வில்லியம் மேக்பீஸ் தாக்கரே
புதின எழுத்தாளர்
வில்லியம் மேக்பீஸ் தாக்கரே (18 சூலை 1811 - 24 டதிசம்பர் 1863) ஒரு பிரிட்த்தானிய புதின எழுத்தாளராவார்
மேற்கோள்கள்
தொகு- அன்புணர்ச்சி இருந்தால், சாதாரணச் செயல்களும் பெருமையுள்ளவைகளாக விளங்குகின்றன.[1]
- வாழ்க்கை ஆன்மாவின் பயிற்சிக்கூடம்: அதன் காலம் நித்தியமானது.[2]
- நம் மனத்தைக் கல்வியிடம் ஈடுபடுத்தற்கு ஆசிரியரிடம் இருக்க வேண்டிய இரண்டு முக்கிய சக்திகள் புதியதை அறிந்ததாகச் செய்வதும், அறிந்ததைப் புதியதாகச் செய்வதுமாகும்.[3]
- மனித சமூகம் எப்பொழுதுமே சார்ந்து வாழவே வேண்டியிருக்கிறது. இரக்கமும் தயவும் மற்ற குணங்களைவிட அதிகமாகத் தேவைப்படுகின்றன.[4]
- நன்றாகச் சிரித்தால் வீட்டில் ஒளி பரவும்.[5]
- சரியாய் மெச்சக் கற்றுக்கொள். வாழ்வின் பேரின்பம் அதுவே. பெரியோர் மெச்சுபவைகளைக்கவனி; அவர்கள் பெரிய விஷயங்களையே மெச்சுவர் தாழ்ந்தோரே இழிவான விஷயங்களை மெச்சவும் வணங்கவும் செய்வர்.[6]
- தெரிந்தவற்றைப் புதியனவாகவும் புதியனவற்றைத் தெரிந்தனவாகவும் செய்யக்கூடிய சக்தியே ஆசிரியனிடத்தில் நம்மை ஈடுபடுத்தும்.[7]
- இளமைதான். அல்நாஷரைப் போல, இன்பமயமான கனவுகள் காண ஏற்ற காலம்.[8]
- மேன்மைக்கு அடுத்தபடி அதைப் பாராட்டுதல் மேன்மையாகும்.[9]
- அநேகமாக எல்லாப் பெண்டிரும் புத்திசாலிகளான கடின இதயமுள்ள மனிதர்களும் நாவலை விரும்புகிறார்கள். நீதிபதிகள், பிஷப்புகள், அமைச்சர்கள், கணித நிபுணர்கள் ஆகியோர்கள் நாவல் படிப்பதில் பிரசித்தமானவர்கள். சிறு பையன்களும் இனிய பெண்களும், அவர்களுடைய அன்பும் அருமையுள்ள தாய்மார்களும் அவைகளைப் படிக்கிறார்கள்.[10]
- வறுமை என்பது அஞ்சியவரை அடிக்கவரும் போக்கிரியாகும். ஆனால் அஞ்சாமல் எதிர்த்து நின்றால் அது நல்ல குணமுடையதே.[11]
குறிப்புகள்
தொகு- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 78-81. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 96-97. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 180. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 183-184. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்றியறிதல். நூல் 82- 84. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூலியற்றல். நூல் 174-176. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 83-84. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 264-265. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 230-231. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வறுமை. நூல் 107- 108. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.