பாராட்டுதல்

பாராட்டுதல் என்பது வாழ்த்துதல், ஊக்குவிதலின் வெளிப்பாடாகும்.

  • மேன்மைக்கு அடுத்தபடி அதைப் பாராட்டுதல் மேன்மையாகும். -தாக்கரே[1]
  • எந்த மனிதரையும் நாம் குறைவாக மதிப்பிடக்கூடாது. தொழிலாளி தன் முன்னிலையில் தன் வேலையைக் குறைவாகப் பேசுவதை விரும்பமாட்டான். - டி. ஸேல்ஸ்[1]
  • மற்றவர்களுடைய நற்செயல்களைப்பற்றிச் சிந்திப்பதில் மகிழ்ச்சியடையாதவன் எவ்வித நற்செயலையும் செய்ய முடியாது. -லவேட்டர்[1]
  • பாராட்டு உன்னதமான உள்ளங்களை மேலும் ஊக்குவிக்கும்: பலவீனமானவர்கள் பாராட்டோடு திருப்தியடைந்துவிடுவார்கள். - கோல்டன்[1]
  • பாராட்டுவதில் தாமதம் செய்தல் அன்புக் குறைவையும். பொறாமை உணர்ச்சியையும் காட்டும். - எச். மோர்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 264-265. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பாராட்டுதல்&oldid=32226" இலிருந்து மீள்விக்கப்பட்டது