தியாகம் அல்லது ஈகம் என்பது பிறருக்காக தன் நலன்களை விட்டுக் கொடுத்தல் ஆகும்.

கிருட்டிணகிரி மாவட்டம், பெண்ணேஸ்வர மடம் என்ற ஊரில் தன் உடலை நவகண்டம் கொடுக்கும் ஒரு தியாகியின் நடுகல்

மேற்கோள்கள்

தொகு
  • மனிதன் இறப்பதற்குத் தகுந்த இடம் மனிதனுக்காக இறக்கு மிடமே. -எம். ஜே. பாரி[1]
  • முள் தைக்கா வண்ணம் ரோஜா பறிப்பது எப்படி? -பில்பே[1]
  •  நல்ல காரியங்களுக்காகக் கஷ்டப்பட வேண்டியிருக்கும் பொழுதுதான் அவை அதிகப் பிரியமானவை ஆகின்றன. -வாவனார்கூஸ்[1]
  • நெருப்பு வழிச் செல்பவன் புகைக்கு அஞ்ச மாட்டான். -டெனிஸன்[1]
  •  திராட்சைக் கொடி கனி தருவதாக எண்ணாமல் கனி தந்துகொண்டிருப்பதுபோல், தியாகம் செய்வதாக எண்ணாமல் தியாகம் செய்வதே மனிதனுடைய உண்மையான இயல்பாகும். -மார்க்க ஒளரேலியன்[1]
  • தன்னைப் பிறர்க்காகத் தியாகம் செய்தல் சகல சமயங்களுக்கும் அழியாத அஸ்திவாரம்- அது ஒன்றே சாஸ்வதமான உண்மையறம். -மாஜினி[1]
  • இலட்சியம் சீக்கிரமாகப் பழுத்துப் பயன் தருவது, தியாகம் செய்வோருடைய இரத்தம் பாய்ந்து போஷிக்கப்படும் பொழுதுதான். -மாஜினி[1]
  • உங்களில் தலைவனாக இருக்க விரும்புபவன் உங்களுக்கு ஊழியனாக இருக்கக் கடவன். -கிறிஸ்து[1]
  • தன்னை ஒடுக்கும் தியாகம்- இதுவே இறைவன் மனிதனுக்கு அருளியுள்ள தலை சிறந்த ஞானமாகும். -கார்லைல்[1]
  • பெரிய விஷயங்களில் தியாகம் செய்தல் எளிது, சிறிய விஷயங்களில் தியாகம் செய்வதே கடினமாகும். -கதே[1]
  •  எவ்வித தியாகமுமின்றி எவ்வித நன்மையும் பெற முடியாது. -ஹெல்ப்ஸ்[1]
  • என்னைப் பொறுத்த வரையில், என்னிடமிருந்த அளவு, என்னால் முடிந்த வரையில், சுதந்திரப் போராட்டத்தில் தியாகம் செய்தேன். என் தியாகம் பெரிதாக இல்லாமல் இருக்கலாம். என்னிடம் இருந்ததும், என்னல் முடிந்ததும் அவ்வளவுதான். அதைச் செய்துவிட்டேன்.- இராஜாஜி[2]

குறிப்புகள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/தியாகம். நூல் 149-150. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தியாகம்&oldid=18354" இலிருந்து மீள்விக்கப்பட்டது