சிந்தனை
சிந்தனை என்பது நம் மனதில் தோன்றுவதாகும். சிந்தனைக் குறித்த தேற்கோள்கள்
சார்லி சாப்ளின்
தொகு- நமது அறிவு யார் மீதும் நம்மை நம்பிக்கையற்றவர்களாக ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை மாற்றிவிட்டது.
- நாம் மிக அதிகளவு சிந்திக்கிறோம். ஆனால், மிகமிகக் குறைவான அளவுக்கே அக்கறைகொள்கிறோம்.
- அறிவுக்கூர்மையை விட நமக்கு அதிகம் தேவை இரக்க உணர்வும் கண்ணியமுமே.
- சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.
பிறர்
தொகு- இறுதியில், சிந்தனையே உலகை ஆள்கின்றது. - ஜே. மக்கோஷ[1]
- வெறும் வளர்ச்சி மனிதனாக்குவதில்லை. சிந்தனைதான் மனிதனை உருவாக்குகின்றது. - ஐஸக் டெலர்[1]
- தங்கத்தைப் போல் சிந்தனையாளர் அரிதாகவே இருப்பர் - லவேட்டர்[1]
- உண்மையில் சிறந்த சிந்தனைகள் யாவும் முன்பே பல்லாயிரம் தடவைகள் சிந்திக்கப்பெற்றவையாகும். ஆனால், அவைகளை நம் சொந்தமாக்கிக்கொள்வதற்கு. நாம் மறுபடி அவைகளை நேர்மையாகச் சிந்தனை செய்ய வேண்டும். பிறகு, அவை அறுபவத்துடன் வேரூன்றிவிடுகின்றன. -கதே[1]
- சிந்தனை இல்லாத படிப்பு பயனில்லாத உழைப்பு: படிப்பில்லாத சிந்தனை ஆபத்தானது. - கன்ஃபூஷியஸ்[1]
- வெளிப்படையான செயல்களைவிடச் சிந்தனைகள் மனிதருடைய பண்பாட்டைக் காட்டுகின்றன. - புளுமெர்[1]
- செயல் திறன் வாய்ந்தவர்கள். தங்களை அறியாமலே சிந்தனையாளர்களின் கருவிகளாகவே விளங்குகின்றனர். - ஹீய்ன்[1]