தூக்கம்

தூக்கம், உறக்கம் அல்லது நித்திரை (sleep) என்பது மனிதர்களும் விலங்குகளும் ஓய்வு கொள்ளும் ஒரு இயல்பான நிலை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, ஈருடக உயிரினங்கள், மீன்கள் என பல தரப்பட்ட உயிரினங்களின் தொடர்ந்த இயக்கத்துக்கு நித்திரை உயிர்வாழுவதற்கு அவசியமாகும். பொதுவாக உயிரினங்கள் படுத்து, கண்களை மூடி துயில் கொள்ளும்.

Fliegergriff01.jpg
தூங்கும் பனி மந்தி

மேற்கோள்கள்தொகு

 • கடின உழைப்பும், லேசான மனமும் , எதையும் எதிர்கொள்ளும் துணிவும் உள்ளவர்களுக்குத் தூக்கம் எட்டாக்கனி அல்ல; கிட்டா மருந்தல்ல.- கி. வீரமணி[2]
 • தூக்கம் நம்மை குளுமைப்படுத்தும் ஒரு மாமருந்து; புத்துணர்ச்சியைத் தரும் ஊக்க மருந்து.[2]
 • உறக்கம் நல்லுடலுக்கு அறிகுறி. அதன் குலைவு நோயுடலுக்கு அறிகுறி. பகல் விழிப்பும் இரவில் உறக்கமும் வாழ்க்கைக்குத் தேவை. முகத்தை மூடி உறங்குதல் கூடாது.- திரு. வி. கலியாணசுந்தரனார்[3]
 • குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டுவதால் குழந்தை தூங்குவது உண்மைதான். ஆனால், அதற்குக் காரணம் நல்ல தூக்கம் ஏற்பட்டதால் அல்ல. மனம் மயக்கமும் சோம்பலும் அடைவதால் குழந்தை தூங்க ஆரம்பிக்கிறது. தொட்டிவில் இட்டு ஆட்டுவதால் குழந்தையின் மூளையும் ரத்த ஒட்டமும் பாதிக்கப்படுகிறது. இதை வெளிநாடுகளுக்குச் சென்று சுற்றுப் பயணம் செய்து வந்ததின் முடிவில் நான் உணர்ந்து கொண்டேன்.—மேதி நவாஸ் ஜங் (குஜராத் முன்னாள் ஆளுநர்) (18 - 3 - 1963)[4]
 • பகல் முழுவதும் வீணாக அலைந்து திரிந்தபின், உறக்கம் மறுநாள் காலைக்காக நம்மை ஓய்வெடுக்கச் செய்கின்றது. - யங்[5]
 • நடுநிசிக்கு முன்பு ஒரு மணி நேர உறக்கம். பின்னால் இரண்டு மணி நேரம் உறங்குவதற்கு ஈடாகும். - ஃபீல்டிங்[5]
 • துயில்தான் நமது வளர்ப்புத்தாய். - ஷேக்ஸ்பியர்[5]
 • களைப்பு கல்லின் மேலும் குறட்டை விடும். அமைதியில்லாத சோம்பலுக்குத் தண்டனையும் உறுத்தும். - ஷேக்ஸ்பியர்[5]
 • உறக்கமே! வீடற்றவர்களுக்கு நீதான் வீடு; நண்பரற்றவர்கள் உன்னையே நண்பனாகக் கொள்கின்றனர். - இ. எலியட்[5]
 • வேதனைக்கு எளிதான மருந்து தூக்கம். அது மரணத்தைப் போல எல்லாவற்றையும் செய்யும், ஆனால், கொல்லாது - டோன்[5]
 • ஓய்வு எவ்வளவு இன்பமான விஷயம் கட்டிலே எனக்குச் சொகுசாக உள்ளது. உலகிலுள்ள மகுடங்கள் எல்லாம் கிடைப்பதாயினும், இதை அவைகளுக்கு ஈடாகக் கொடுக்க மாட்டேன். -நெப்போலியன்[5]
 • முன்னதாகப் படுத்து. முன்னதாக எழுந்தால், மனிதனுக்கு உடல் நலமும், செல்வமும் அறிவும் பெருகும். - ஃபிராங்க்லின்[5]

பழமொழிகள்தொகு

 • தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை; காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை. - ஆப்கானிசுதான் பழமொழி

சான்றுகள்தொகு

 1. தி இந்து 2016 சூன் 27
 2. 2.0 2.1 பகுத்தறிவாளர் நாட்குறிப்பு 2013 ஒவ்வொரு நாளினுடைய தலைப்பு பகுதியிலும் உள்ளது
 3. புலவர் ஆயை. மு. காசாமைதீன் (1984). திருவிக. சென்னை: தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம். pp. 112- 118. 
 4. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 132. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=தூக்கம்&oldid=20551" இருந்து மீள்விக்கப்பட்டது