மதம் என்பது கடவுளை அறிவதற்கான வழியில் மனித ஆன்மா கடந்து செல்லும் வழியாகும்.

  • மதம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சாகவும் இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மா இல்லாத நிலைமைகளின் ஆன்மாகவும் உள்ளது. மதம் மக்களுக்கு அபினி.
  • மதம் இதயமற்ற உலகின் இதயம்; (துன்பப்படும்) மக்களுக்குத் தேவையான அத்தியாவசியமான போதை.
மதம் பல கிளைகளைக் கொண்ட ஒரு மரமாகும். கிளைகள் என்ற முறையில் பல மதங்கள் இருப்பதாக நீங்கள் சொல்லக்கூடும். மரமாக இருக்கும் மதம் என்னமோ ஒன்று தான்.
  • எனக்கு மட்டும் அதிகாரம் இருக்குமானால் வகுப்புவாதத்தையும், மதவெறியையும், வெறுப்புணர்வையும், பகையையும் வளர்க்கக் கூடிய எல்லா எழுத்துக்களையும் தீண்டத்தகாதவையாக நான் அறிவிப்பேன்.[1]
  • இந்துக்களை அழிப்பதன் மூலம் முஸ்லீம்கள் இஸ்லாத்துக்கு சேவை செய்ய இயலாது, மாறாக அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை அழித்தவர்கள் ஆவார்கள். அதேபோல் இஸ்லாமியத்தை அழித்துவிடலாம் என்று இந்துக்கள் நம்புவார்களானால், அவர்கள் இந்து தர்மத்தை அழிப்பவர்களாவார்கள்.[1]
  • மதம் பல கிளைகளைக் கொண்ட ஒரு மரமாகும். கிளைகள் என்ற முறையில் பல மதங்கள் இருப்பதாக நீங்கள் சொல்லக்கூடும். மரமாக இருக்கும் மதம் என்னமோ ஒன்று தான்.[1]
  • நமது ஒவ்வொரு செயல்பாட்டிலும் மதம் ஊடுருவி இருக்க வேண்டும் . ஆனால் இங்கே மதம் என்பது குருகியவாதமாகது, முறைபடுத்தப்பட்ட அறவழிப்பட்ட பிரபஞ்ச நிர்வாகம் என்பதில் ஒரு நம்பிக்கை என்பதே இதன் பொருள்...இந்த மதம் இந்து, இஸ்லாம், கிறித்தவம் முதலியவற்றுக்கு அப்பாற்பட்டது.[1]
  • ஒரு இடத்தில் கூடும் பல சாலைகள் போலவே மதங்கள்.நாம் ஒரே முடிவை நோக்கி பயணிக்கிறோம் எனில் எந்த சாலையில் செல்கிறோம் என்பது முக்கியம் இல்லை.இதற்காகச் சண்டையிட என்ன அவசியம்?
  • அனைத்து மதங்களும் கலையும் அறிவியலும் ஒரே மரத்தின் கிளைகள்.
  • ஆழமான மதம் சார்ந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நான். இது ஒரு வகையான புதிய மதம். இயற்கையிடம் நான் ஓர் அற்புதமான கட்டமைப்பைக் காண்கிறேன்; அதை மிகக்குறைந்த அளவிலேயே நம்மால் புரிந்து கொள்ள முடியும், அந்தப் புரிதல் சிந்திக்கக்கூடிய ஒவ்வொரு நபரின் உள்ளத்திலும் ஓர் உணர்வை உண்டாக்குகிறது. இது ஓர் உண்மையான மத உணர்வாகும். இதற்கும் மதவாதிகள் கூறும் மர்மமான மதப் புரிதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
  • அறிவியலோடு கலக்காத மதம் குருட்டுத்தனமானது.
  • நான் சொல்கிறேன் என்பதற்காக எதையும் நீங்கள் ஒப்புக்கொள்ளாதீர்கள். பிறகு, மதவாதிகள் புராணத்தை முன்வைத்து பேசுவதை நீங்கள் ஒப்புக் கொள்வதற்கும், இதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். நான் பேசியதை வைத்து உங்களுக்குள் நிறைய கேள்விகளை எழுப்புங்கள், அதன் பின்னர் நான் சொன்னது சரியென்கும் பட்சம் ஒப்புக் கொள்ளுங்கள்.
  • தேரும், திருவிழாவும் நடத்திப் பொதுமக்கள் பணத்தைப் பாழாக்குவதே மூடத்தனம்.[2]
  • மதத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு இடமிருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அது மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? இல்லையா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா? நீங்காதா என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.[2]
  • மனிதனை முட்டாளாக்கும், பிரித்து வைக்கும் அமைப்பு மதம் ஆகும்.[2]
  • உலகிலுள்ள மதங்கள் எல்லாம் குருட்டு நம்பிக்கை என்கின்ற பூமியின் மீதே கட்டப்பட்டுள்ளன.
  • மதம் ஒழிந்த இடத்தில்தான் மனிதனின் பிறப்புப்பேதம் புதைக்கப்படுகிறது.[2]
  • மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தனது மாடுகளுக்குப் போடும் அடையாளம் போன்றதே.[2]
  • பிரார்த்தனை என்பதற்கு வேறு பெயர் பேராசை. பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்.[2]
  • மதம் மக்களின் அறிவைக் கெடுக்கிறது.[2]
  • மதம் மக்களைச் சோம்பேறிகளாய், கோழைகளாய் ஆக்குகிறது.[2]
  • உலகிலுள்ள எப்படிப்பட்ட மதக்காரனும், கடவுள் நம்பிக்கைகாரனும் நம்பிக்கைவாதி ஆவானே ஒழிய, அறிவுவாதி ஆகவே மாட்டான்.[2]
  • கடவுளும் மதமும் நம்பிக்கைக்காரனை வெறியனாகவும், பைத்தியக்காரனாகவும் கூட ஆக்கிவிடும்.[2]
  • இந்து மதத்தில் கல்வித் தெய்வமும், செல்வத் தெய்வமும், வீரத்தெய்வமும் பெண் தெய்வங்களாய் இருந்தும், இந்துமதக் கொள்கைப்படி
  • மதமானது அநேகமாக எப்போதுமே குருட்டு நம்பிக்கை, பிற்போக்கு, வறட்டுக் கோட்பாடு, வெறியுணர்ச்சி, முடநம்பிக்கை, சுரண்டல், உடமையாளர்களின் நலன்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை ஆதரிப்பதாகத் தோன்றுகிறது.[3]
  • மதமானது தெளிவான சிந்தனைக்கு எதிரியாக எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் அது மாற்றப்பட முடியாத சில தத்துவங்களையும் கோட்பாடுகளையும் மறுப்பில்லாமல் ஏற்றுக்கொள்வதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.[3]
  • மதத்திலிருந்துதான் எதேசதிகாரம் பிறக்கிறது, மக்கள் அடிமைகளாக்கப்படுகின்றனர்.
    • (1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து.)[4]
  • மதம் மனிதனுடைய சுதந்திர தாகத்தைக் குறைக்கின்ற அபீனாக கடந்த காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
    • (1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து.)[4]
  • சமயத்தைப் பற்றிச் சிந்தியாதவன், தான் பிறந்த சமயமே உண்மைச் சமயம் என்று எண்ணிக் கொள்கிறான்.[5]
  • இராணுவம் மட்டும் இருந்து மதம் இல்லாத தேசத்திலே ஒழுங்கு இருப்பது அரிது.[6]
  • மத சாம்ராஜ்யத்தின் அதிபதிகள் மட்டுமே, பாதுகாக்கப்படாத ராஜ்யங்களையும் ஆளப்படாத பிரஜைகளையும் உடையவர்களாயிருக்கிறார்கள். அவர்களுடைய ராஜ்யங்கள் பாதுகாக்கப்படாதவையாகையால் அவர்களிடமிருந்து பறிக்கப்படுவதில்லை. அவர்களுடைய பிரஜைகள் ஆளப் படாதவர்கள் ஆகையால், அவர்கள் ஆதிக்கத்தை மறுப்பதில்லை.[6]

பிறர்

தொகு
  • நூறு விதமாய்க் கூறினாலும் மதம் ஒன்று தான் உண்டு. ஜோர்ஜ் பெர்னாட் ஷா[5]
  • உலகமே என் தேசம், நன்மை செய்வதே என் சமயம். -தாமஸ் பெய்ன்[5]
  • மனிதர் அனைவருக்கும் மதமாகிய கடிவாளம் தேவை. 'மரணத்திற்குப்பின் யாதோ?’ என்னும் பயமே மதம். -ஜார்ஜ் எலியட்[5]
  • அவனியிலுள்ள சமயங்களில் அறத்தாறு உய்ப்பது ஒன்றே உண்மைச் சமயம். -ஸவனரோலா[5]
  • நம்மிடம் பகைப்பதற்குப் போதுமான சமய உணர்ச்சி உளது. ஆனால் அன்பு செய்வதற்குப் போதுமான அளவு இல்லை. -ஸ்விப்ட்[5]
  • ஞானிகள் அனைவர்க்கும் ஒரே மதமே. அவர்கள் தத்தம் மதத்தை வெளியே கூறுவதில்லை. -லார்ட் ஷாப்ட்ஸ்பரி[5]
  • பண விஷமாய் நம்பத் துணியாத இடத்தில் ஆன்ம விஷயமாய் நம்பத்துணிவது எவ்வளவு விபரீதம்! மதாசாரியர் காலணா கொடுத்தால் அது செல்லுமோ செல்லாதோ என்று சந்தேகிப்போம். ஆனால் அவர்கள் கூறும் மதத்தை ஆராயாது சரி என்று அங்கீகரித்து விடுகிறோம். என்னே மனிதர் மடமை! - பென்[5]
  • சரியாக அறியாத சமயமே நம்மை அழகுக்கு அந்நியமாக்கும். சமயம் அழகைக் கண்டு ஆனந்திக்கும்படி செய்யுமானால், அப்பொழுது சமயம் உண்மை, சரியாக அறிந்திருக்கிறோம் என்று தெரிந்துகொள்ளலாம். -லெஸ்ஸிங்[5]
  • எல்லாச் சமயங்களுக்கும் ஒரே நோக்கம்தான். விலக்க முடியாததை ஏற்றுக் கொள்ளச் செய்வதே அந்த நோக்கம். -கதே[5]
  • எந்தக் காலமும் எனக்குத் துணையாய் நிற்க இறைவனிடம் ஏற்பதாயிருந்தால், முதலில் வேண்டுவது சமய சாந்தி, இரண்டாவது கல்வியில் சுவை. -ஹெர்ஷல்[5]
  • சமய அனுஷ்டானத்துக்கு இன்றியமையாது வேண்டப்படுவது மனித ஜாதியிடம் அன்பும் மரியாதையும் செய்தலே. - அனடோல் பிரான்ஸ்[5]
  • மனிதர்கள், இம்மைக்காக மறுமையையும், மறுமைக்காக இம்மையையும், ஒருபொழுதும் முழுவதும் வேண்டாம் என்று விட்டுவிட மாட்டார்கள். -ஸாமுவேல் பட்லர்[5]
  • சமயம் மாறுபவன் தலை போன பின் இன்ன தெனத்திரும்பிப் பார்க்கும் ஈயை ஒப்பான். -பட்லர்[5]
  • அற உணர்ச்சி அளிக்காத சடங்குகள் அனைத்தும் அழிக்கத் தக்கவைகளே. -ஸவனரோலா[5]
  • கிறிஸ்துவ மதம் அயலானுக்கு அன்பு செய்யப்போதிக்கும், ஆனால் தற்கால சமூகமோ அயலான் ஒருவன் உண்டு என்பதையே ஒப்புக்கொள்வதில்லை. -டிஸ்ரேலி[5]
  • தன் மதம் அடிமைத்தனம் என்று உணர்பவன் அதை இன்னும் அறிய ஆரம்பியாதவன். -ஜே.ஈ. ஹாலண்டு[5]
  • அறிவில்லாத சமயவாதிகள் சமயக் கொள்கைகளுக்காகச் சண்டையிடட்டும். ஆனால் தர்ம வழியில் நடப்பவன் ஒருநாளும் தவறியவனாகான். -போப்[5]
  • புனிதமான விஷயங்களை உணர்ச்சியின்றிக் கையாளும் வேஷதாரிகளே பெரிய நாஸ்திகர். அவர்களுக்கு இறுதியில் சூடு போடுதல் அவசியம். -பேக்கன்[5]
  • தொல்லையில்லாமல் இருப்பதற்காகவே ஜனங்கள், 'நாங்கள் எல்லோரும் ஒரே மதத்தினர்' என்று கூறிக் கொள்கின்றனர். ஆனால் விஷயத்தை நன்கு ஆராய்ந்தால், எல்லா விஷயங்களிலும் ஒரே மதத்தையுடைய மூன்று பேரைக்கூட எங்கும் காண முடியாது. - ஸெல்டன்[5]
  • மதப் பிடிவாதி, ஆப்பிரிக்க எருமை போல் இருப்பவன். நேரேதான் பார்ப்பான்- பக்கங்களில் திரும்பான். -பாஸ்டர்[5]
  • ஜனங்கள் சமயத்திற்காகச் சண்டையிடுவர், வாதம் புரிவர், வசை பகர்வர், அயலாரைத் துன்புறுத்துவர், அனலிலும் இடுவர், உயிரைத் துறக்கவும் செய்வர்- சமயத்திற்காக எல்லாம் செய்வர். ஆனால், சமய வாழ்வு வாழ மட்டும் செய்யார். சிலரேனும் வாழ முயலவாவது வேண்டாமோ? அதுகூடக் கிடையாது. -பிரிஸ்வெல்[5]
  • விக்கிரகங்கள் சந்தேகத்திற்கு இடமாயும், வணங்குவோர் இதயத்திற்கு எல்லாவித நல்லுணர்ச்சியும் தரச் சக்தியற்ற சர்வ சூனியமாயும் ஆகும்பொழுது தான் விக்கிரக ஆராதனை தவறாகும். -கார்லைல்[5]
  • நட்பு விஷயத்திற் போலவே மத விஷயத்திலும் யார் அதிகப் பற்றுடையவர்களாகக் கூறிக் கொள்கிறார்களோ, அவர்களே அந்த அளவிற்கு உண்மை நம்பிக்கை குறைந்தவர்களாவர். -ஷெரிடன்[5]
  • மதப்பிடிவாதமுடையவர் அவர்கள் வாழ்நாளில் மட்டுமே மதியுடையவராய் மதிக்கப்படுவர். -தாமஸ் வில்ஸன்[5]
  • நாம் உண்மை என்று நம்புவதை ஒப்புக்கொள்ள மறுப்பவரை நாஸ்திகர் என்று கருதுவது பெருந்தவறு. இழிவான நோக்கங்கொண்டு உண்மைக்குச் செவிசாய்க்க மறுப்பவரே நாஸ்திகர். சமயக் கோட்பாடுகளை எல்லாம் நம்புவதாய்க் கூறிக்கொண்டு சமய ஒழுக்கம் இல்லாதவன் நாஸ்திகரில் நாஸ்திகன். -ஹெச்.ஏ.[5]
  • மதப் பிடிவாதியின் மனம் கண்ணை ஒக்கும், அதிக ஒளி பட்டால் அதிகமாக இடுக்கும். -ஹோம்ஸ்[5]
  • மதப் பிடிவாதம், மதத்தைக் கொன்று, அதன் ஆவியைக் காட்டி மூடர்களைப் பயமுறுத்தும். -கோல்டன்[5]
  • மதப் பிடிவாதத்துக்கு மூளையில்லை, அதனால் யோசிக்க முடியாது; இதயமில்லை, அதனால் உணர முடியாது. -ஒகானல்[5]
  • வாழ்க்கையில் ஒரு வெறி ஏற்பட்டால்தான் பிடிப்புடன் முன்னேறி வாழமுடியும் அதைச் சமயம் கொடுக்கிறது. அது சொல்லுகிற மோஷத்தைக் கொடுக்காவிட்டாலும் இது போதும். அந்த மோஷத்தை விட மேலானது. -புதுமைப்பித்தன்[7]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "மகாத்மா –மதச்சார்பின்மை, மதவெறி" எனும் தலைப்பில் பிபன் சந்திரா, ஆற்றிய உரை2003 ஆம் ஆண்டு.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 பகுத்தறிவாளர் நாள்குறிப்பு (2009, 2010, 2011, 2012, 2013 ஆண்டிற்கானது, நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளுக்கான தாளின் தலை பகுதியிலும் உள்ளது), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியிடு
  3. 3.0 3.1 அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், (2010). ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள். புதுதில்லி: நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா,. pp. 225-230. ISBN ISBN 978-81-237-3332-6. 
  4. 4.0 4.1 அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், (2010). ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள். புதுதில்லி: நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா,. pp. 83-91. ISBN ISBN 978-81-237-3332-6. 
  5. 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 5.11 5.12 5.13 5.14 5.15 5.16 5.17 5.18 5.19 5.20 5.21 5.22 5.23 5.24 5.25 5.26 5.27 5.28 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  6. 6.0 6.1 நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  7. முல்லை பிஎல். முத்தையா (1998). புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள். நூல் 28-63. முல்லை பதிப்பகம். Retrieved on 22 ஏப்ரல் 2020.


வெளி இணைப்புக்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 
Wiktionary
விக்சனரியில் இருக்கும் மதம் என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மதம்&oldid=20286" இலிருந்து மீள்விக்கப்பட்டது