பகுத்தறிவு

பகுத்தறிவு எனப்படுவது பொருட்களின் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து ஆதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே.

மேற்கோள்கள்

தொகு
  • மனிதன் பகுத்தறிவைக்காட்டிலும், துடிப்பு, உணர்ச்சி. வேகம், செயல் ஆகியவற்றால் அதிகமாக உந்தப்பெறுகிறான். உயிருள்ள இனங்களில் உலகத்தில் பகுத்தறிவு மிகவும் கடைசியாகத்தான் வேலை செய்யத் தொடங்கியிருக்கிறது. அவைகளுள் பெரும்பாலானவை அதன் உதவியில்லாமலே தினசரி வாழ்க்கையில் நன்றாகவே இருக்கின்றன. -ஜேம்ஸ் டி ஆடம்ஸ்[1]
  • ஆராயாமல் ஒரு மனிதன் பற்றிக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை அவனை விட்டுவிடும்படி செய்ய முயலுதல் பயனற்ற வேலையாகும். - ஸ்விங்ஃப்ட்[1]
  • ஆராய்ச்சி செய்ய மறுப்பவன், வெறியன் ஆராய்ச்சி செய்ய முடியாதவன். மூடன்; ஆராய்ச்சி செய்ய அஞ்சுபவன் அடிமை. -ஸர் டபுள்யு. டிரம்பண்ட்[1]
  • தெளிவான, போதுமான ஆராய்ச்சியறிவு சிலருக்குத்தான் இருக்கிறது. இந்தச் சிலர் அமைதியாய் இருந்துகொண்டு தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி வருகிறார்கள். - கதே[1]
  • அதிக வறுமையும், அதிகச் செல்வமும் ஆராய்ச்சி அறிவுக்குச் செவி கொடுக்கமாட்டா. - பீல்டிங்[1]
  • அறிவாளர்களுக்குப் பகுத்தறிவு கற்பிக்கின்றது. குறைந்த அறிவுள்ளவர்களுக்கு அனுபவம் கற்பிக்கின்றது. மிருகங்களுக்கு இயற்கை கற்பிக்கின்றது. -ஸிஸரோ[1]
  • உணர்ச்சிகளாலன்றிப் பகுத்தறிவால் உந்தப்பெறுபவன் தேவர்களுக்கு அடுத்தபடியாயுள்ளவன்.[1]
  • எல்லைக்குட்பட்டது. எல்லையேயில்லாததை எப்படிக் கண்டு பிடித்துக்கொள்ள முடியும்? - டிரைடன்[1]
  • நாம் இருக்கிறதைக் கொண்டுதான் ஆராய முடியும் பிரத்தியட்ச உண்மைகளையே நாம் ஆராய முடியும், நடக்கக் கூடியவைகளைக் கொண்டு ஆராய முடியாது. -போலிங்புரோக்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 248-249. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பகுத்தறிவு&oldid=22024" இலிருந்து மீள்விக்கப்பட்டது