பொறுமை (Patience) என்பது தமக்கு துன்பம் ஏற்படும்போது உணர்ச்சி வயப்படாமலும், கோபம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலை ஆகும். மற்றவர் தம்மை இகழும் போதும், நீண்ட தாமதங்கள் ஏற்படும் போதும், பிரச்சனைகள் ஏற்படும் போதும், தொடர் துன்பங்கள் வரும் போதும், சில அசாதரண சூழ்நிலைகளிலும் அமைதியாக இருக்கும் குணம் ஆகும். இந்த குணம் மனிதனை பல்வேறு உடல் நோய்களில் இருந்தும், மன நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  • நல்ல மனிதன் பொறுமையைக் கடைப்பிடிப்பான். - மகாவீரர்
  • பொறுத்தல் என்பது நம் விதியையும் வெல்லுதல் - காமப்பெல்[1]
  • பொறுமை கசப்பு: ஆனால், அதன் கனி இனிப்பாயிருக்கும் - ரூஸோ[1]
  • பொறுமை, நெஞ்சின் உறுதியைப் போலவே இருப்பதால், அது அதற்குச் சகோதரியாகவோ, மகளாகவோ இருக்க வேண்டும். -அரிஸ்டாட்டில்[1]
  • பொறுமை பலவீனத்திற்குக் காப்பாகும். ஆத்திரம் வலிமையை அழிக்கும். -கோல்டன்[1]
  • பொறுமையுள்ளவனுக்கு அவன் விரும்பியனவெல்லாம் கிடைக்கும். -ஃபிராங்லின் [1]
  • எப்படிக் காலம் கருதிக் காத்திருக்க வேண்டும் என்பதை அறிதலே வெற்றியின் இரகசியம். - டி. மெய்ஸ்டிரி[1]
  • பொறுமையில்லாதவர் எவ்வளவு எளியராயிருக்கின்றனர்! எந்தப் புண்தான் சிறிது சிறிதாக அல்லாமல் உடனே ஆறிவிடுகின்றது? - ஷேக்ஸ்பியர்[1]
  • சான்றோருக்குரிய ஆற்றல்கள் இரண்டு. ஒன்று. சகிப்புத் தன்மை, மற்றது. பொறுமை. - எபிக்டெட்டஸ்[1]
  • வலிமையும் உணர்ச்சியும் சாதிப்பதைவிடப் பொறுமையும் காலமும் அதிகமாய்ச் சாதித்துவிடும். - லாஃபான்டெயின்[1]
  • ஒறுக்கும் மதுகை உரனுடைய யாளன்
    பொறுக்கும் பொறையே பொறை. - நாலடியார்[1]
  • ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம், பொறுத்தார்க்குப்
    பொன்றும் துணையும் புகழ்.
  • அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

குறள் விளக்கம்:
தன்னைத் தோண்டுபவரை பொறுத்துத் தாங்கிக் கொள்ளும் நிலம்போல, தம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல் முதன்மையான அறமாகும்.

பழமொழிகளும் சொலவடைகளும்

தொகு
  • பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
  • பொறுமை கடலினும் பெரிது.
  • பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார்.
  • ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.

குறிப்புகள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 291-292. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.

வெளியிணைப்புக்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 
Wiktionary
விக்சனரியில் இருக்கும் பொறுமை என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பொறுமை&oldid=35386" இலிருந்து மீள்விக்கப்பட்டது