நூலகங்கள்

புத்தகங்கள் அல்லது பிற தகவல் வளங்களின் ஒழுங்கமைக்கப்பட்ட சேமிப்பு

நூலகம் (library) என்பது, பொது அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது தனி நபர்களால் உருவாக்கப்பட்டுப் பேணப்படுகின்ற தகவல் மூலங்களின் அல்லது சேவைகளின் ஒரு சேமிப்பு ஆகும். மரபு வழியான நோக்கில் இது நூல்களின் சேமிப்பு எனலாம். இந் நூல்களையும், வேறு மூலங்களையும், சேவைகளையும், இவற்றைத் தாங்களே சொந்தமாக வாங்க விரும்பாத அல்லது வாங்க முடியாத அல்லது ஆய்வுகளுக்காகத் தொழில்முறை உதவி தேவைப்படும் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு நவீன நூலகத்தின் உட்தோற்றம்

மேற்கோள்கள்

தொகு
  • நல்ல நண்பர்க்கு அடுத்த படியில் ஸ்தானம் வகிப்பவை நல்ல நூல்களே. -கோல்ட்டன்[1]
  • நூல்கள் இல்லாத மாளிகைகளில் வசிக்கும் தரித்திரமான தனவந்தர்க்கு இரங்குவோமாக. -பீச்சர்[1]
  • நூல் நிலையம் என்பது மனித வாழ்வில் ஒரு ஆடம்பரமன்று. அவசியமே யாகும். -பீச்சர்[1]
  • நூல் நிலையம் பெரியோர் ஆன்மாக்கள் வாழும் புண்ணியஸ்தலம். அங்கே எப்பொழுதும் அறிவு மணம் கமழ்ந்து கொண்டிருக்கும். -லாம்[1]
  • அக்காலத்தில் மத சந்நியாசிகளின் உறைவிடமாகிய மடங்களே கல்வி ஸ்தாபனங்களாக இருந்து வந்தன. அங்கு மதக் கல்வியுடன் மக்களுக்கு வேண்டிய இதர விஷயங்களும் கற்பிக்கப்பட்டன. நம் நாட்டில் அத்தகைய மடங்களை மீண்டும் ஏற்படுத்துவது முடியாத காரியம். ஆகையால் பாமர மக்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டுமானால் வாசக சாலைகள் இன்றியமையாததாகும். — சர். ஏ. ராமசாமி முதலியார் (4-5-1928) (ஒய். எம். சி. ஏ. பட்டிமன்றத்தில்)[2]
  • இந்தக் காலத்தில் உண்மையான பல்கலைக் கழகம் என்பது நூல்கள் நிறைந்த நூல் நிலையமே. -கார்லைல்[3]
  • ஒரு பெரிய நூல் நிலையத்தில் மானிட சமுதாயத்தின் நாட் குறிப்பேடு அமைந்துள்ளது. -ஜீ டாஸன்[3]
  • நல்ல நண்பர்களைத் தேடிக்கொள்வதற்கு அடுத்தபடியாக, நல்ல நூல்களைத் தேடிக்கொள்ளல் இனிது. - கோல்டன்[3]
  • பெரிய நூல் நிலையம், படிப்பவன் சிந்தனையைப் பல விதங்களில் திருப்பிவிடக்கூடும்; பல ஆசிரியர்களின் நூல்களைப் பார்த்துக்கொண்டு சுற்றுவதைவிடச் சில ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு பார்த்தல் நலம். - ஸெனீகா[3]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல் நிலையம். நூல் 171-172. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. 3.0 3.1 3.2 3.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 244-245. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நூலகங்கள்&oldid=21963" இலிருந்து மீள்விக்கப்பட்டது