அமிதம் என்பது மிதமற்று கூடுதலாகவோ குறைவாகவோ உள்ள நிலை.

மேற்கோள்கள்

தொகு
  • அமிதமான கருத்துகள் நியாயமாயிருப்பதில்லை. - டாங்க்ரெட்[1]
  • ஒவ்வொரு விஷயத்திலும் நடுவான நிலை ஒன்றுண்டு. நல்ல பண்புக்குக்கூட எல்லைகளுண்டு. அவைகளைத் தாண்டிச் செல்வது பண்பாகாது. - ஹொரேஸ்[1]
  • அமிதமானவை. ஒன்றுக்கொன்று மாறுபட்டிருந்தாலும் பயனில் ஒன்றுபோலிருக்கின்றன. அமித உஷ்ணம் மான முண்டாக்குகின்றது. அது போலவேதான் அதிகக் குளிர்ச்சியும். அமிதமான காதல் தெவிட்டிவிடுகின்றது. அதுபோலவே தான் அதிகமான வெறுப்பும். அளவுக்கதிகமான கட்டுப்பாடு கற்புக்கே சோதனையாகின்றது. அது போலவேதான் விருப்பம்போல் திரிவதும். - சாப்மென்[1]
  • எல்லாவற்றையும் நல்லனவாகவும். எல்லாவற்றையும் தீயனவாகவும் பார்க்கும் மனிதரை நம்ப வேண்டாம் எதையும் இலட்சியம் செய்யாமலிருப்பவனைச் சிறிதும் நம்பவே வேண்டாம். - லாவேட்டர்[1]
  • மிகப்பெரிய வெள்ளமும் விரைவிலே வடிந்துவிடுகின்றது. மிகவும் கோரமான புயலும் திடீரென்று அமைதியாகி விடுகின்றது. அளவற்ற அன்பும் அவிந்து அடங்குவதில்முடிகின்றது. மிகவும் ஆழ்ந்த ஆசையும் அளவற்ற துவேஷமாக மாறுகின்றது. - சாக்ரடிஸ்[1]
  • அதிக வறுமைப்பட்டவரும், அதிகச் செல்வமுடையவரும் நியாயத்தைச் சொன்னால் கேட்க மாட்டார்கள். -ஃபீல்டிங்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 38-39. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அமிதம்&oldid=19290" இலிருந்து மீள்விக்கப்பட்டது