அநீதி

நீதியற்ற செயல்

அநீதி என்பது நியாயமற்றதுடன் தொடர்புடைய ஒரு குணம் ஆகும். இந்த சொல் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது சூழ்நிலையையும் குறிக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  • அநீதியிழைப்பவன் அநீதிக்கு உட்பட்டவனைவிட அதிகத் துயரடைவான். - பிளேட்டோ[1]
  • அநீதியைத் தாங்குவதைவிட அநீதியிழைப்பது மேல் என்று எவரும் சொல்லத் துணியார். -அரிஸ்டாட்டல்[1]
  • உனக்கு அநீதி செய்யப்பட்டால் பொறுத்துக்கொள்: நீ அதைச் செய்வதில்தான் துக்கம் ஏற்படும். - டெமாக்ரிடஸ்[1]
  • அநீதியானது எதுவும் தெய்வத்தின் திருவுளத்திற்கு எதிரானது ஆகவே, அநீதியாக நடப்பவர்கள் உண்மையான நிலையான இன்பம் அடைய முடியாது என்பது அதிலிருந்து தெரிகின்றது. - ஸ்டிரெச்[1]
  • பெருங்கூட்டமான மக்கள் தங்களை ஆள்பவர்களின் சுயநலத்தையும் அநீதியையும் தெரிந்துகொண்டால், எந்த அரசாங்கமும் ஒராண்டுகூட நிலைத்திருக்காது. உலகமே புரட்சியில் கொந்தளிக்கும். - தியோடோர் பார்க்கெர்[1]
  • அரசனாயினும் சரி. மக்களுள் ஒருவனாயினும் சரி, எவனிடம் அதிகாரம் உளதோ, அவன் உண்மையையும் ஒழுக்கத்தையும் போற்றிக்கொள்ளாவிட்டால், அதிகாரத்தை நிச்சயம் துர் விநியோகம் செய்வான். - லாஃபாண்டெயின்[1]
  • அநாதைக் குழந்தைகளின் செல்வங்களை அநீதியாக விழுங்குபவர்கள் நிச்சயமாக நெருப்பையே விழுங்கித் தங்கள் வயிறுகளில் இறக்க வேண்டியிருக்கும். கொழுந்து விட்டெரியும் நெருப்பிலே அவர்கள் வேகவேண்டியிருக்கும். - குர் ஆன்[1]
  • அநீதிக்கு ஏற்ற அமைச்சன். ஏமாற்று. - பார்க்[1]
  • முறை தவறிச் சேர்த்த செல்வம் முட்கம்பிகளுள்ள அம்பு போன்றது. அதை உடலிலிருந்து வெளியே எடுப்பதில் பயங்கரமான வேதனை ஏற்படும். இல்லையெனில் அதுவே உனக்கு அழிவை உண்டாக்கிவிடும். - ஜெரிமி டெய்லர்[1]
  • அவசரத்தாலோ அல்லது சோம்பலாலோ அல்லது இரண்டும் சேர்வதாலோ அநீதி ஏற்படுகின்றது. ஆத்திரக்காரரும் அயர்வுடையவரும் நீதியாக நடப்பது அரிது. அநீதியாளர் சிறிதுகூடப் பொறுத்திருக்க மாட்டார் அல்லது அதிகக் காலம் காத்திருப்பார். -லிவேட்டர்[1]
  • அநீதிகள் அனைத்திலும், சட்டத்தின் பெயரால் இழைக்கப்படுவதே மிகவும் அநீதியானது; கொடுமைகள் அனைத்திலும் நியாயத்தைப் பாராமல் சட்டத்தின் எழுத்தை மட்டும் பார்த்துத் தண்டித்தலே சிறிதுகூட ஆதரிக்கத் தகாதது. -லா எஸ்டிரேஞ்ச்[1]
  • * "மறைத்துக் கொண்டவர்கள் எல்லாம் மன்னிக்கபட்டவர்கள், ஒப்புக்கொண்டவர்கள் எல்லாம் தண்டிக்கபட்டவர்கள்" என்பது எவ்வளவு அநீதி? -ஜெயகாந்தன்
  • கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
    சூழாது செய்யும் அரசு. - திருவள்ளுவர்
  • துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே. வேந்தன்
    அளியின்மை வாழும் உயிர்க்கு. - திருவள்ளுவர்[1]
  • மண்ணில் நின்று மண்ணோரம் சொல்ல வேண்டாம். - உலகநீதி [1]
  • இருவர்தம் சொல்லையும் எழுதரம் கேட்டே
    இருவரும் பொருந்த உரையா ராயின்,
    மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தாம்.
    மனமுற மறுகிநின்று அழுத கண்ணிர்,
    முறையுறத் தேவர் மூவர் காக்கினும்,
    வழிவழி ஈர்வதோர் வாளா கும்மே. - வெற்றிவேற்கை[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 25-27. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அநீதி&oldid=37845" இலிருந்து மீள்விக்கப்பட்டது