லாரி பேக்கர்

லாரி பேக்கர் (Laurence Wilfred "Laurie" Baker) (மார்ச் 2, 1917 - ஏப்ரல் 1, 2007) ஒரு புகழ் ஈட்டிய இந்தியக் கட்டிடச் சிற்பி (கட்டடக் கலைஞர்). இந்தியாவில் கட்டிட வடிவமைப்பாளாராக பணியாற்றினார். உள்ளூர் பொருட்களைக் கொண்டு உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப செலவு குறைவான வீடுகளைக் கட்டும் முறையை உருவாக்கினார். இவ்வீடுகளின் உள்வெளியையும் இடத்தையும் தனித்தன்மையுடன் திறம்பட வகுத்துப் பயன்படுத்தினார். அது பேக்கர் பாணி வீடு என்று சொல்லபப்டுகிறது. கேரளாவில் லாரி பேக்கரை ஏழைகளின் பெருந்தச்சன் என்று பெருமையுடன் அழைக்கின்றார்கள்.

லாரி பேக்கர்

மேற்கோள்கள்

தொகு
  • இன்றைய இந்திய மக்களின் தேவைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், அந்த தேவைகளை ஈடு செய்ய வேண்டும் எனில் பிரம்மாண்டமாக சிந்திப்பதை நிறுத்திவிட்டு ‘சிறியதே அழகு’ எனும் அடிப்படையை நோக்கி நகர வேண்டும்.[1]
  • நவீன இந்திய கட்டிடக்கலை என்று தனியாக ஒன்று உண்டா என்றால்! இல்லை. சீனா, ஜெர்மனி, பெரு மற்றும் இந்திய நாட்டில் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களை ஒரு பாலைவனத்தில் வைத்தால் அவைகளுக்கு இடையே ஏதேனும் வேறுபாடி உணர இயலுமா என்ன? இவைகளில் எது இந்தியாவிலிருந்து வந்தது? எது பெருவிலிருந்து வந்தது என பிரித்தறிய முடியுமா? ஆனால் இடு பொருட்கள் வேறானவை, வேறு மாதிரியான வானிலை கொண்டவை, வாழ்க்கை முறையும் வேறானவை.[1]
  • நான் பனி செய்ய தொடங்குவதற்கு முன், அவர்களுடைய கட்டிடம் எழபோகும் மனையை காண வேண்டும். அது எத்தகைய நிலம் என்பதை அறிய வேண்டும் என்பது மட்டுமல்ல (மேட்டு பகுதி, சரிவு போன்றவை), அங்கு என்ன மரங்கள் இருக்கின்றன என பார்க்க வேண்டும். மேலும் அவர்கள் நல்ல பார்வை கோணங்கள் வேண்டுகிறார்களா? தோட்டம் போடும் திட்டமுண்டா? பிராணிகள் வளர்ப்பதுண்டா? தண்ணீர் வசதி எப்படி? காற்றின் திசை மற்றும் மழையின் திசை எது? என பலவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் தான் இந்த கட்டிடத்தை பயன்படுத்த போகிறார்கள் நான் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.[1]
  • எல்லோரையும் மண் வீடு கட்டிகொள்ள வேண்டும் என நான் கோரவில்லை, எல்லோரும் வீடு கட்டிகொள்ள வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன், அந்த இலக்கை மண்ணை கொண்டு மட்டுமே அடைய முடியும். கிராமங்களில் நாம் காணும் இல்லங்கள் குறைந்தது எழுபது என்பது வருடங்கள் பழமையானவை. மண் எளிதாக கிடைக்க கூடியது, அதிக ஆற்றல் தேவைபடாதது. இரும்பையும் கான்க்ரீடையும் கொண்டு தான் நாம் அத்தனை வீடுகளையும் கட்ட போகிறோம் என்றால் அது நம்மால் முடியவே முடியாது. இருபது முப்பது மில்லியன் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் அது மண்ணால் மட்டுமே முடியும்.[1]
  • கட்டிடவியல் என்பது எவை நல்லவையோ, எவை பயனுள்ளதோ, எவை நடைமுறைக்கு உகந்ததோ அவைகளை பற்றிய விதிமுறைகளின் தொகுப்பு தான். இவ்வகையில் இசைக்கு அது மிகவும் நெருக்கமானதும் கூட” என கருதினார்.[1]
  • அழகு என்பது உண்மையை பொருத்த ஒன்று தான். கல் கல்லை போல் இருக்க வேண்டும். செங்கல் அதைப்போல் இருக்க வேண்டும்.நாம் பொருட்களை அதன் இயல்புக்கு ஏற்ப பயன்படுத்தினால், பிரம்பு, மூங்கில், செங்கல், கல் என எது பயன்படுத்தினாலும் அதுவே அழகாக இருக்கும்.[1]
  • உயர் குடி, மத்திய வர்க்கம், ஏழை, பழங்குடிகள், மீனவர்கள் என வெவ்வேறு வர்க்கத்தினருக்காக நான் கட்டிடங்கள் கட்டுவதில்லை. நான் ஒரு மேத்யுவிற்கும், ஒரு பாஸ்கரனுக்கும், ஒரு முணீருக்கும், ஒரு சங்கரனுக்கும் தான் கட்டிடம் கட்டுகிறேன்.[1]
  • இன்னும் எத்தனையோ மக்கள் கட்டிடம் என்று அழைக்கப்படும் ஒன்றுக்கு அருகில் கூட இல்லை என்பதை எண்ணி நாம் வெட்கப்பட வேண்டாமா? நாம், கட்டிடகலை நிபுணர்களாக, உயர்ந்த தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர்களாக, இந்த பிரம்மாண்ட தேவையை போக்க மிகக் குறைவாகவே செயல்படுகிறோம். கட்டிடத்தை விட்டுவிடுங்கள், சிறிய குடிசை கூட இல்லாமல் இருபது மில்லியன் குடும்பங்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள். நாமும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதித்து கொண்டிருக்கிறோம் என்பது வெட்கக் கேடானது.[1]

சான்றுகள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
 
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=லாரி_பேக்கர்&oldid=10912" இலிருந்து மீள்விக்கப்பட்டது