பிளேட்டோ

 • கல்லாமையைவிடப் பிறவாமலிருத்தல் மேலாகும். ஏனெனில், அறிவின்மைதான் எல்லாத் துயரங்களுக்கும் வேர்.[1]
 • நேர்மை பெரும்பாலான நேரங்களில் நேர்மையின்மையை விட குறைவான லாபம் உள்ளதாகவே இருக்கின்றது.
 • துவக்கமே ஒரு வேலையின் மிக முக்கியமான பகுதியாக இருக்கின்றது.
 • நாம் உறுதியான நம்பிக்கையுடன் போராடினால், நம்மிடம் இருமடங்கு ஆயுதம் இருப்பதைப் போன்றது.
 • ஆசை, உணர்ச்சி, அறிவு ஆகிய மூன்று முக்கிய ஆதாரங்களிலிருந்தே மனிதனின் நடத்தை வழிந்தோடுகிறது.
 • இன்றைய கற்பவர் நாளைய தலைவர்.
 • பரிசோதனை இல்லாத வாழ்க்கை, மதிப்புடைய வாழ்க்கை அல்ல.
 • தேவையே கண்டுபிடிப்பின் தாய்.
 • ஒரு மனிதன் தன்னை வெற்றிகொள்வதே அனைத்து வெற்றிகளுக்கும் முதலாவதும், உன்னதமானதும் ஆகும
 • நல்ல விஷயத்தைத் திரும்பச் செய்வதில் எந்த தீங்கும் இருக்கப் போவதில்லை.
 • எந்த வழியில் ஒரு மனிதனுக்கு கல்வி தொடங்குகின்றது என்பதே வாழ்க்கையில் அவனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
 • எதற்கெல்லாம் பயப்படக் கூடாது என்பதை அறிந்திருக்கும் செயலே தைரியம்.
 • நல்ல வேலைக்காரனாக இல்லாத ஒருவன், நல்ல எஜமானனாக இருக்க மாட்டான்.
 • அற வாழ்வில் ஆசையுள்ளவன் சத்தியத்தைச் சார்ந்து நிற்கும் பொழுதுதான் அவன் துக்கம் தொலைகிறது; அதற்கு முன்னால் அன்று.[2]
 • அடிமைகளை வைத்துக்கொள்ளல் முற்றிலும் அநீதியான முறையாகும்.[3]
 • அநீதியிழைப்பவன் அநீதிக்கு உட்பட்டவனைவிட அதிகத் துயரடைவான்.[4]
 • அரசாங்கம் என்பது, வெறும் ஆலோசனை கூறுவது மட்டுமன்று அதற்கு அதிகாரம் உண்டு. தன் சட்டங்களை அமல் நடத்தும் ஆற்றலும் உண்டு.[5]
 • அழகு இயற்கை அளித்துள்ள பேறு.[6]
 • அற்பமான பயனற்ற விஷயங்களில், அவைகளுக்கு உரிய நேரத்திற்குக் கூடுதலாகச் செலவழிப்பதைவிட, ஓர் அறிவாளிக்குத் தகுதியில்லாததும். வருத்தப்படத்தக்கதும் வேறு எதுவுமில்லை.[7]
 • உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் அவர்களுக்கு எல்லாம் தலைகீழாகவே தெரியும்.[8]

குறிப்புகள்தொகு

 1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 65-66. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 2. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21. 
 3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல். நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 25-27. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 43-46. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 58-61. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 75-77. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 8. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 118-120. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.

வெளி இணைப்புக்கள்தொகு

விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிளேட்டோ&oldid=20370" இருந்து மீள்விக்கப்பட்டது