அழகு (Beauty) என்பது ஒர் எண்ணம், விலங்கு பொருள், நபர் அல்லது இடம் இவற்றின் பண்பு சார்ந்த இன்பம் அல்லது திருப்தியை அளிக்கும் ஒரு புலனுணர்வு அனுபவம் ஆகும்.

இத்தாலிய ஓவியர் சேன்ட்ரோ பொட்டிசெல்லி படைத்த அன்பு, அழகு, செழிப்பு மற்றும் ஆசைகளுக்கு உருவகமான வீனசு தெய்வத்தின் அழகு

மேற்கோள்கள்

தொகு
  • அழகு எனும் பொருளின் திட்டங்களுக்கு அடங்காதனவற்றை அறவே கவனிக்காதீர்கள். அழகிற்கு அப்பாற்பட்ட செயல்கள் எதையும் செய்யாதீர்கள்.கான்பூசியசு[1]
  • பெருந்தன்மையைக் காண்பதிலே, மற்றவர்களுக்கு அன்பு காட்டுவதிலே அதற்கேற்ப மன நெகிழ்வூட்டும் செயல்களைச் செய்து காட்டி மகிழ்ச்சி காண்பதே அன்பு என்ற கருணையின் அழகாகும். ஜான் ரஸ்கின்[2]
  • அனாவசியமாக அதிகமாயிருப்பவற்றை அகற்றுவதே அழகு எனப்படுவதாகும்.மைக்கலாஞ்சலோ[3]
  • அழகு என்பது உண்மையை பொருத்த ஒன்று தான். கல் கல்லை போல் இருக்க வேண்டும். செங்கல் அதைப்போல் இருக்க வேண்டும்.நாம் பொருட்களை அதன் இயல்புக்கு ஏற்ப பயன்படுத்தினால், பிரம்பு, மூங்கில், செங்கல், கல் என எது பயன்படுத்தினாலும் அதுவே அழகாக இருக்கும். லாரி பேக்கர்[4]
  • அழகின் சிறந்த பகுதி என்பது எந்தச் சித்திரமும் வெளிப்படுத்த முடியாத ஒன்று. - பேக்கன்[5]
  • ஒருவர் பார்க்கும் அழகில் ஒரு பகுதி அவர் பார்வையில் இருக்கின்றது. - போவீ[5]
  • தலைசிறந்த அழகியைக்காட்டிலும், புற அழகிலே குறைந்த, ஆனால், அறிவும் புத்திக் கூர்மையும் மிகுந்த ஒரு பெண் என்னை அதிகமாய்க் கவர்ந்துவிடுகிறாள் உள்ளேயிருக்கும் தெய்வத் தன்மையே வெளியேயுள்ள தெய்வத் தன்மைக்குக் காரணமாயுள்ளது. - வாஷிங்டன் இர்விங்[5]
  • அழகைப் போற்றுவதே விகாரமான புலனுணர்ச்சிகளுக்குச் சிறந்த மாற்றாகும். உயர்ந்த ரகமான உருவப் படங்கள் யாவும் பரிசுத்தமாகவே உள்ளவை. அவை சிந்தனைகளைத் தூய்மைப்படுத்துகின்றன. சோகத்தில் முடியும் துன்பியல் நாடகம் மன உணர்ச்சிகளைத் தூய்மைப்படுத்துகின்றன என்று அரிஸ்டாட்டல் கூறியுள்ளதைப் போன்றவை அந்தச் சித்திரங்கள். - ஷிலிகெல்[5]
  • அழகின் ஊற்று இதயத்திலுள்ளது. மேலான ஒவ்வொரு சிந்தனையும் உன் இதயத்தின் சுவர்களை அழகு செய்யும் சித்திரங்களாக அமைகின்றன.[5]
  • அழகோடு ஒழுக்கமும் சேர்ந்தால், அது இதயத்தின் கவர்க்கமாகும் தீயொழுக்கம் அதனுடன் சேர்ந்துவிட்டால், அதுவே ஆன்மாவின் நரகமாகும். -. குவார்லெஸ்[5]
  • அழகு இன்பமான கவர்ச்சி. -தியோகிரிடஸ்[5]
  • அழகு உலகிலுள்ள எல்லாச் சிபாரிசுக் கடிதங்களையும்விட மேலானது. - அரிஸ்டாட்டல்[5]
  • அழகு இயற்கையின் உன்னதமான ஒரு பரிசு. -ஹோமர்[5]
  • அழகு தெய்வங்களின் அருளாகும். - ஒவிட்[5]
  • அழகு சிறிதுகாலம் நிலைத்திருக்கும் ஒரு கடுமையான ஆட்சி - சாக்ரடீஸ்[5]
  • இறைவனை நான் அகத்தில் அழகுடன் விளங்க அருள்வாய் என்று வேண்டிக்கொள்கிறேன். -சாக்ரடிஸ்[5]
  • ஆகா! உண்மை என்ற அணியைப் புனைந்துகொண்டால் அழகு எவ்வளவு பேரழகாகத் தோன்றுகின்றது. ஷேக்ஸ்பியர்[5]
  • அழகுள்ள எதையும் பார்க்கும் வாய்ப்பை ஒருகாலும் இழந்துவிட வேண்டாம். -எமர்ஸன்[5]
  • செல்வச் செழிப்புடனுள்ள ஒரு மனிதனை நேசிப்பதிலுள்ள பெருமையே அழகுள்ள ஒரு பெண்ணிடம் அன்பு கொள்வதிலும் இருக்கின்றது. இரண்டும் மாறக்கூடியவை. -போப்[5]
  • அழகு மனிதர்களை இழுக்கின்றது. அத்துடன் தங்கமோ வெள்ளியோ சேர்ந்துவிட்டால், கவர்ச்சி பத்து மடங்காகி விடும். -ரிக்டெர்[5]
  • உண்மையான அழகின் அளவுகோல் எதுவென்றால், ஆராய ஆராய அந்த அழகு கூடிக்கொண்டிருக்க வேண்டும்: போலியாயிருந்தால், அழகு குறைந்துகொண்டேயிருக்கும். - கிலெவில்வி[5]
  • எல்லா அழகும் காதலைத் தூண்டுவதில்லை. சில அழகிகள் கண்ணுக்கு இனிமையாய்த் தோன்றுவரே ஒழிய அன்புசர்சிகளை எழுப்புவதில்லை. - செர்வான்டிஸ்[5]
  • அழகு புறத்தில் தெரியும்படியான ஒரு பரிசு அது எவர்களுக்கு மறிக்கப்பட்டுள்ளதோ அவர்களைத் தவிர வேறு எவரும் வெறுப்பதில்லை. -கிப்பன்[5]
  • இயற்கை அளிக்கும் முதல் பரிசு, அழகு. அது முதலாவது பறித்துக்கொள்வதும் அதைத்தான். -மெரெ[5]
  • அழகு பஞ்சாங்கத்தைப் போன்றது. அது ஒரு வருடம் நிலைத்திருந்தால் நல்லதுதான். -டி ஆடம்ஸ்[5]
  • பகுத்தறிவைக்காட்டிலும் வலிமையுள்ள ஓர் உள்ளுணர்ச்சியால், அழகுடன் உண்மையைச் சேர்த்தே ஆன்மா எண்ணுகின்றது. - டக்கர்மான்[5]
  • ஆண்டவன் நல்லொழுக்கத்தின்மீது வைக்கும் முத்திரையே அழகு இயகையான எந்தச் செயலும் வழிலுடையது: ஒவ்வொரு வீரச்செயலும் நேர்த்தியானது. அது நிகழும் இடத்தையும், அருகில் நிற்பவர்களையும் ஒளியமாக்குகின்றது. -எமர்ஸன்[5]
  • கிளியோபாட்ரா ராணியின் மூக்கு சற்றுக் குட்டையாக அமைந்திருந்தால், அது உலகத்தின் சரித்திரத்தை வேறு விதமாக மாற்றியிருக்கும். -பாஸ்கல்[5]
  • கவர்ச்சியாயும் அழகாயும் உள்ளது எப்பொழுதுமே நல்லதாக இருப்பதில்லை; ஆனால், நல்லது எதுவும் எப்பொழுதும் அழகுள்ளது. -லா' என்கிளாஸ்[5]
  • அழகான ஒருவரிடம் காணும் நல்ல பண்புகூட அதிக எழிலுடன் விளங்குகின்றது. - வர்கில்[5]
  • அழகு நன்மையானதுதான். ஆனால், வீணானது. அதன் பயனும் சந்தேகமானதுதான் அது திடீரென்று வாடும் வெளிப்பகட்டு அரும்பத் தொடங்கும் பொழுதே மடியக்கூடிய மலர்: சந்தேகமான தன்மை: ஒரு மினுக்கு ஒரு கண்ணாடி ஒரு மலர், அது ஒரு மணி நேரத்திற்குள் இழக்கப்பெறுவது: வாடக்கூடியது. உடையக்கூடியது அழியக்கூடியது. - ஷேக்ஸ்பியர்[5]
  • பிறவியிலேயே பார்வை இல்லாதவர்கள் ,மனிதர்களிடம் அழகென்று எதைக் காண்கிறார்களோ அதுவாகவே இருந்துவிட ஆசை -யாத்திரி ( 'காதலே கதிமோட்சம் ' என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து )

சான்றுகள்

தொகு
  1. என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
  2. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12. 
  3. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கவிதை. நூல் 159-163. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. 'கற்களுக்குள் ஒரு காந்தி' என்ற கட்டுரையில் இருந்து.
  5. 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 5.11 5.12 5.13 5.14 5.15 5.16 5.17 5.18 5.19 5.20 5.21 5.22 5.23 5.24 5.25 5.26 5.27 5.28 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 58-61. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=அழகு&oldid=38345" இலிருந்து மீள்விக்கப்பட்டது