ஹென்றி பீல்டிங்

ஆங்கில புதின எழுத்தாளர், நடக எழுத்தாளர்

ஹென்றி பீல்டிங் (Henry Fielding, 22 ஏப்ரல் 1707 - 8 அக்டோபர் 1754) ஒரு ஆங்கில புதின ஆசிரியரும், நடக ஆசிரிரயரும் ஆவார்.

ஹென்றி பீல்டிங்

மேற்கோள்கள்தொகு

அமிதம்தொகு

 • அதிக வறுமைப்பட்டவரும், அதிகச் செல்வமுடையவரும் நியாயத்தைச் சொன்னால் கேட்க மாட்டார்கள்.[1]

அறம்தொகு

 • பணக்காரனாயிருந்து தர்மம் செய்யாதவன் அயோக்கியன், அவன் மூடன் என்பதையும் எளிதில் நிரூபித்துவிடலாம்.[2]

இன்னல்தொகு

 • தத்துவத்திற்காக நடக்கும் பரீட்சையே இன்னல், அது இல்லாவிட்டால், ஒரு மனிதன் தான் நேர்மையாளனா அல்லனா என்பதைத் தெரிந்து கொள்ள இயலாமற்போகும். [3]

ஈகைதொகு

 • ஈகையில்லாத செல்வன் ஒரு போக்கிரி. அவன் மூடன் என்பதையும் நிரூபிப்பது எளிதாயிருக்கும்.[4]

தூக்கம்தொகு

 • நடுநிசிக்கு முன்பு ஒரு மணி நேர உறக்கம். பின்னால் இரண்டு மணி நேரம் உறங்குவதற்கு ஈடாகும்.[5]

நம்பிக்கை இழத்தல்தொகு

 • இந்த உலகின் எதிர்பாராத நிகழ்ச்சிகளைக் கருதி, மனிதர்கள் எந்த நிலையிலும் நம்பிக்கையை முழுதும் இழக்க வேண்டியதில்லை என்று நாம் கற்பிக்கப்பெற வேண்டும்.[6]

பகுத்தறிவுதொகு

 • அதிக வறுமையும், அதிகச் செல்வமும் ஆராய்ச்சி அறிவுக்குச் செவி கொடுக்கமாட்டா.[7]

பழக்கம்தொகு

 • 'பிளேக்' நோய் ஒட்டுவாரொட்டியாகப் பக்கத்தில் வருபவர்களையும் எப்படிப் பாதிக்கின்றதோ, அதே போல், கெட்ட பழக்கங்கள் முன்மாதிரிகளாயிருந்த மற்றவர்களையும் பற்றிக் கொள்கின்றன.[8]

புதினம்தொகு

 • நவீனங்களும், புதுமைக் கதைகளும் எழுதுவதற்குக் காகிதம் பேனா, மை ஆகியவற்றுடன், அவைகளை உபயோகிக்கும் உடல் வலிமையும் தவிர, வேறு எதுவும் தேவையில்லை.[9]

முகத்துதிதொகு

 • முட்டாளை அறிஞன் என்றும், பொய்யனை யோக்கியன் என்றும் துதித்து விட்டால் அப்புறம் அவன் உன் அடிமையே ஆகிவிடுவான்.[10]

குறிப்புகள்தொகு

விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 38-39. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 62-65. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 115. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 116. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 132. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 229. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 248-249. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 8. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 260-262. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 9. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 230-231. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 10. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/முகஸ்துதி. நூல் 92- 95. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஹென்றி_பீல்டிங்&oldid=30466" இருந்து மீள்விக்கப்பட்டது