தத்துவ ஞானம்

தத்துவ ஞானம் குறித்த மேற்கோள்கள்

  • தத்துவ ஞானம் எல்லாம் ஆச்சரியத்தில் ஆரம்பித்து, ஆச்சரியத்தில் முடிவடையும். முதல் ஆச்சரியம் அறியாமையின் குழந்தை; மற்ற ஆச்சரியம் வணக்கத்தின் தாய். முன்னது நமது அறிவின் பிரசவக் கஷ்டம் இறுதியானது அதன் சுகமரணம்.- கோல்ரிட்ஜ்[1]
  • நுண்ணிய கருத்துக்கள் உடைமை மட்டுமே தத்துவ ஞானம் ஆகிவிடாது. அறிவு கூறும் வழி நிற்க ஆசை உடைமையே அதன் இலட்சணம். -தோரோ[1]
  • ஒரு தத்துவ ஞானியாக இருப்பது நுணுக்கமான கருத்துகளைக் கொண்டிருப்பது மட்டும் அன்று. ஆனால், அறிவை அன்போடு போற்றி, அது காட்டும் வழியில் வாழ்வதாகும். - தோரோ[2]
  • வாழும் முறையைக் கற்பிக்கும் வித்தையே தத்துவ ஞானத்தின் இரண்டு முக்கிய லட்சியங்கள் ஆகும். -வால்டேர்[1]
  • ஒருவன் யாரிடம் பேசுகின்றானோ அவனுக்குப் பொருள் விளங்காமலும், பேசுகின்ற தனக்குப் பொருள் விளங்காமலும் இருந்தால், பேசுவது தத்துவ சாஸ்திரமாகும். -வால்டேர்[1]
  • உண்மையானதைக் கண்டுபிடிப்பதும். நன்மையானதைச் செய்வதும் தத்துவ ஞானத்தின் முக்கியமான இரண்டு நோக்கங்கள். - வால்டேர்[2]
  • உண்மையான தத்துவ ஞானம், இல்லாததைச் சிருஷ்டிக்காது, உள்ளதையே நிரூபித்து உறுதி செய்யும். -கலின்[1]
  • தவறான அபிப்பிராயத்தை ஒழிப்பதும், அறிவைத் துய்மை செய்வதும், நமது அறியாமையின் ஆழத்தை உறுதி செய்வதுமே தத்துவ ஞானத்தின் தொழில். -ஹாமில்டன்[1]
  • தத்துவ ஞானத்தின் லட்சியம் அறம். - பீட்டர் பெயின்[1]
  • அறிவின் உதவியின்றி உணர்ச்சி மூலம் நம்பப்படு அவைகளுக்குத் தவறான காரணம் கண்டுபிடிப்பதே தத்துவ சாஸ்திரம். ஆனால் அக்காரணம் காண்பதும் ஓர் உணர்ச்சியே. - ப்ராட்லி[1]
  • தத்துவ ஞானத்தை 'அறிவை அறியும் அறிவு' என்பர். ஆனால் உண்மையில் அது அறியாமையை அறியும் அறிவே ஆகும். அல்லது கான்ட் கூறுவதுபோல் அது அறிவின் எல்லையை அறியும் அறிவே ஆகும். -மாக்ஸ் முல்லர்[1]
  • தத்துவ ஞானிபோல் பேசுவதும் எழுதுவதும் எளிது; ஆனால் அறிவோடு நடப்பது - அங்குதான் கஷ்டம் -ரைவ ரோல்[1]
  • தத்துவ ஞானிக்குப் பிறர் யோசனைகளைக் கேட்க விருப்பமும், அவற்றைத் தானே ஆராய்ந்து முடிவு கட்ட மன உறுதியும் வேண்டும். உழைப்பும் இருந்து விட்டால் இயற்கையின் ஆலயத்திலுள்ள இரகசிய மண்டபத்தினுள் நுழையவும் எதிர்பார்க்கலாம். - பாரடே[1]
  • தத்துவ ஞானம் கற்பது என்பது, 'தான்' சாகத் தயராக்குவதேயன்றி வேறன்று. -ஸிஸரோ[1]
  • தத்துவ ஞானத்தை ஆராய்வது ஒருவன் தன்னை மரணத்திற்குத் தயாரித்துக்கொள்வதாகும். - ஸிஸரோ[2]
  • தத்துவ சாஸ்திரிகள் உலக விவகாரங்களைப் பற்றித் தர்க்கித்துக்கொண்டிருப்பர். ஆனால் அதற்கிடையில் உலகை நடத்திச் செல்வன பசியும் காதலுமேயாம். -ஷில்லர்[1]
  • நமது தத்துவ சாஸ்திரத்தில் நாம் கனவு கண்டும் அறியாத பல விஷயங்கள் விண்ணிலும் மண்ணிலும் உண்டு. -வில்லியம் ஷேக்ஸ்பியர்[1]
  • உண்மையான தத்துவ ஞானம் புதிதாக எதையும் கண்டுபிடிப்பதில்லை. அது இருப்பதையே உறுதி செய்து விளக்குகின்றது. - கஸின்[2]
  • தத்துவ ஞானம் என்பது வாழ்க்கைக் கலை. - புளுடார்க்[2]
  • தத்துவஞானியின் முதல் கடமை தற்பெருமையைக் கைவிடல். - எபிக்டெடஸ்[2]
  • தத்துவ ஞானத்தை மேலெழுந்தால் போலக் கற்றால், அது ஐயங்களை எழுப்பும் தீர்க்கமாக ஆராய்ந்தால் ஐயங்களை நீக்கும். பேக்கன்[2]
  • நீ தததுவ ஞானியாக இரு; ஆனால், உன் தத்துவ ஞானத்தின் இடையே மனிதனாகவும் இரு. - ஹியூம்[2]

குறிப்புகள் தொகு

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/தத்துவ ஞானம். நூல் 42- 44. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 204-205. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தத்துவ_ஞானம்&oldid=21685" இலிருந்து மீள்விக்கப்பட்டது