வோல்ட்டேர்

(வால்டேர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வோல்ட்டேர், ஒரு பிரெஞ்சு அறிவொளி இயக்க எழுத்தாளரும், கட்டுரையாளரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் சிறந்த எழுத்தாளர். இவரது ஆக்கங்கள், நாடகம், கவிதை, புதினம், கட்டுரை, வரலாற்று ஆக்கங்கள், அறிவியல் ஆக்கங்கள் என்பன உள்ளிட்ட பல விதமான இலக்கிய வடிவங்களிலும் காணப்படுகின்றன.

மனிதர்கள் பிறக்கும்போது ஓநாய்களாக பிறப்பது இல்லை. ஆனால் ஓநாய்களாக மாறிவிடுகிறார்கள்.

மேற்கோள்கள்

தொகு
  • நடப்பது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கொடுக்கப்பட்ட வரம்.[1]
  • மனிதர்கள் பிறக்கும்போது ஓநாய்களாக பிறப்பது இல்லை. ஆனால் ஓநாய்களாக மாறிவிடுகிறார்கள்.[2]
  • ஒரு ஆறு மக்கள் வசிக்கும் வழியாக போயே தீரும்.[3]
  • ஒருவரின் மனசாட்சிக்கு எதிராக எதுவும் செய்யாமல் இருப்பதே பாதுகாப்பான ஒன்று.
  • துயரத்தின் அமைதி மொழியே கண்ணீர்.
  • நான் எங்கு செல்கிறேன் என்று எனக்குத் தெரியாது ஆனால், நான் என் வழியில் செல்கிறேன்.
  • மென்மையான இதயங்களுக்காக உருவாக்கப்பட்டது சொர்கம்; அன்பற்ற இதயங்களுக்காக உருவாக்கப்பட்டது நரகம்.
  • மனித இனத்திற்கு முதன்மைவாய்ந்த ஒன்று சகிப்புத்தன்மை.
  • அநீதி இறுதியில் சுதந்திரத்தை உருவாக்குகிறது.
  • ஒருவரை அவரது பதில்களைவிட அவரது கேள்விகளிலிருந்து மதிப்பீடு செய்யுங்கள்.
  • கல்வியறிவை விட இயற்கை எப்போதும் மிகுதியான ஆற்றலைக் கொண்டதாக இருக்கிறது.
  • உண்மையை நேசி, ஆனால் பிழையை மன்னித்துவிடு.
  • வரலாறு என்பது குற்றங்கள் மற்றும் துரதிர்ஷ்டங்களைக் கொண்ட பதிவேடு மட்டுமே.
  • மனிதர்கள் வாதிடுகிறார்கள் இயற்கை செயல்படுகிறது.
  • மிதமான செயல்பாடுகளின் வழியாகவே பூர்ணத்துவத்தை அடைய முடிகிறது.
  • பாராட்டு என்பது ஒரு அற்புதமான விசயம்.
  • ஆண்களின் தர்க்கமெல்லாம் பெண்களின் ஒரு உணர்வுக்கு இணையாகாது.[4]
  • மருந்தைவிட உணவு வகை மேலானது. ஒவ்வொருவனும் தானே தனக்கு மருத்துவனாயிருக்க வேண்டும். இயற்கைக்கு நாம் உதவியாக இருக்க வேண்டுமேயன்றி அதைக் கட்டாயப்படுத்தக்கூடாது. உன் உடலுக்கு எது ஒத்து வருகிறது என்று அனுபவத்தில் தெரிந்துள்ளாயோ அதை அளவோடு உண்ண வேண்டும். நம் உடல் சீரணித்துக் கொள்ளக் கூடியதைத் தவிர வேறு எதுவும் நல்லதன்று. ஜீரண சக்தி அளிப்பது எது? உடற்பயிற்சி. உடலுக்கு வலிமையளிப்பது எது? உறக்கம். தீராத தீமைகளையும் குறைப்பது எது? பொறுமை.[5]
  • உண்மையை நேசி. ஆனால், பிழையை மன்னித்து விடு.[6]
  • உழைப்பு மூன்று பெருந்தீமைகளை நம்மிடமிருந்து நீக்குகின்றது. தொந்தரவு, தீயொழுக்கம், தரித்திரம்.[7]
  • சமயக் கட்சிகள் பலதிறப்பட்டவை. ஏனெனில். அவை மனிதர்களிடமிருந்து தோன்றியவை ஒழுக்க நெறி எங்கும் ஒரே தன்மையுள்ளது. ஏனெனில். அது ஆண்டவனிடமிருந்து வந்தது. [8]

இறைவன் இருக்கவில்லையானால், அவனை உண்டாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம்.[9]

  • மானிட வர்க்கத்தின் அபிப்பிராயம் பற்றிய வரலாறு என்பது மக்களுடைய தவறுகளின் வரலாறேயாகும்.[10]
  • கருத்துகள் தாடிகள் (வளர்வது) போன்றது. வளர்ந்து பருவமடையும்வரை மனிதர்களுக்கு அவை முளைக்கமாட்டா.[11]
  • குற்றத்தைத் தொடர்ந்து அச்சம் வரும். அதுவே தண்டனையாகும்.[12]
  • தன் விருப்பத்தைத் தவிர வேறு சட்டத்தை அறியாத அரசன் கொடுங்கோலன்.[13]
  • வாழும் முறையைக் கற்பிக்கும் வித்தையே தத்துவ ஞானத்தின் இரண்டு முக்கிய லட்சியங்கள் ஆகும்.[14]
  • ஒருவன் யாரிடம் பேசுகின்றானோ அவனுக்குப் பொருள் விளங்காமலும், பேசுகின்ற தனக்குப் பொருள் விளங்காமலும் இருந்தால், பேசுவது தத்துவ சாஸ்திரமாகும். [14]
  • உண்மையானதைக் கண்டுபிடிப்பதும். நன்மையானதைச் செய்வதும் தத்துவ ஞானத்தின் முக்கியமான இரண்டு நோக்கங்கள். - வால்டேர்[15]
  • முறையான உணவும், பழக்கங்களும் மருந்தைவிட மேலானவை. ஒவ்வொருவரும் தமக்குத் தாமே மருத்து வராயிருக்க வேண்டும். நாம் இயற்கைக்கு உதவி செய்ய வேண்டுமே தவிர, அதைக் கட்டாயப்படுத்தக்கூடாது. உங்கள் உடல்நிலைக்கு ஒத்துவரக்கூடிய உணவுகளை நிதானமாக உண்ணவும். நாம் சீரணித்துக்கொள்ள முடியாதது எதுவும் உடலுக்கு நல்லதன்று. ஜீரண சக்தியை அளிக்கக்கூடியது எது? உடற்பயிற்சி, வலிமையளிப்பது எது? உறக்கம். தீர்க்க முடியாத நோய்களையும் குறைக்கக்கூடியது எது? பொறுமை.[16]
  • நிறைவுடைமை படிப்படியாக நீண்ட காலத்தில் அமைவது.[17]
  • நீதியைப்பற்றிய உணர்ச்சி உலகில் மனிதசமூகம் முழுமைக்கும் பொதுவாக விளங்கும் அளவுக்கு இயற்கையாக உள்ளது. அது எல்லாச் சட்டங்களையும். எல்லாக் கட்சிகளையும், எல்லாச், சமயங்களையும் கடந்து நிற்பதாகத் தோன்றுகின்றது.[18]
  • ஆசிரியர்கள் உயிரோடிருக்கும் பொழுது அவர்களை ஏளனம் செய்து கண்டிப்பார்கள் இறந்த பிறகு புகழ்வார்கள்.[19]
  • விரைவிலே புகழ் பெற்றுவிட்டவன் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்வது பெரிய பாரந்தான்.[20]
  • ஆடவர்களின் ஆராய்ச்சி அறிவுகள் எல்லாம் பெண்களின் ஓர் உணர்ச்சிக்கு ஈடாக மாட்டா.[21]
  • நம் கருத்துகளை மறைத்துக்கொள்ளவும் சொற்கள் பயன்படுகின்றன.[22]
  • இரண்டு கட்சிகளிலும் பலவீனம் இருப்பது எல்லாச் சண்டைகளிலும் இயற்கைதான்.[23]

சான்றுகள்

தொகு
  1. கேண்டீட் பக்கம்-13
  2. கேண்டீட் பக்கம்-22
  3. கேண்டீட் பக்கம்-76
  4. தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23 பக்கம் 14
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 120. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை. நூல் 23- 29. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 128-129. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  8. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 141. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  9. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 112-114. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  10. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 33-37. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  11. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; கருத்துகள் என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  12. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 164. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  13. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 166. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  14. 14.0 14.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/தத்துவ ஞானம். நூல் 42- 44. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  15. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 204-205. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  16. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 88-90. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  17. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 238. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  18. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 239-241. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  19. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 243-244. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  20. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 271-273. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  21. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 278-281. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  22. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 306-307. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  23. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 314. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.

புற இணைப்புகள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=வோல்ட்டேர்&oldid=36043" இலிருந்து மீள்விக்கப்பட்டது