அனடோல் பிரான்ஸ்

பிரஞ்சு எழுத்தாளர்

அனடோல் பிரான்ஸ் (Anatole France] (16 ஏப்ரல் 1844 - 12 அக்டோபர் 1924) என்பவர் பிரெஞ்சு கவிஞர், பத்திரிகையாளர் மற்றும் புதின ஆசிரியர் ஆவார்.

இவரது மேற்கோள்கள்

தொகு
  • கடமையை நிறைவேற்ற அன்பு, தைரியம் என்று இரண்டு வழிக்காட்டிகள் உள. இரண்டும் ஒன்று கூடிவிட்டால் ஒருநாளும் வழி தவறுவதில்லை.[1]
  • நாம் கருத்துகளை நிறைய கற்பிக்க வேண்டும். இதுவரை நிகழ்ச்சிகளையே அதிகமாகக் கற்பித்து வந்தோம். [2]
  • ஒருவன் சூழ்நிலைகளைத் தொடர்ந்து. தன்னைச் சுற்றியுள்ள சக்திகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரே வார்த்தையில் சொன்னால், செய்யத்தக்கதைச் செய்யவேண்டும்.[3]
  • சமய அனுஷ்டானத்துக்கு இன்றியமையாது வேண்டப்படுவது மனித ஜாதியிடம் அன்பும் மரியாதையும் செய்தலே.[4]
  • மனிதன் திருந்துவதால் உலக சமாதானம் வரும் என்பதில்லை. ஆனால், புதிய சூழ்நிலைகள், புதிய விஞ்ஞானம். புதிய பொருளாதார அவசியங்கள் ஆகியவை அமைதியை நிலை நாட்டுபவை.[5]

குறிப்புகள்

தொகு
  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடமை. நூல் 63- 66. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 158-159. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 190. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 307-309. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அனடோல்_பிரான்ஸ்&oldid=35713" இலிருந்து மீள்விக்கப்பட்டது