செய்ந்நன்றி
செய்ந்நன்றி (Gratitude) எனப்படுவது ஒருவர் தனக்கு செய்த உதவியை மறவாமல் இருக்கும் ஒரு சிறந்த பண்பாகும்.
மேற்கோள்கள்
தொகு- கடவுள் இன்று உங்களுக்கு 86,400 விநாடிகளைப் பரிசாக வழங்கியுள்ளார். இதில் ஒரு விநாடியை நன்றி சொல்ல பயன்படுத்தினீர்களா? - வில்லியம் ஆர்தர் வார்டு
- ஆண்டவனுக்கு இரண்டு உறைவிடங்கள் உண்டு. ஒன்று சொர்க்கம்; மற்றொன்று நன்றியுள்ள மனிதனின் இதயம். - ஐசக் வால்டன்
- நன்மை செய்தவர்க்கு நன்மை செய்யாதிருப்பது மனித குணத்திற்கு விரோதம். நன்மை செய்தவர்க்குத் தீமை செய்வது பேய்க் குணமாகும். -ஸெனீக்கா[1]
- நன்றி செய்தாயா-அதைப்பற்றிப் பேசற்க. நன்றி பெற்றாயா- அதைப்பற்றிப் பேசுக. -ஸெனீக்கா[1]
- நான் நன்றியோடு இருக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணினால், அவ்வாறே இருப்பேன் -ஸெனீகா[2]
- செய்நன்றி செலுத்த அதிகமாய் ஆத்திரப்படுவதும் செய்நன்றியைக் கொலை செய்வதில் ஒருவகையாகும். -ரோஷிவக்கல்டு[1]
- பெற்ற நன்றியை மறப்பவனும், பிறரிடம் மறைப்பவனும், கைம்மாறு செய்யாதவனும் செய்நன்றி கொல்லும் பாதகர்கள் இவர்களில் பெரிய பாதகன் நன்றியை மறப்பவன். - ஸிஸரோ[1]
- நன்றியறியாமையில் சகல இழிதகைமைகளும் அடங்கும். இதர துர்க் குணங்களோடன்றி அது ஒரு பொழுதும் தனியாகக் காணப்படுவதுமில்லை. - புல்லர்[1]
- நன்றியறியாமை ஒருவித பலவீனமே. பல முடையவர் நன்றியறியாதிருக்க நான் பார்த்ததில்லை. - கதே[1]
- நன்றியறிதலைப் போன்ற இன்பகரமான மனோதர்மம் வேறொன்றுமில்லை. இதர அறங்களை அனுஷ்டிப்பதில் கஷ்டம் உண்டு. இதிலோ அணுவளவு கஷ்டமும் கிடையாது. -அடிஸன்[1]
- நண்பர்களின் உதவியை நாம் மிகைப்படுத்திக் கூறுவதற்குக் காரணம் நம்முடைய நன்றியறிவுடைமையன்று. நம்முடைய தகுதியைப் பிறர்க்கு அறிவிக்க வேண்டுமென்ற ஆசையேயாகும். -ரோஷிவக்கல்டு[1]
- சரியாய் மெச்சக் கற்றுக்கொள். வாழ்வின் பேரின்பம் அதுவே. பெரியோர் மெச்சுபவைகளைக்கவனி; அவர்கள் பெரிய விஷயங்களையே மெச்சுவர் தாழ்ந்தோரே இழிவான விஷயங்களை மெச்சவும் வணங்கவும் செய்வர். -தாக்கரே[1]
- வீசு, குளிர்காற்றே! வீசு. மனிதனுடைய நன்றியறியாமைப் போல நீ அவ்வளவு அன்பற்றவன் அல்ல; உன் மூச்சு சீறினாலும் உன் பற்கள் கூரியதாயில்லை. -ஷேக்ஸ்பியர்[1]
- ஆண்ட்வனே எனக்கு உயிர் அளித்ததுபோல், நன்றி நிறைந்த இதயத்தையும் அளிப்பாயாக. -ஷேக்ஸ்பியர்[2]
- நன்றியறிதல் என்பது அதிக கவனமாய் உண்டாக்க வேண்டிய பயிராகும். அதைக் கீழோரிடைக் காண முடியாது. -ஜான்சன்[1]
- என்னுடைய அகவாழ்வும், புறவாழ்வும் என்னுடைய இனத்தாரின் இறந்தவரும், இருப்பவரும் உழைப்பினலேயே ஆக்கப்பட்டிருக்கின்றன என்பதை நான் நாள்தோறும் உணர்கிறேன். பிறர் உழைப்பால் நான் எவ்வளவு நன்மையைப் பெற்றாேனோ, அத்துணை நன்மையை நான் பிறருக்குச் செய்ய எவ்வளவு உழைக்க வேண்டும். - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்[3]
- நன்றி என்பது கடவுள் அருளிய நன்மையின் நினைவு மட்டும் அன்று இதயம்கலந்த வணக்கமும் ஆகும். - என். பி. வில்லிஸ்[2]
- உன்னதமான இதயங்களில் நன்றியறிதல் ஒரு பெரிய உண்ர்ச்சியின் ஆர்வத்தைக் கொண்டிருக்கும். - பாயின்ஸலாட்[2]
- புரம்பொருளைப்பற்றிய நன்றியுள்ள கருத்து, தானே.ஒரு பிரார்த்தனையாகும். -லெஸ்னிஸின்[2]
- நன்றியறிதலை மிகச்சிறந்த பண்பாகப் போற்றுகிறார்கள். ஆனால், செயலில் அதை விட்டுவிடுகிறார்கள். பேச்சுக்கு அது அணி, உண்மை வாழ்க்கைக்கு அது அவதூறாகத் தோன்றுகிறது - ஃபோர்னே[2]
பழமொழிகள்
தொகு- உப்பிட்டவரை உள்ளளவும் நினை. - தமிழ் பழமொழி
- நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். அவன் துரோகம் செய்யமாட்டான். - ஸ்பெயின் பழமொழி
- நன்றியறிதல் அறங்களில் குறைந்தது. நன்றியறியாமை மறங்களில் கொடியது.[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்றியறிதல். நூல் 82- 84. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 232. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.