ஆடம்பரம் (Luxury) குறித்த மேற்கோள்கள்

  • ஆடம்பரத்தின் மென்மையான மெத்தையின்மீதுதான் பெரும்பாலான இராஜ்யங்கள் மாய்ந்தொழிந்தன - யங் [1]
  • ரோஜா மலர்களின்மீது படுத்துறங்குவோன், கழிவிரக்கம் கொண்டு மனம் இரங்கும்போது முட்களின்மீது அமர்ந்திருப்பான். - குவாலெஸ்[1]
  • யுத்தம் மனிதர்களை அழிக்கின்றது. ஆனால், சொகுசான வாழ்க்கை மனித சமூகத்தையே அழிக்கின்றது. உடல்களையும் உள்ளங்களையும் அரித்துவிடுகின்றன. -கிரெளன்[1]
  • நம்முடைய ஆடம்பர வாழ்க்கையால் ஏழைகளுக்குத் (தொழில் மூலம்) உணவு கிடைக்கலாம். ஆனால், அந்த ஆடம்பரம் இல்லாதிருந்தால், ஏழைகளே இருக்க மாட்டார்கள். - ஹோம்[1]
  • ரோம் மக்களுக்கு ஏராளமான செல்வங்களையும் கேளிக்கைகளையும் அளித்தவனே முதன் முதலாக அவர்களுடைய அழிவுக்குக் காரணமானவன் என்று எவரோ சொல்லியிருக்கிறார். அவர் யாராயிருந்தாலும், அவருடைய கூற்று உண்மையானது. - புளுடார்க்[1]
  • ஆடம்பரங்கள் ஒழுக்கங்களைக் கெடுத்துவிடுகின்றன அல்லது அரசாங்கத்தை அழித்துவிடுகின்றன. -ஜோபெர்ட்[1]
  • பேராசையும் சொகுசும் பெருமை மிக்க அரசாங்கம் ஒவ்வொன்றையும் அழிக்கும் தொற்று நோய்கள். -லிவி[1]
  • சொகுசு மனிதனை மென்மையாக்கிவிடுகின்றது. அவனைத் திருப்தி செய்வது கஷ்டம் எதுவும் அவனுக்குத் தொந்தரவாகத் தோன்றும் அவனுடைய இன்பங்களே இறுதியில் அவனுக்குப் பாரமாகின்றன. -மெகின்ஸி[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 86-87. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆடம்பரம்&oldid=19810" இலிருந்து மீள்விக்கப்பட்டது