அமரத்துவம்

என்றும் அழிவில்லாதது

அமரத்துவம் அல்லது அழியாமை (Immortality) என்பது நித்திய ஜீவன், மரணத்திலிருந்து விலக்கு; முடிவில்லாத இருப்பு. என்பதாகும்.

மேற்கோள்கள்

தொகு
  • வேறு வாழ்க்கையில் நம்பிக்கையில்லாதவர்கள் இந்த வாழ்விலேகூட இறந்தவர்களாவர். -கதே[1]
  • வித்து ஒரு புது வாழ்வில் மறைந்துவிடுகின்றது. அதுபோல் தான் மனிதனும். - ஜி. மாக்டொனால்டு[1]
  • மண்கட்டியாகிய இந்த உடலுடன் இறைவன் அருளிய ஆன்மா அழிந்துவிடுவதில்லை. - மில்டன்[1]
  • எல்லா மனிதர்களுடைய ஆன்மாக்களும் நித்தியமானவை. ஆனால், நேர்மையாளர்களின் ஆன்மாக்கள் நித்தியமாயும் தெய்விகமாயும் இருக்கின்றன. - சாக்ரடீஸ்[1]
  • நமக்கு உள்ளேயிருந்து உணர்வதும், சிந்திப்பதும். விரும்புவதும், எழுச்சியளிப்பதும் எதுவோ அது தெய்விகமானது. ஆதலால் அழிவற்றது. - அரிஸ்டாட்டல்[1]
  • மண்ணுலகைச் சேர்ந்தவை மறுபடி மண்ணுக்குள்ளே கரைந்து விடுகின்றன. வானிலிருந்து வந்தவை அங்கேயே சென்று விடுகின்றன. - மார்க்ஸ் அண்டோனியஸ்
  • மனிதன் நித்தியமானவன் என்ற நம்பிக்கையில்லாத மதம், ஒற்றைத் தூணில் நிற்கும் வளைவு போலவும், இறுதியில் படுகுழியைக் கொண்டுள்ள பாலம் போலவும் உள்ளது. - மாக்ஸ் முல்லர்[1]
  • தத்துவ ஞானத்தின் நுணுக்கங்கள் எல்லாம் சேர்ந்தும். ஆன்மா நித்தியமானது என்று நான் நம்புவதையும். தெய்வம் கருணையுள்ளது என்பதையும் ஒரு கணநேரங்கூட ஐயுறச் செய்ய முடியாது. நான் இவ்வாறு உணர்கிறேன். நம்புகிறேன். விரும்புகிறேன். எதிர்பார்க்கிறேன். என் மூச்சு உள்ளவரை நான் இந்தக் கொள்கையைக் கைவிடேன். - ருஸோ[1]
  • சிறு துயிலுக்குப் பின்னால் நாம் விழிப்படைந்து அமரராகி விடுகிறோம். அப்பால் மரணம் என்பதில்லை. - டோன்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 37-38. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அமரத்துவம்&oldid=19258" இலிருந்து மீள்விக்கப்பட்டது