பழக்கம்
பழக்கம் என்பது குறித்த தேற்கோள்கள்
- ஓடைகள் ஆறுகளாவது போலவும், ஆறுகள் கடல்களில் பாய்வது போலவும். எல்லாப் பழக்கங்களும் கண்ணுக்குத் தெரியாமல் சிறிது சிறிதாக ஒன்றாய்ச் சேர்ந்துவிடுகின்றன. - டிரைடன்[1]
- அறிவிலி ஒருவன் ஒரே கதையை நாள்தோறும். ஆண்டு முழுவதும். உன்னிடம் சொல்லிவந்தால், நீ அதையும் நம்பி விடுவாய். -பர்க்[1]
- நல்ல செயல்களைச் செய்து பழக்கமாகும் பொழுது. அவை எளிதாக விளங்குகின்றன. அவை எளிதாயிருக்கும் பொழுது. நாம் அவைகளில் மகிழ்ச்சியடைகிறோம். அவைகளை அடிக்கடி செய்கிறோம்; திரும்பத்திரும்பச் செய்வதால், அவை ஒரு பழக்கமாகிவிடுகின்றன. - -டில்லோட்ஸன்[1]
- பழக்கத்தின் சங்கிலிகள் பொதுவாக அவை இருப்பதாகவே உணர முடியாதபடி அவ்வளவு சிறியவையாய் இருக்கும். அவை வலிமை பெற்று உடைக்க முடியாதபடி இறுகும்வரை. நாம் அவைகளை உணர்வதில்லை. -ஜான்ஸன்[1]
- பழக்கத்தைத் தடுக்காவிடில், அது விரைவில் அவசியமாகி விடும். -அகஸ்டைன்[1]
- நாம் அனைவரும் பழக்கத்தின் அடிமையாயிருக்கிறோம். -ஃபான்டெயின்[1]
- உலகத்தின் சுதந்தரத்திற்காக உயிரைத் தியாகம் செய்ய மனிதர்கள் முன்வருவார்கள். ஆனால், தங்களுடைய பழக்கங்களாகிய அடிமைத் தளைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள அவர்கள் சிறு தியாகங்கூடச் செய்யமாட்டார்கள் என்பது ஆச்சரியமல்லவா? -புருஸ் பார்ட்டன்[1]
- மனிதன் பலவீனம் துயரம் எல்லாவற்றிற்கும் எப்பொழுதும் காரணமாயிருப்பது பலவீனமான சிந்தனைப் பழக்கமே. - ஹொரேஸ் ஃபிளெச்சர்[1]
- 'பிளேக்' நோய் ஒட்டுவாரொட்டியாகப் பக்கத்தில் வருபவர்களையும் எப்படிப் பாதிக்கின்றதோ, அதே போல், கெட்ட பழக்கங்கள் முன்மாதிரிகளாயிருந்த மற்றவர்களையும் பற்றிக் கொள்கின்றன. - பீல்டிங்[1]
- பழக்கம் இயற்கையைவிடப் பத்து மடங்கு அதிகம். - வெல்லிங்டன்[1]
- உணர்வுகள் கல்லாக இறுகிப் பழக்கங்களாகின்றன. - எல். இ. லாண்டன்[1]
- ஒரு செயலை விதைத்தால், பழக்கத்தை அறுவடை செய்யலாம். பழக்கத்தை விதைத்தால், ஒரு குணத்தை அறுவடை செய்யலாம். குணத்தை விதைத்தால் வாழ்வின் இறுதி இலட்சியத்தை அறுவடை செய்யலாம்.[1]
- நெடுநாள். வழக்கங்களை உடைப்பது எளிதன்று தன் வாழ்க்கையின் போக்கை மாற்றிக்கொள்ள ஒருவன் முயற்சி செய்தால், அது வீண் வேலையாகும். -ஜான்ஸன்[1]