அரிஸ்டாட்டில்
அரிஸ்டாட்டில் (அல்லது அரிசுட்டாட்டில் (Aristotle)) (கிமு 384 - மார்ச் 7, கிமு 322) ஒரு கிரேக்கத் தத்துவஞானியாவார்.
மேற்கோள்கள்
தொகு- இடர்ப்பாடுகள் ஒருவனுக்கு உண்மையான நண்பர்களை எடுத்து காட்டும்.
- நல்ல ஆரம்பம் வேலையை பாதி ஆக்கிவிடும்.
- மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.
- பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது.
- இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது அதைப் பற்றி சிந்தனை செய்.
- நம்முடைய நற்பண்புக்கும்,நம்முடைய அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும்.
- மனித இனம் மேலும் வளர்ச்சி பெற்ற நிலையில் இல்லாததற்குக் காரணம், வெள்ளங்களும் மற்ற இயற்கைப் பேரழிவுகளும்தான்.
- கனவானது தூக்க நிலையின் சிந்தனை.
- தன் அச்சங்களிலிருந்து மீண்டு வருகிறவன் தான் உண்மையில் சுதந்திரம் அடைகிறான்.
- அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது.[1]
- நமக்கு உள்ளேயிருந்து உணர்வதும், சிந்திப்பதும். விரும்புவதும், எழுச்சியளிப்பதும் எதுவோ அது தெய்விகமானது. ஆதலால் அழிவற்றது.[3]
- ஒரு நகரம், நல்ல சட்டங்களால் ஆளப்பெறுவதை காட்டிலும், ஒரு நல்ல மனிதனால் ஆளப்பெறுதல் மேலாகும்.[4]
- பூரணமான அறிவுக்கு அடையாளமாயுள்ளது கற்பிக்கும் ஆற்றல்.[7]
- தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கின்றனர். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கியிருக்கின்றனர். [8]
- உண்மையை ஆராயும் கலையே தத்துவஞானம்.[9]
- பொய்யினால் ஒருவன் அடையும் ஆதாயமெல்லாம் இதுதான். அவன் உண்மையைச் சொல்லும் போதும் எவரும் நம்பமாட்டார்.[10]
- பொறுமை, நெஞ்சின் உறுதியைப் போலவே இருப்பதால், அது அதற்குச் சகோதரியாகவோ, மகளாகவோ இருக்க வேண்டும்.[11]
- மகா ஞானியின் மூளையிலும் ஒரு மூலையில் மடமை தங்கியிருக்கும். [12]
- சமூகத்தால் சீர்திருத்தப்பட்ட மனிதன் எல்லா விலங்குகளிலும் சிறந்தவன். அவன் சட்டமும் நீதியும் இல்லாமல் வாழ்ந்தால், அவனைப்போல் பயங்கரமானது வேறெதுவும் கிடையாது.[13]
- கதிரவன் உதயமாகு முன்னால் எழுந்துவிடுதல் நலம், இத்தகைய பழக்கங்கள் ஆரோக்கியத்திற்கும். செல்வத்திற்கும். அறிவு விருத்திக்கும் நல்லவை.[14]
மேற்கோள்கள்
தொகு- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 11-12. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 25-27. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 37-38. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 43-46. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 58-61. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 142-143. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 158-159. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 160. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 204-205. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 287-289. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 291-292. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 295. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 302. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 319-320. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.