எட்வர்ட் யங்
ஆங்கிலக் கவிஞர்
எட்வர்ட் யங் (Edward Young, 3, சூலை 1683 - 5, ஏப்ரல் 1765) என்பவர் ஒரு ஆங்கில கவிஞர், விமர்சகர், மெய்யியலாளர் மற்றும் இறையியலாளர் ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- மாந்தர் மூடராக வாழலாம், ஆனால் மூடராக இறக்க முடியாது.[1]
- பணிவுள்ள அன்புதான் சுவர்க்க வாயிலைக் காத்து நிற்கின்றது: செருக்குள்ள விஞ்ஞான அறிவன்று.[2]
- ஆடம்பரத்தின் மென்மையான மெத்தையின்மீதுதான் பெரும்பாலான இராஜ்யங்கள் மாய்ந்தொழிந்தன.[3]
- தங்கத்தின் சுமையைத் தாங்க முடியாமல் முனகுபவன் ரொட்டிக்காக அழுகிறான்.[4]
- இறைவனுக்குப் பகைவனானவன் ஒருகாலும் மனிதனுக்கு நண்பனாக இருந்ததில்லை.[5]
- வாழக் கற்பிப்பவன் மரிக்கவும் கற்பிக்கக் கடவன்.[6]
- வயது முதிர்ந்து நடக்க வேண்டியதைச் செய்து முடிக்கும்படி. நமது உலகத்தில், மரணம் மது வெறியை அனுப்பியிருக்கின்றது.[7]
- சரியான நம்பிக்கை இகத்திலிருந்து பரத்துக்குப் பாலம் அமைக்கும்.[8]
- செல்வம் இன்பம் தராது; சீதேவி அருள அருளச் சிந்தை அதிகமாக ஆசைப் பட்டுக்கொண்டே இருக்கும்.[9]
- அதிகமாய்ப் படித்திருந்தால், அநித்தியமான மனிதர்கள் எவ்வளவு அற்ப அறிவு பெற்றிருக்கிறார்கள் என்பது தெரியும். அதிகச் செல்வமிருந்தால், உலகப் பற்றுடைய மக்கள் எவ்வளவுதான் அனுபவிக்க முடியும் என்பது தெரியும்.[10]
- பகல் முழுவதும் வீணாக அலைந்து திரிந்தபின், உறக்கம் மறுநாள் காலைக்காக நம்மை ஓய்வெடுக்கச் செய்கின்றது.[11]
- எவ்வளவுதான் மறைத்து வைத்தாலும் எல்லோருடைய நெஞ்சிலும் புகழ் ஆசை எப்பொழுதும் ஆட்சிசெய்து கொண்டேதான் இருக்கிறது.[12]
- மனிதனுடைய தேவைகள் சுருக்கம். அவையும் அதிக நாள் தேவையில்லை. இயற்கை அவனுக்கு ஒரு மணி நேரம் அளித்துள்ள உடலைக்கூட அவன் மண்ணிலே சேர்த்துவிட வேண்டியிருக்கின்றது.[13]
- மரணம் வாழ்வின் சிகரம்: மரணம் இல்லையென்றால், வாழ்வது வாழ்வாகாது. மூடர்கள்கூடச் சாகவே விரும்புவர்.[13]
- முன்பு உயிரோடில்லாதிருந்த மண் எங்கேயிருக்கின்றது? மண் வெட்டியும் கலப்பையும் மண்ணிலுள்ள நம் முன்னோர்களையே கிளப்புகின்றன. மனிதர்களின் பூநதுகளிலிருந்தே நாம் அன்றாட உணவைப் பெறுகிறோம்.[14]
- தெளிவான சாதாரணப் பொது அறிவே வாழ்க்கையில் செல்லுபடியாகும் நாணயமாகும்.[15]
குறிப்புகள்
தொகு- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவீனம். நூல் 61- 63. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 78-81. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 86-87. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 128. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 112-114. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 317. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கொள்கை நம்பிக்கை. நூல் 78- 80. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 194-197. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 132. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/முகஸ்துதி. நூல் 92- 95. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ 13.0 13.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 24-25. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 278. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 286-287. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.