குடிப்பழக்கம்

மது தொடர்பான பிரச்சனைகளுக்கான விரிவான சொல்

குடிப்பழக்கம் என்பது மது குடிக்கும் பழக்கமாகும். இது குறித மேற்கோள்கள்

  • குடிகாரனாயிருப்பவன் எல்லாத் தீய நடைகளுக்கும் தகுதியானவன். - குவார்லெல்[1]
  • வயது முதிர்ந்து நடக்க வேண்டியதைச் செய்து முடிக்கும்படி. நமது உலகத்தில், மரணம் மது வெறியை அனுப்பியிருக்கின்றது - யங்[1]
  • எதுவும் மிதமிஞ்சினால் தீது, ஆனால், குடிவெறி எல்லாவற்றிலும் தீது - பென்[1]
  • குடிவெறியைப் போல், எல்லாப் படைகளும் சேர்ந்து மனித சங்கத்தினருள் அத்தனை பேர்களை அழித்ததில்லை; அத்தனை சொத்துகளைப் பாழாக்கியதில்லை. - பேக்கன் [1]
  • மதுவும் இளமையும் நெருப்பின் மேல் நெருப்பாகும். - ஃபீல்டிங் [1]
  • திராட்சை ரசம் கையை நடுங்கச்செய்யும். கண்ணில் நீர் வரச் செய்யும், இரவில் அமைதிக்குறைவை உண்டாக்கும். கெட்ட கனவுகளைத் தோற்றுவிக்கும், காலையில் மூச்சுக் காற்றை நாறச் செய்யும். எல்லா விஷயங்களையும் அறவே மறக்கவும் செய்யும் -பளினி[1]
  • கடலில் மூழ்கியவர்களைக்காட்டிலும் மதுவில் மூழ்கியவர்கள அதிகம். - பப்ளியஸ் ஸைரஸ்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 317. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=குடிப்பழக்கம்&oldid=36330" இலிருந்து மீள்விக்கப்பட்டது