கென்றி டேவிட் தூரோ

(ஹென்றி டேவிட் தோரே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கென்றி டேவிட் தூரோ (Henry David Thoreau 12 சூலை 1817 - மே 6, 1862) ஒரு அமெரிக்க கட்டுரையாளர், கவிஞர், மெய்யியலாளர், இயற்கைவாழ்வாளர், வரி எதிர்ப்பாளர், நில அளவியலாளர், வரலாற்றாசிரியர் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  • கற்றதை எல்லாம் முழுதும் மறக்க முடிந்த பொழுதே நாம் உண்மையில் அறிய ஆரம்பிக்கிறோம்.[1]
  • நம்மைப்பற்றி நாம் கொள்ளும் அபிப்பிராயத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பொது ஜனங்கள் நம்மைப் பற்றிக் கொள்ளும் அபிப்பிராயம் அவ்வளவு பெரிய கொடுங்கோன்மை அன்று.[2]
  • பொருள் சேர்ப்பதில் மட்டுமன்று புகழ் தேடுவதிலுங்கூட நாம் மரிக்கும் மனிதரே. ஆனால், உண்மையை நாடுவதில் நகம் அமரர். அழிவுக்கும் மாறுதலுக்கும் அஞ்ச வேண்டுவதில்லை.[3]
  • கவிஞன் ஒரு சோலையின் சிறந்த பயன்களை எல்லாம் நுகர்ந்து விடுகிறான். சோலையின் சொந்தக் காரனோ பழங்களையும் மட்டைகளையுமே வீட்டுக்குக் கொண்டு போகிறான்.[4]
  • செல்வனுக்கு வாரிசாகப் பிறப்பது உயிருடன் பிறப்பதன்று, இறந்து பிறப்பதே யாகும்.[4]
  • நான் கண்டு களிப்பவைகள் எல்லாவற்றிற்கும் நானே அதிபன். என் உரிமையை மறுக்க யாராலும் இயலாது.[4]
  • கவிஞன் ஒரு சோலையின் சிறந்த பயன்களை எல்லாம் நுகர்ந்து விடுகிறான். சோலையின் சொந்தக் காரனோ பழங்களையும் மட்டைகளையுமே வீட்டுக்குக் கொண்டு போகிறான.[4]
  • நுண்ணிய கருத்துக்கள் உடைமை மட்டுமே தத்துவ ஞானம் ஆகிவிடாது. அறிவு கூறும் வழி நிற்க ஆசை உடைமையே அதன் இலட்சணம்.[5]
  • ஒரு தத்துவ ஞானியாக இருப்பது நுணுக்கமான கருத்துகளைக் கொண்டிருப்பது மட்டும் அன்று. ஆனால், அறிவை அன்போடு போற்றி, அது காட்டும் வழியில் வாழ்வதாகும்.[6]
  • எந்தக் காலத்திலும் அறிஞர்கள் ஏழைகளினும் அதிகமான எளிய வாழ்க்கையே வாழ்ந்துளர்.[7]
  • உண்மையிலேயே நல்ல நூல்கள் காட்டில் மலரும் பூக்களைப்போல இயற்கையானதும், எதிர்பாராத அழகானதும், காரணம் கூற முடியாத பூரணமானதுமான வஸ்துக்கள் ஆகும்.[8]
  • நீ ஆகாயத்தில் கோட்டைகள் கட்டியிருந்தால் உன் வேலை வீணாய்ப் போகாது. அவை இருக்க வேண்டிய இடம் அது தான். இப்பொழுது அவைகளின் அடியில் அடிப்படைகளை அமைத்துவிடு.[9]
  • படிக்கத் தெரியாதவனைப் போலவே படிக்கத் தகாதவைகளைப் படிப்பவனும் நிரட்சர குட்சியே ஆவன்.[10]
  • பணத்தை மட்டும் தரும் தொழில்களைச் செய்தால், உண்மையில் சோம்பலாயிருத்தல் அல்லது அதற்குங்கீழாயிருத்தலேயாகும். [4]
  • ஆன்மாவுக்குத் தேவையான ஒன்றை வாங்கக்கூடப் பணம் தேவையில்லை.[11]
  • மனிதன் அடையக் கூடிய உயர்ந்த பொருள் அறிவன்று, அறிவுடன் கூடிய அனுதாபமேயாகும்.[12]

குறிப்புகள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கர்வம். நூல் 112- 113. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை. நூல் 23- 29. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  5. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/தத்துவ ஞானம். நூல் 42- 44. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 204-205. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  7. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/தனிமை. நூல் 66 - 67. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  8. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல்கள். நூல் 163-168. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  9. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 83-84. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  10. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/படித்தல். நூல் 168-171. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  11. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 252-253. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  12. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அனுதாபம். நூல் 77- 78. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கென்றி_டேவிட்_தூரோ&oldid=22194" இலிருந்து மீள்விக்கப்பட்டது