டென்சின் கியாட்சோ
14வது தலாய் லாமா
ஜெட்சுன் ஜம்பேல் ஙவாங் லொப்சாங் யெஷெ டென்சின் கியாட்சோ (திபெத்திய மொழி: Jetsun Jamphel Ngawang Lobsang Yeshe Tenzin Gyatso/ བསྟན་འཛིན་རྒྱ་མཚོ་, பிறப்பு லாமோ தொங்ருப் (Lhamo Döndrub/ལྷ་མོ་དོན་འགྲུབ, ஜூலை 6, 1935) திபெத்தின் 14 தலாய் லாமா ஆவார். இவர் திபெத் மக்களின் ஆன்மீக அரசியல் தலைவர் ஆவார். இவர் உலக அரங்கில் ஒரு முக்கிய தலைவராகவும் பார்க்கப்படுகிறார்.
மேற்கோள்கள்
தொகு- திபெத் முழுவதையும் அமைதி மண்டலமாக அறிவிக்க வேண்டும்.[1]
- நேர்மறையான நடவடிக்கையை செயல்படுத்துவதற்கு, நேர்மறையான பார்வையை உருவாக்க வேண்டும்.
- எப்போதெல்லாம் சாத்தியமாகிறதோ அப்போதெல்லாம் அன்பாக இருங்கள். இது எப்போதும் சாத்தியமாகும்.
- சகிப்புத்தன்மையை கற்றுக்கொடுப்பதில் நடைமுறையில், ஒருவருடைய எதிரியே சிறந்த ஆசிரியராக இருக்கின்றார்.
- நீங்கள் ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது நம்பிக்கை சார்ந்தவராக இருந்தால், நல்லது. ஆனால், அது இல்லாமலும் உங்களால் வாழமுடியும்.
- கருத்து வேறுபாடு என்பது ஒரு சாதாரணமான விஷயம்.
- மதம் மற்றும் தியானம் இல்லாமல் நம்மால் வாழமுடியும்; ஆனால், மனித நேசம் இல்லாமல் நம்மால் வாழமுடியாது.
- நாம் நம்மிடம் அமைதியை ஏற்படுத்தாதவரை, நம்மால் வெளி உலகில் ஒருபோதும் அமைதியைப் பெறமுடியாது.
- தூக்கம் என்பது மிகச்சிறந்த தியானம் ஆகும்.
- மகிழ்ச்சி என்பது ஏற்கெனவே தயாராக இருக்கும் விஷயமல்ல; அது உங்கள் சொந்த நடவடிக்கைகளில் இருந்து வருவது.
- அறியாமை நமக்கு ஆசானாக இருக்கும் இடத்தில், உண்மையான அமைதிக்கான சாத்தியம் இல்லை.
- இந்த வாழ்க்கையில் நமது முதன்மையான நோக்கம், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே. உங்களால் உதவ முடியவில்லை என்றால், குறைந்தது புண்படுத்தாமலாவது இருங்கள்.
- கோயில்களுக்கு அவசியமில்லை, சிக்கலான தத்துவம் தேவையில்லை; நமது சொந்த அறிவு மற்றும் இதயமே நமது கோயில், கருணையே தத்துவம். இதுவே எனது எளிய மதம்.
- நமது வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதே.
- அன்பு மற்றும் கருணை ஆகியவை ஆடம்பரமானவை அல்ல, அவசியமானவை. இவையில்லாமல் மனிதநேயம் தொடர்ந்து வாழமுடியாது.[2]
சான்றுகள்
தொகு- ↑ 1987, செப்டெம்பர் 21 அன்று வாசிங்டன் நகரின் கெபிடல் ஹில்லியில் நடந்த மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துகொண்ட போது கூறியது.
- ↑ தி இந்து 2016 சூன் 27