ஆல்பிரட் டென்னிசன்
ஆல்பிரடு டென்னிசன், 1ம் டென்னிசன் பிரபு (Alfred Tennyson, 1st Baron Tennyson, 6 ஆகத்து 1809 – 6 அக்டோபர் 1892) இங்கிலாந்தின் அரசவைக் கவிஞர்களில் ஒருவராவார். இவர் 1850 முதல் 1892 இல் இறக்கும் வரை விக்டோரியா மகாராணியின் அரசவையில் அரசவைக் கவிஞராக இருந்தார். இன்றளவும் செல்வாக்கு மிக்க கவிஞராக மதிக்கப்படுகிறார்.[1]
மேற்கோள்கள்
தொகு- நாளுக்கு நாள் ஏற்றம் பெற்றுவரும் லட்சியம் ஒன்று ஊழிகளை ஊடுருவி ஓடுகின்றதென்பதும், வருஷங்கள் ஆக ஆக மனிதர் கருத்துக்களும் விரிவடைகின்றன என்பதும் மெய்.[2]
- உண்மையாளர்க்கு உதவியின் மதிப்பு உதவுவார் மதிப்பளவே யாகும்.[3]
- ஏளனம் என்பது சிறியோர் இதயத்தில் எழுகின்ற நச்சுப்புகையாகும்.[4]
- கொள்கையைக் கூறுவதில் காணப்படும் நம்பிக்கையைவிட அதிகமான நம்பிக்கை, கொள்கையைக் குறித்து சந்தேகம் கூறுவதில் காணப்படும்.[5]
- நெருப்பு வழிச் செல்பவன் புகைக்கு அஞ்ச மாட்டான்.[6]
- ஒரு மணி நேரம்கூட நாம் ஒருவர்க்கொருவர் அன்பாயிருக்க முடியவில்லை. சகோதரன் தவறு கண்டால் அதைப் பிறரிடம் ஊதுகிறோம், சாடை காட்டுகிறோம், நகைக்கிறோம், இளிக்கிறோம்-எவ்வளவுதான் நாம் நம் பெருமையைத் தூக்கி நிறுத்தினாலும் நாம் மனிதர்கள் ஒரு அற்பமான ஜாதியே.[7]
குறிப்புகள்
தொகு
- ↑ "Ten of the greatest: British poets". Mail on Sunday. Retrieved 6 November 2012
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இலட்சியம். நூல் 46- 50. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/உபகாரம். நூல் 146-148. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல். நூல் 71- 73. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கொள்கை நம்பிக்கை. நூல் 78- 80. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/தியாகம். நூல் 149-150. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பழி. நூல் 95- 96. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.