உதவி
உதவி செய்தல் அல்லது உதவுதல் (Help) என்பது ஒரு சிறந்த பண்பாகும்.
மேற்கோள்கள்
தொகு- தலைசிறந்த செயல்கள் எவை? ஒரு மனிதப் பிறவியின் மனத்தில் மகிழ்ச்சி ஊட்டுவது; நலிந்தோர்க்கு உதவுவது; வேதனைப் படுவோரின் வேதனையை தணிப்பது; புன்பட்டோருக்கு செய்ப்பட்ட அநீதிகளைக் களைவது. - லபல்
- யாருடைய கை வாங்குவதற்கு நீள்கிறதோ அவன் மிக தாழ்ந்தவன்; யாருடைய கை கொடுப்பதற்கு நீள்கிறதோ அவன் மிக உயர்ந்தவன். - சுவாமி விவேகானந்தர்
- அன்பு செய், உதவி செய், உன்னால் முடிந்ததை செய், ஆனால் நிபந்தனை ஏற்படுத்தாதே. - சுவாமி விவேகானந்தர்
- நான் எல்லா உதவிகளுக்கும் என்னையே நம்புகிறேன். - கவிஞர் வர்ஜில்
- உதவி செய்யும் உள்ளம் உள்ளவனுக்குத் தான் குற்றம் சொல்ல உரிமையுண்டு. - ஆபிரகாம் லிங்கன்
- நண்பர்கள் இருப்பது நல்லது. ஆனால் அவர்களின் உதவியை நாடுவது நல்லதல்ல. - பெர்னார்ட்ஷா
- பிறர் உன் விளக்கை உபயோகித்துக் கொள்ளட்டும்; அதிலுள்ள நெய்யை கொடுத்துவிட மட்டும் சம்மதியாதே. - மேட்டர்லிங்க்
- துன்பத்தைக் கண்டு இரங்குதல் மனித இயல்பு; அதை நீக்குதல் தெய்வீகம். - சிட்னி
- உடனே கொடுத்தவன் இரு மடங்கு கொடுத்தவன் ஆகிறான். - சைரஸ்
- துருப்பிடித்து அழிவதை விட தேய்ந்து அழிவது சிறந்தது. - ரிச்சர்ட் கம்பர்டேன்ட்
- மனிதர்கள் தங்கள் ஆற்றலைப் பயன்படுத்தாமல் பிறர் உதவியை எதிர்பார்த்து நிற்கிறார்கள். - மாண்டெயின்
- உபகாரம் செய்வதற்கு செலவு ஒன்றுமில்லை. ஆனால் அதைக் கொடுத்து அனைத்தும் வாங்கலாம். -மாண்டேகு
- நீ ஒருவனிடத்தில் உதவியாகப் பெறக்கூடியதை எக்காரணத்தை முன்னிட்டும் உரிமையாகக் கேட்காதே. - ஜே.சி.காலின்ஸ்
- தீங்கு செய்யும் வாய்ப்பு நாளுக்கு நூறு முறை வரும்; நன்மை செய்யும் வாய்ப்பு ஆண்டு ஒரு முறை தான் வரும். - வால்டேர்
- வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது, அது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும். - தந்தை பெரியார்
- "உதவி செய்க" என்பதே உலகின் உயர்ந்த ஆதி விதி. அதுவே வாழ்வுக்கு மறுபெயர். மரணத்துக்கு மறுபெயர் "பிரிந்திரு" என்பதே. -ரஸ்கின்[1]
- விளக்கு ஏற்றுவது விளக்குக்கு வெளிச்சம் தருவதற்காக வன்று. அதுபோல் ஆண்டவன் அருளிய நம் நற்குணங்கள் பிறர்க்கு நன்மை தராவிடில் இருந்தும் இல்லாதனபோல் தான். ஷேக்ஸ்பியர்[1]
- கீழே கிடப்பவனை மேலே தூக்கிவிட்டால் போதாது. பின்னும் அவனுக்கு உதவி செய்ய வேண்டும். - ஷேக்ஸ்பியர்[2]
- பிறர் பாரத்தைத் தாங்கிக் கைகொடுத்தால் நம் பாரம் கனம் குறையும். -ஆவ்பரி[1]
- உபகாரமானது செய்த சேவையில் அடங்காது. செய்தவனுடைய நோக்கத்திலேயே அடங்கும். ஸெனீக்கா[1]
- உண்மையாளர்க்கு உதவியின் மதிப்பு உதவுவார் மதிப்பளவே யாகும். டெனிஸன்[1]
- பிறர் செய்த உபகாரம் அதிகமாக உன் கையில் தங்கவிடாமல் பார்த்துக்கொள், ஜாக்கிரதை. எமர்ஸன்[1]
- நம் விளக்கை ஏற்ற பிறன் விளக்குக்குச் செல்லுதல் நலமே. ஆனால் நம் விளக்கை ஏற்றாமல் அவன் விளக்கருகே அதிக நேரம் தாமதித்தல் நலமேயன்று. ப்ளுட்டார்க்[1]
- பெறுபவன் மதிக்குமளவே பெறுகின்ற உதவியின் மதிப்பாகும். பப்ளியஸ் ஸைரஸ்[1]
- கெட்டவன் கொடை நன்மை கொடுப்பதில்லை. யுரிப்பிடீஸ்[1]
- பிறர் உன் விளக்கை உபயோகித்துக் கொள்ளட்டும். ஆனால் உன் விளக்கு சிறிதேயாயினும் அதிலுள்ள நெய்யைக் கொடுத்துவிட மட்டும் சம்மதிக்காதே. மேட்டர்லிங்க்[1]
- அதிகமாக நேசிப்பவன் அதிகமாக உதவி செய்பவன். அக்கம்பிஸ்[1]
- உனக்கு நீயே உதவி செய்து கொள். ஒவ்வொருவரும் உனக்கு உதவி செய்வார்கள்! -நிக்கோலோ மாக்கியவெல்லி[3]
- உலகில் ஒருவன் நிலை தாழ்ந்திருந்தால், அவனுக்கு ஓர் உபதேசம் அளிப்பதைவிட ஒரு பலம் உதவி செய்வது மேலாகும். -புல்வெர்[2]
- உனக்கு நீயே உதவிக்கொண்டால், கடவுளும் உனக்கு உதவி செய்வார்.[2]
பழமொழிகள்
தொகு- மணிக்கணக்கில் போதனை செய்வதை விட ஒரு கணப்பொழுது உதவி புரிதலே நலம். - சீனப் பழமொழி
குறிப்புகள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/உபகாரம். நூல் 146-148. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ 2.0 2.1 2.2 2.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 122-123. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.