அன்பு என்பது நெருக்கமான உள்ளப் பிணைப்பு தொடர்பான ஓர் உணர்வும் அநுபவமும் ஆகும்.

மேற்கோள்கள்தொகு

அலெக்சான்டர் போப்தொகு

 • வாழ்க்கையின் வறுமையிலே துன்பப்படுவோர்களுக்காக இரங்குக! இன்புறுவோர் துன்புறும் மக்களுக்குக் காட்டும் இரக்கம் மட்டுமல்ல அது; கடன், கடமை, மனிதநேயம்.[1]

அன்னை தெரசாதொகு

 • நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.
 • இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.
 • அன்பிற்கு தடை என்றால் அந்த வேலிகளை தாண்டவே விரும்புவேன்.

காண்டேகர்தொகு

 • அன்பில் நம்பிக்கை வை; அது துயரில் கொண்டு போய் விட்டாலும் பரவாயில்லை; இதயத்தை மூடாதே.

காந்திதொகு

 • பகைமையை அன்பால் வெல்லுங்கள்; சோம்பலை செயல் ஊக்கத்தால் வெல்லுங்கள்.
 • எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள்.
 • நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கருத்துகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் இதயங்கள் இணைவதற்குத் தடை ஏதுமில்லை.
 • அன்பு எப்போதும் பாதிப்படைவது. எப்போதும் வன்மம் கொள்ளாது, பழி வாங்காது.
 • அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும்.
 • மனித குலத்தை அன்பு என்ற விதி தான் ஆள்கிறது. எங்கே அன்பிருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது.

செசுடர் பீல்டுதொகு

 • மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே, ஒருவன் பெற்றிருக்க வேண்டிய பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம்.

மௌரசுதொகு

 • அன்பு காட்டுவது எச்சரிக்கை உணர்வை விடவும் சிறந்தது, மேலானது; ஆனால், தயக்கம் இல்லாமல் மற்றவர்களுக்குக் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

இங்கர்சால்தொகு

 • அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும்.
 • அன்பே இல்லாத மாளிகை காட்டு மிருகங்கள் வாழும் இருண்ட குகை.

அரிசுடோடில்தொகு

 • அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நாம் அன்பு செலுத்த முடியாது.

அரவிந்தர்தொகு

 • முழுமையான அன்பு இல்லையேல் முழுமையான அழகு இருக்க முடியாது; அழகு முழுமையாக இல்லாத இடத்தில் முழுமையான மகிழ்ச்சி ஏற்பட இயலாது.

கிருபானந்த வாரியார்தொகு

 • அன்பும் மரியாதையும் இருப்பவன் உலகத்தில் எதையும் சாதித்து விடுவான். தீமை செய்பவனும் அவனிடம் பணிவான்.
 • இதயத்திலிருந்து பிறக்கும் அன்பே பண்பு. மூளையிலிருந்து தோன்றும் கூற்றே அறிவு. அறிவை விட பண்பே உலகுக்குத் தேவை.

ராமகிருட்டிணர்தொகு

 • அன்பு அறிவில் இருந்தால் சத்தியம் பிறக்கும், அன்பு மனதில் இருந்தால் கருணை பிறக்கும், அன்பு உணர்வில் இருந்தால் காதல் பிறக்கும், அன்பு செயலில் இருந்தால் அஹிம்சை பிறக்கும், அன்பு கல்வியில் இருந்தால் தர்மம் பிறக்கும்.

வில்லியம்தொகு

 • மனிதர்கள் குறைகள் உள்ளவர்கள் தாம். அந்தப் பக்கத்தை மூடிவிட்டு அனைவரையும் நேசிக்க அன்பு என்ற கதவை மட்டும் திறந்து வையுங்கள். உங்கள் அன்பு உண்மையாக இருக்கும்போது உலகம் பிரகாசமாக இருக்கும்.

இயேசு கிறித்துதொகு

 • அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன். ஏனெனில் அன்பே கடவுள்.

முகமது நபிதொகு

 • அறிவு இறைவனின் உறைவிடத்தை நாடுகிறது. ஆனால் அன்புதான் இறைவனின் உறைவிடம்.

கதேதொகு

 • பிறருடைய அன்பில் ஆனந்தம் காணும்பொழுதுதான் ஒருவன் உண்மையாக வாழ்ந்தவனாவான்.
 • சமூகத்தை ஒன்றாகக் கட்டிச் சேர்த்து வைத்திருப்பது அன்பு எனும் பொற்சங்கிலி.

சுவாமி விவேகானந்தர்தொகு

 • வேதனையைத் தாங்கும் வல்லமை, செயலாற்றும் வல்லமையை விட மிகப் பெரியது; அன்பின் வல்லமை, வெறுப்பின் வல்லமையை விட மிகப் பெரியது.
 • அன்பு செய், உதவி செய், உன்னால் முடிந்ததை செய், ஆனால் நிபந்தனை ஏற்படுத்தாதே.
 • எல்லாப் பெருக்கமும் வாழ்வு; எல்லாச் சுருக்கமும் சாவு; அன்பு என்பது பெருக்கம்; சுயநலம் என்பது சுருக்கம்; எனவே அன்புடையவனே வாழ்பவன்; சுயநலமுடையவன் செத்துக் கொண்டிருக்கிறான்.
 • வஞ்சனையால் பெரும்பணி எதையும் சாதித்து விட முடியாது;அன்பாலும் உண்மையான ஆற்றலாலும் தான் அரும் பெரும் சாதனைகள் நிறைவேறுகின்றன.
 • அன்பிருக்கிறதா உங்களிடம்? உங்களால் ஆகாத காரியம் ஒன்றுமே இல்லை.

மார்க் ட்வைன்தொகு

 • செவிடரும் கேட்கக்கூடிய, பார்வையற்றோரும் படிக்கக் கூடிய மொழிதான் அன்பு.

செல்லிதொகு

 • சாதாரண செயல்கள் கூட அன்புடன் கலந்தால் அழகு பெறுகின்றன.

தாகூர்தொகு

 • உங்கள் அன்பை இரகசியமாக வைத்திருக்காதீர்கள்.

சாக்ரடீசுதொகு

 • மனிதர்களை எடை போட்டுக்கொண்டே இருந்தால் அவர்களை நேசிக்க நேரம் இருக்காது.

வில்லியம் சேக்சுபியர்தொகு

 • மாறுதல் கண்ட உடன் மாறிடும் அன்பு உண்மையிலேயே அன்பாகாது.[1]

நெப்போலியன் பொனபார்ட்தொகு

 • உண்மையான மனிதன் யாரையும் துவேஷிக்க மாட்டான்.[1]

செர்லாக் ஃகோம்ஸ்தொகு

 • ஒருவன் பணத்தால் நாயை வாங்கிவிட முடியும்; ஆனால் அன்பு ஒன்றினால்தான் அதன் வாலை ஆட்டி வைக்க முடியும்.

ஹென்ரிக் இப்சன்தொகு

 • அன்பு என்பதைப் போல, பொய்யும் புலையும் நிறைந்த மொழி, வேறு எதுவும் கிடையாது.[1]

ஜான் ரஸ்கின்தொகு

 • பெருந்தன்மையைக் காண்பதிலே, மற்றவர்களுக்கு அன்பு காட்டுவதிலே அதற்கேற்ப மன நெகிழ்வூட்டும் செயல்களைச் செய்து காட்டி மகிழ்ச்சி காண்பதே அன்பு என்ற கருணையின் அழகாகும்.[1]
 • அன்பும், நம்பிக்கையுமே ஓர் ஆன்மாவுக்குரிய தாய்ப்பால்.[1]
 • அன்பு முக்கியமாக வளர்வது ஒருவருக்கு ஒருவர் வழங்கிடும் ஈகை என்ற தத்துவ உணர்விலேதான்.[1]
 • சிறிது அன்பு குழந்தையிடம் காட்டினால் அது பன்மடங்கு திரும்பி தன் அன்பைக் கொட்டுகிறது.

பழமொழிகள்தொகு

 • எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால் அன்போடு பரிமாறுங்கள். -இங்கிலாந்து பழமொழி

மேற்கோள்கள்தொகு

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12. 

வெளியிணைப்புக்கள்தொகு

விக்சனரியில் இருக்கும் அன்பு என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அன்பு&oldid=15959" இருந்து மீள்விக்கப்பட்டது