உணவு
தாவரங்கள் அல்லது விலங்குகளிலிருந்து கிடைப்பது
உணவு (Food) என்பது ஒர் உயிரினத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக உண்ணப்படும் எந்தவொரு பொருளையும் குறிக்கும்
- உணவு முறைகள் பெரிதும்கவனிக்கற்பாலன. முதலாவது, வேளை நாழியின்றிச் சாப்பிடுவதை நிறுத்தல் நல்லது. பசித் தோற்றம் இல்லாதபோது எக்காரணம்பற்றியும் உணவு கொள்ளளாகாது. -திரு. வி. கலியாணசுந்தரனார்[1]
- மீதூண் கொள்வது அறியாமை. நோய்க்கும் அகால மரணத்துக்கும் அடிகோல்வது மீதூணாகும். முன்னே உண்டது செரிப்பதற்குள், மேலே உண்டு சுமை சுமத்திக் கொண்டிருத்தல், ஈரலுக்குச் சவலை ஏற்படுத்தும்; பின்னே மற்றப் பேருறுப்புகட்குக் கேடு நிகழும். அதனால், பிணியும் அகால மரணமும் நேரும். -திரு. வி. கலியாணசுந்தரனார்[1]
- சாப்பாடு உயிர் வாழ்வதற்கு அவசியந்தான். ஆனால் வாழ்க்கை வேறு; உயிர் வாழ்தல் வேறு. வாழ்க்கை ஓர் அநுபவம். சிலர் உலகம் முழுவதையுமே சாப்பாட்டு கடையாக மதித்து விடுகிறார்கள். -புதுமைப்பித்தன்[2]
- சுவையுள்ள முறையில் மக்கள் சமைக்கத் தெரிந்திருப்பதால், இயற்கையான தேவைக்கு மேல் அவர்கள் இருமடங்கு அதிகமாக உண்கின்றனர். - ஃபிராங்லின்[3]
- சாதாரண எளிய உணவுதான் தலைசிறந்தது. அதிக உணவு வகைகள் அதிக நோய்களைக் கொண்டுவருகின்றன. -பிளினி[3]
- சிங்கத்திற்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு போதும், மனிதனுக்கும் அந்த அளவே போதும். - ஜி. ஃபார்டைஸ்[3]
- உடலைத் திடமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் உபவாசத்தையும். நடையையும் மேற்கொள்ளவும்: ஆன்மாவைத் திடமாக வைத்துக்கொள்ள உபவாசத்தையும் பிரார்த்தனையையும் மேற்கொள்ளவும். நடை உடலுக்குப் பயிற்சியளிக்கும். பிரார்த்தனை. ஆன்மாவுக்குப் பழிற்சியளிக்கும்; உபவாசம். இரண்டையும் சுத்தமாக்கும். - குவார்லேஸ்[3]
- மருந்தைவிட உணவு வகை மேலானது. ஒவ்வொருவனும் தானே தனக்கு மருத்துவனாயிருக்க வேண்டும். இயற்கைக்கு நாம் உதவியாக இருக்க வேண்டுமேயன்றி அதைக் கட்டாயப்படுத்தக்கூடாது. உன் உடலுக்கு எது ஒத்து வருகிறது என்று அனுபவத்தில் தெரிந்துள்ளாயோ அதை அளவோடு உண்ண வேண்டும். நம் உடல் சீரணித்துக் கொள்ளக் கூடியதைத் தவிர வேறு எதுவும் நல்லதன்று. ஜீரண சக்தி அளிப்பது எது? உடற்பயிற்சி. உடலுக்கு வலிமையளிப்பது எது? உறக்கம். தீராத தீமைகளையும் குறைப்பது எது? பொறுமை. - வால்டேர்[3]
சான்றுகள்
தொகு
- ↑ 1.0 1.1 புலவர் ஆயை. மு. காசாமைதீன் (1984). திருவிக. சென்னை: தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம். pp. 112- 118.
- ↑ முல்லை பிஎல். முத்தையா (1998). புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள். நூல் 28-63. முல்லை பதிப்பகம். Retrieved on 22 ஏப்ரல் 2020.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 120. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.