புதினம்
புதினம் அல்லது நாவல் என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஒரு இலக்கிய வடிவம் ஆகும். சிறுகதையைப்போன்று அல்லாமல் இது நீண்டதாக இருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- நவீனங்களும், புதுமைக் கதைகளும் எழுதுவதற்குக் காகிதம் பேனா, மை ஆகியவற்றுடன், அவைகளை உபயோகிக்கும் உடல் வலிமையும் தவிர, வேறு எதுவும் தேவையில்லை. -ஃபீல்டிங்[1]
- நாவல்கள் இனிமையாயிருக்கின்றன. நல்ல இலக்கிய ருசியுள்ள எல்லா மக்களும் அவைகளை விரும்புகிறார்கள்.[1]
- அநேகமாக எல்லாப் பெண்டிரும் புத்திசாலிகளான கடின இதயமுள்ள மனிதர்களும் நாவலை விரும்புகிறார்கள். நீதிபதிகள், பிஷப்புகள், அமைச்சர்கள், கணித நிபுணர்கள் ஆகியோர்கள் நாவல் படிப்பதில் பிரசித்தமானவர்கள். சிறு பையன்களும் இனிய பெண்களும், அவர்களுடைய அன்பும் அருமையுள்ள தாய்மார்களும் அவைகளைப் படிக்கிறார்கள். -தாக்கரே[1]
- மனித இயற்கையின் பெருமையைக் காப்பதற்கும் உயர்த்துவதற்கும் கொஞ்சம் புதுமையான கதை கேடொன்றும் செய்துவிடாது. அது இல்லாவிடில், மனித இயற்கை இழிவான தீமையான, தாழ்ந்த விஷயங்களில் இறங்கிவிடக்கூடும். -ஸ்விஃபட்[1]
- நாம் இன்புறவும். பொழுது போக்கவும் புத்தகங்கள் வேண்டும் அதே போல, அறிவு பெறவும், தொழில் செய்யவும் புத்தகங்கள் வேண்டும். முதலாவது புத்தகங்கள். விரும்பிப் படிக்கக்கூடியவை. பின்னவை. பயனுள்ளவை, மனித உள்ளத்திற்கு இரண்டு வகையுமே தேவை -பால்ஜாக்[1]
- எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுடைய மகன் புதுமைக் கதையான ஒரு நாவலைத் தீண்டிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். -கோல்டுஸ்மித்[1]
- இப்பொழுது வெளிவரும் நவீனங்களுள் முக்கால் பகுதி அறிவை நலிவுறச்செய்து கற்பனையைக் குன்றச் செய்து உருசியையும் நடையையும் கொச்சையாக்கிவிடுகின்றன. வாழ்க்கையையும் மனித இயற்கையையும்பற்றி உண்மைக்கு மாறான கருத்துகளை அளிக்கின்றன; எல்லாவற்றிற்கும் மேலாக, அறிவு வளர்ச்சிக்குரிய அருமையான நேரத்தை வீணாக்குகின்றன. -ஜி. லெட்டர்ஸ்[1]
- சிறந்த முறையில் அமைந்த நாவல், நாகரிகத்தை வளர்ப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட உயர்ந்த கருவிகளுள் ஒன்றாகும். -ஸர். ஜே. ஹெர்ஸ்செல்[1]
- நாவல்கள் தங்கள் வாசகர்களைப் பாவம் செய்யத் தூண்டுவதில்லை. ஆனால், எப்படிச் செய்யவேண்டும் என்பதை மட்டும் அவர்களுக்குக் கற்பிக்கின்றன. -ஸிம்மர்மன்[1]