதமும் அபூர்வமானதாகும்.[30]

வினைத்திட்பம் தொகு

  • உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்.[32]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அதிர்ஷ்டம். நூல் 109- 110. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12. 
  3. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21. 
  4. 4.0 4.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 69-75. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 29-31. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  7. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கர்வம். நூல் 112- 113. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  8. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா. நூல் 44- 46. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  9. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 102. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  10. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 128-129. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  11. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 144-145. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  12. 12.0 12.1 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கவிதை. நூல் 159-163. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  13. 13.0 13.1 13.2 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சான்றோர். நூல் 67 - 69. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  14. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிரிப்பு. நூல் 96- 98. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  15. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 191. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  16. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/தியாகம். நூல் 149-150. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  17. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்மை-தீமை. நூல் 50- 52. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  18. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நா' அடக்கம். நூல் 87- 88. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  19. 19.0 19.1 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல்கள். நூல் 163-168. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  20. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 244-245. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  21. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 247. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  22. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அனுதாபம். நூல் 77- 78. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  23. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 260-262. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  24. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பழி. நூல் 95- 96. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  25. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 271-273. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  26. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 287-289. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  27. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 293-294. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  28. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  29. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 310. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  30. 30.0 30.1 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/ஜீவிய சரிதம். நூல் 178-179. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  31. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 177-178. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  32. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 315-316. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தாமஸ்_கார்லைல்&oldid=36149" இலிருந்து மீள்விக்கப்பட்டது