நல்லதும் கெட்டதும்

சமயம், நன்னெறி, மெய்யியல், உளவியல் ஆகியவற்றில் நல்லதும் கெட்டதும் அல்லது நன்மையும் தீயதும் (good and evil) என்பது மிகவும் பொதுவான இருபிரிவு ஆகும்.

பல சமயங்களில் தேவதூதர் நல்லதாகவும், சாத்தான் கெட்டதாகவும் கருதப்படுகிறது.
யூத-கிறித்தவ பாரம்பரியம் மிக்கேல் வானதூதர் தீய சக்திக்கெதிராக போராடுபவராக சித்தரிக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  • 'நன்மை, தீமை'- நம் அறியாமையால் எழும் இரு பெயர்கள்.
    நம் மனத்திற்கு உகந்ததை நன்மை என்கிறோம், பிறர் மனத்திற்கு உகந்ததைத் தீமை என்கிறோம்.
    'தீமை' - நமக்குத் தீங்கிழைப்பது. 'நன்மை' அநேகமாய்ப் பிறர்க்குத் தீங்கிழைப்பது. - பால் ரிச்சர்டு[1]
  • நேர் வழியில் அடைய முடியாததை ஒருநாளும் நேரல்லாத வழியில் அடைந்துவிட முடியாது. -கதே[1]
  • அற்ப விஷயங்கள் மனத்தைக் கலக்கினால் அதிரிஷ்டசாலி என்று அர்த்தம். துரதிர்ஷ்ட காலத்தில் அற்ப விஷயங்கள் உணர்ச்சிக்கு எட்டுவதில்லை. -ஷோப்பனார்[1]
  • எப்பொழுதும் நமது சூரிய ஒளியில் ஒரு கறுப்புப் புள்ளி உண்டு, நமது நிழலே அது. -கார்லைல்[1]
  • ஐயோ பேயை அடக்குவதினும் எழுப்புவது எளிது. -காரிக்[1]
  • நன்மை தீமையினின்று பிறவாவிடினும் அது தீமையை எதிர்ப்பதிலேயே அடையக்கூடிய அபிவிருத்தி அனைத்தை யும் அடையும். -ரஸ்கின்[1]
  • செல்வர், வறிஞர் காரியத்தில் சிரத்தைகாட்டும் பொழுது, அது தர்மம் எனப்படும்.
    வறிஞர், செல்வர் காரியத்தில் சிரத்தை காட்டும் பொழுது, அது ஒழுங்கீனம் எனப்படும். -பால் ரிச்சர்டு[1]
  • தண்டனை பெறுவதைவிட வெகுமதி பெறுவது இழிவில் குறைந்தது அன்று.
    உன் நற்செய்கைகளுக்காக உனக்கு வெகுமதி அளிப்பார் என்று நீ எதிர்பார்க்கும் பொழுது, அவைகளுக்காகச் சாத்தான் உன்னைத் தண்டிக்கக் கூடும் என்பதை மறவாதே. ஆயினும் நற்செய்கைகளையே செய்வாயாக.
    அநேக ஜனங்கள் நன்மை செய்வதை விட்டுத் தீமை செய்வதன் காரணம், கடவுள் தண்டித்தாலும் தண்டிக்கட்டும், சாத்தான் தண்டனையை மட்டும் தாங்க முடியாதென்று கருதுவதே என்பதற்குச் சந்தேகமில்லை. -பால் ரிச்சர்டு[1]
  • ஒளி நிறைந்த இடத்தில் நிழல் இருண்டிருக்கும். -கதே[1]
  • தந்திரமும் ஏமாற்றமும் அறநெறி நிற்கப் போதுமான அறிவில்லாத மூடர் செயல். -பிராங்க்லின்[1]
  • அதைரியப்படாதே. ஒன்று தான் அச்சம் அளிப்பது: பாபமே அது. -லெயிண்ட் கிறிஸாஸ்டம்[1]
  • தீமை செய்வதினும் தீமை பெறுதலே நலம். -ஸிஸரோ[1]
  • ரோஜா முள்ளின்றி மலர்வதில்லை, உண்மையே. ஆனால் மலர் இறக்க முள் இருக்கலாகாதன்றோ? -ரிக்டர்[1]
  • அநேக சந்தர்ப்பங்களில் நாம் தீமை யென்று கூறுவது, தவறியோ அல்லது மிதமிஞ்சியோ ஏற்பட்ட நன்மையாகும். மனோதைரியம் மிதமிஞ்சினால் மடமையாகும். பட்சம் மிதமிஞ்சினால் பலவீனமாகும். சிக்கனம் மிதமிஞ்சினால் லோபமாகும். - ஆவ்பரி[1]
  • மனிதர் தற்சமய நிலைமையில் காணும் தீமைகளுக்காக வருந்தும்பொழுது, வேண்டுமென்று விரும்பும் நிலையில் ஏற்படக்கூடிய தீமைகளைப்பற்றிச் சிறிதும் சிந்திப்பதில்லை. -பிராங்க்லின்[1]
  • கசப்பான பண்டங்களால் சுவை ஊறப்படுவது போலவே, அதிகப்படியான இனிப்புப் பண்டங்களால் திகட்டலும், குமட்டலும் ஏற்படுகிறது. அது போலவே மனிதர்கள் நன்மைகளால் அலுப்பும் திமைகளால் ஆத்திரமும் அடைகிறார்கள். -நிக்கோலோ மாக்கியவெல்லி[2]
  • எந்த மனிதனும் எப்பொழுதும் நல்லவனாகவோ அல்லது எப்பொழுதும் தீயவனாகவோ இருக்க முடியாது. அவன் தன் தேவைக்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றபடி நல்லவனாகவோ தீயவனாகவோ மாறிக் கொண்டால்தான் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த முடியும். -நிக்கோலோ மாக்கியவெல்லி[2]
  • தீய சக்திகளை நேரிடையாக எதிர்த்தால் அவற்றின் பலம் அதிகரித்து விடும். சமயத்திற்கேற்றபடி நடந்து தான் அவற்றைச் சாய்க்க வேண்டும். -நிக்கோலோ மாக்கியவெல்லி[2]

குறிப்புகள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்மை-தீமை. நூல் 50- 52. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. 2.0 2.1 2.2 2.3 நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நல்லதும்_கெட்டதும்&oldid=20276" இலிருந்து மீள்விக்கப்பட்டது