சிரிப்பு (Laughter) என்பது மனிதனோடு கூடப்பிறந்த ஒரு உணர்வின் வெளிப்பாடு. இது ஒரு ஆரோக்கியமான மனிதனிடமிருந்து பல விதமான சந்தர்ப்பங்களிலும் இயல்பாக வெளிப்படக்கூடிய ஒன்று.

ஒரு பெண்ணின் சிரிப்பு

மேற்கோள்கள்

தொகு
  • எதைக் குறித்து நாம் நகைக்கிறோமோ, அதைத் தவிர வேறெதுவும் நம்முடைய இயல்பைத் தெளிவாகக் காட்டமுடியாது. -கதே[1]
  • அதிகமான சிரிப்பு அறிவு சூன்யத்தையே காட்டும். -கோல்ட்ஸ்மித்[1]
  • உரக்கச் சிரித்தல். உள்ளத்தின் வெறுமையைக் காட்டும். -கோல்டுஸ்மித்[2]
  • எத்தனை விஷயங்கள் சிரிப்பில் அடங்கியுள! நெஞ்சைத் திறந்து அறிவதற்கேற்ற திறவுகோல் அதுவே. நகைக்க முடியாதவன் துரோகம், தந்திரம், திருட்டு முதலியன செய்யத் தகுந்தவன். -கார்லைல்[1]
  • வீணாக்கிய நாட்களுள் அதிகமாக வீணாக்கிய நாட்கள் நகையாத நாட்களே. -ஷாம்பர்ட்[1]
  • ஆண்டுக்குப் பதினாயிரம் தரும் ஆஸ்தியைவிட அல்லும் பகலும் சந்தோஷமாயிருக்கும் இயல்பு கிடைத்தால் போதும். -ஜோஸப் ஹ்யூம்[1]
  • மகிழ்ச்சி பொங்கும் முகத்துடையவர் வந்தால் போதும், உடனே வீட்டில் புதியதோர் ஜோதி உதயமாகி விடும். - ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்[1]
  • உன் நோக்கத்தை வாளால் சாதித்துக் கொள்வதைவிட நகை முகத்தால் சாதித்துக் கொள்வதே சாலச் சிறந்த தாகும்.-ஷேக்ஸ்பியர்[1]
  • அறிவுடையோர் சிரித்தற் கஞ்சார். - மார்ஷியல்[1]
  • சிரிப்பே மனிதனை மற்றப் பிராணிகளினின்றும் வேறுபடத்திக்காட்டும் செயலாகும். -அடிஸன்[1]
  • மூடன் அதிகமாகச் சிரிப்பான்; வஞ்சகன் சிரிக்கவே செய்யான். -புல்லர்[1]
  • சான்றோர் புன்னகையைக் காணலாம். சிரிப்பைக் கேட்க முடியாது. -செஸ்டர்பீல்டு[1]
  • நகையாடுபவன் அநேகமாக எல்லாவற்றையும் நகையாடற்குரிய விஷயமாகக் கருதுவான். ஆனால் அறிஞனோ எதையும் அவ்விதம் கருத மாட்டான். -கதே[1]
  • நகைக்கப்படக் கூடிய குறை எதுவுமில்லாதவன் அன்பு செய்யப்படக் கூடியவனாகான். -ஹேர்[1]
  • அதிகமாக நகையாதே. ரஸிகன் மிகவும் குறைவாகவே நகைப்பான். -ஹெர்பர்ட்[1]
  • சிரிப்பு ஆரோக்கியத்தை வளர்க்கத் தலைசிறந்ததாகும். அது ஜீரண சக்தியை அளிக்கின்றது. முற்காலத்தில் நம் முன்னோர்கள் விருந்துண்ணும் பொழுது. விகடகவிகளைப் பேசச்செய்து வந்ததன் காரணம் சிரிப்பினால் ஜீரண சக்தி அதிகமாகும் என்பதே. - ஹயூஃப்லண்ட்[2]
  • நீ அறிவாளியாயிருந்தால் சரி. - மார்ஷியல்[2]
  • ஒரு முறைகூடச் சிரிக்காமல் கழிந்த நாளே வீணாகக் கழிந்த நாளாகும். - சாம்ஃபோர்ட்[2]
  • நன்றாகச் சிரித்தால் வீட்டில் ஒளி பரவும். -தாக்கரே[2]

குறிப்புகள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிரிப்பு. நூல் 96- 98. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 183-184. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சிரிப்பு&oldid=21360" இலிருந்து மீள்விக்கப்பட்டது