ஜான் மில்டன்
ஆங்கிலக் கவிஞர் மற்றும் அரசு ஊழியர் (1608-1674)
ஜான் மில்டன் (John Milton 6 திசம்பர் 1608--8 நவம்பர் 1674) புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர். தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டி மன்னராட்சி மகுடத்தை வீழ்த்துவதற்குத் துணை புரிந்தவர் மில்டன். டிசம்பர் 9, 2008 மில்டனின்400வது பிறந்த தினம். உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு மில்டனின் கவித்திறன் ஆதர்சமாய் விளங்குகிறது.
இவரது மேற்கோள்கள்
தொகு- மண்கட்டியாகிய இந்த உடலுடன் இறைவன் அருளிய ஆன்மா அழிந்துவிடுவதில்லை.[1]
- அமைதிக்கும் வெற்றிகள் உண்டு. அவை போரின் வெற்றிகளைவிடப் புகழில் குறைந்தவை அல்ல.[2]
- நமக்கு முன்னால் தினசரி வாழ்க்கையில் காணப்பெறும் பொருள்களைத் தெரிந்துகொள்வதே முக்கியமான அறிவு இதற்கு மேற்பட்டனவெல்லாம் புகை அல்லது வெறுமை அல்லது அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமேயாகும். இவை நமக்கு முக்கியமாகத் தேவையுள்ள விஷயங்களில் நமக்குப் பழக்கமில்லாமலும் நம்மைத் தயாரித்துக்கொள்ள வாய்ப்பில்லயலும் செய்துவிடும்.[3]
- எங்கும் பார்க்கக்கூடிய இறைவனுடைய கண்ணிலிருந்து எது தப்பியிருக்க முடியும்? எது அவன் உள்ளத்தை ஏமாற்ற முடியும்? அவன் எல்லாம் அறிந்தவன்.[4]
- கடவுளைத் தவிர வேறு எவரும் காணமுடியாதபடி உலவும் தீமை பாசாங்கு ஒன்றுதான்.[5]
- சொந்தக் காரியம் பொதுக் காரியம் எல்லாவற்றையும் நியாயமாயும் சாமர்த்தியமாயும் பெருந்தன்மையாயும் செய்யக் கற்றுக் கொடுப்பதே பரிபூரணமான கல்வியாகும்.[6]
- உயர்ந்த கவிதையை சிருஷ்டிக்க விரும்புபவன் தன் வாழ்வு முழுவதையுமே ஒரு உன்னதக் கவிதையாக ஆக்கிக்கொள்ளக் கடவன்.[7]
- காலை நேரம் ஒரு நாளைக் காட்டுவது போல, குழந்தை பின்னால் வளரும் மனிதனைக் காட்டுகின்றது. [8]
- அவர்கள் சுதந்தரம் என்று கூவும் பொழுது தங்கள் இஷ்டம் போல் நடக்கும் உரிமையையே கோருகின்றனர். [9]
- நரகத்திலிருந்து ஒளிமயமான பிரதேசத்திற்குச் செல்ல வேண்டுமானால், வழி நீளமாயும் கஷ்டமாயுமே இருக்கும்.[10]
- அறிவிலார் செல்வம் பெற அரும்பாடுபடுவர்; அறிஞர்க்கோ அது மாயவலையாக இல்லாவிடினும் பெரும் பாரமாகவே இருக்கும்.[12]
- மனம் தன் இடத்தில் இருந்துகொண்டே சுவர்க்கத்தை நரகமாக்கிக்கொள்ளும், நரகத்தைச் சுவர்க்கமாக்கிக்கொள்ளும்.[13]
- மணிகளுக்குச் சிறகுகள் உண்டு. அவை காலத்தை ஏற்படுத்ரியவரிடம் சென்று. நாம் அவைகளை எப்படி உபயோகித்தோம் என்பதைதைத் தெரிவிக்கும்.[14]
- உலகில் யாரும் அறியாதபடி உலவும் தீமை வஞ்சக நடை ஒன்றே. அதை ஆண்டவன் மட்டுமே அறிவான்.
- நூலை உண்டாக்கியவருடைய ஆன்மாவைப் போலவே நூலும் உயிராற்றல் உடையதாகும்.[15]
- மனிதனைக் கொல்பவன் அறிவுள்ள பிராணியை—ஆண்டவன் பிம்பத்தைக் கொல்கிறான். ஆனால் புஸ்தகத்தைக் கொல்பவனோ அறிவை—ஆண்டவன் பிம்பத்தின் கண்ணைக் குத்திக் கொல்பவனாகிறான்.[15]
- பழிவாங்குதல் ஆரம்பத்தில் இனிக்கும். ஆனால், சிறிது போதில் கசப்பாக மாறிவிடும். அது எய்தவனையே திரும்பிவந்து கொல்லும் அம்பாகும்.[16]
- மனம் கொண்டது மாளிகை; நரகத்தைச் சொர்க்க மாக்குவதும் சொர்க்கத்தை நரகமாக்குவதும் அதுவே.[17]
- தினசரி வாழ்க்கையில் நமது கண்முன்னால் நடப்பதை அறிந்து கொள்வது முக்கியமான அறிவாகும்.[18]
- நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.[19]
- பலாத்காரத்தினால் வெல்பவன் பாதி எதிரியைத் தான் வெல்கிறான்.[20]
வாழ்க்கையைக் காதலிக்கவும் வேண்டாம். வெறுக்கவும் வேண்டாம்; அது எவ்வளவு காலம் நீண்டிருக்க வேண்டும் அல்லது குறைந்திருக்க வேண்டும் என்பதை இறைவனுக்கு விட்டுவிடுங்கள்.[21]
- அறம் விரும்பு; அதுவே வீடு.[22]
நபர்குறித்த மேற்கோள்கள்
தொகு- உலகத்திலுள்ள ‘மில்டனின் புத்தகங்களையெல்லாம் எரித்து விட்டால் கூட, என் ஞாபக சக்தியைக் கொண்டு, மீணடும், அவைகளை அப்படியே எழுதிவிடுவேன். லார்டு மெக்காலே[23]
சான்றுகள்
தொகு- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 37-38. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 39-40. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 69-75. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 135-136. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 151-152. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கவிதை. நூல் 159-163. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 162. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 178-179. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 184-185. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 11.0 11.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 185-187. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 229-130. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 245-246. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 15.0 15.1 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல்கள். நூல் 163-168. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பழிவாங்குதல். நூல் 75- 76. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/திருப்தி. நூல் 143-146. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 305-306. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வஞ்சகம். நூல் 74- 75. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 259-260. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 312. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மோட்சம். நூல் 36- 37. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 121-128. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.