சுதந்திரம்

சுதந்திரம் என்பது சிறைப்படுத்தப்படாத, அடிமைப்படுத்தப்படாத, வலிந்து தடுகாத நிலையாகும்.இது குறித்த மேற்கோள்கள்

  • வாழ்க்கை என்பது என்ன? வெளியே கற்றி நடப்பதும். நல்ல காற்றைச் சுவாசிப்பதும், உயரே சூரியனைப் பார்ப்பதும் அன்று. சுதந்தரமாயிருப்பதே வாழ்க்கை. அடிஸன்[1]
  • மனித சமுகம் எப்பொழுது மிக அதிகமான அளவில் சுதந்தரம் பெற்றுள்ளதோ, அப்பொழுதுதான் உச்ச நிலையில் விளங்கும். - தாந்தே[1]
  • சுதந்தரம் மனித சமூகத்தின் கதியை நிர்ணயிப்பது. உலகில் எந்த அளவில் அது வெற்றி பெற்று வளர்கின்றதோ, அந்த அளவுக்கு அது சுதந்தரம் விரும்புவோர் அனைவருக்கும் உதவியாகும். - கோஸத்[1]
  • மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசாங்கத்தைத் தவிர வேறு எதுவும் பூமியில் இருப்பதற்கு நியாயம் கிடையாது. - ஜோஸப் போனபார்ட்[1]
  • சுதந்தரமாயுள்ள மக்கள் அந்தச் சுதந்த்ரத்தைத் தங்கள் குழந்தைகளுக்கும் அளிப்பதே தலைசிறந்த பெருமையாகும். - ஹாவர்டு[1]
  • நான் சுதந்தரத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன். சமூக சுதந்தரம். பொருளாதார சுதந்தரம். குடும்ப சுதந்தரம். அரசியல் சுதந்தாம். அறிவுச் சுதந்தரம் ஆன்மிகச் சுதந்தரம், அனைத்தும் அவசியம், - எல்பர்ட் ஹப்பர்ட்[1]
  • சமய சுதந்தரம், பத்திரிகை சுதந்தரம். சட்டத்தின் மூலம் தனி மனிதவின் உடற்காப்புக்குச் சுதந்தரம் ஆகிய தத்துவங்களே, புரட்சியும் மறுமலர்ச்சியும் நடந்து வந்த காலத்தில் நமக்கு வழிகாட்டிகளாயிருந்து வந்தன. - ஜெஃபர்ஸன்[1]
  • சட்டத்திற்கு உட்பட்டு அமையும் சுதந்தரமே உண்மையான சுதந்திரம் -பர்டன்[1]
  • தனி மனிதனின் சுதந்தரம் மனிதனின் பெருமைக்கும் இன்பத்திற்கும் அவசியமாகும். - புல்வர்[1]
  • மற்ற சுதந்தரங்களைக்காட்டிலும் எனக்கு அறிவு பெறவும், சிந்தனை செய்யவும், நம்பிக்கை கொள்ளவும், மனச்சாட்சியின்படி நினைத்ததைப் பேசவும் உரிமை தேவை. - மில்டன்[1]
  • எங்கே சுதந்தரம் உளதோ, அது என் நாடு. மில்டன்[1]
  • சுதந்திரமாயிருக்க வேண்டுமென்று உறுதிகொண்ட மக்கள்மீது அடிமைத்தனத்தைச் சுமத்தப் பார்ப்பதைவிட மலையை அடியோடு பெயர்த்தெறிவது எளிது. - ஸதே[1]
  • மனித உடலுக்கு ஆரோக்கியத்தைப் போல், சமூகத்திற்குச் கதந்திரம் தேவை. - கௌவி[1]
  • சுவர்க்கத்திலே என்னைச் சிறை வைத்தாலும், நான் அதன் பளிங்கு, சுவர்களைத் தாண்டி வெளியேறவே விரும்புவேன். எனக்கு கதந்தரமே தேவை. -டிரைடன்[1]
  • சுதந்திரம், சமத்துவம் ஆகிய கொள்கை வெறும் சுய நலத்தோடு சேர்ந்திருந்தால், மனிதர்களைப் பேய்களாக்கிவிடும். ஒவ்வொருவனும் சுதந்தரமாகி, தன் சுயநலத்திற்காக மட்டும் போராடிக்கொண்டிருப்பான். இங்கேதான் சமயமும். அதன் ஆற்றலும் தேவைப்படுகின்றன. அவை மனிதர்க்கு அன்பையும் பரோபகாரச் சிந்தையையும் உண்டாக்கும். -ஜான் ராண்டோல்ஃப்[1]
  • உண்மையான சுதந்தரம் என்பது நம் உரிமைகளை நாம் அனுபவிக்கும் உரிமையாகும்; பிறருடைய உரிமைகளை அழிப்பதன்று -பிங்கார்ட்[1]
  • சட்டங்கள அனுமதிக்கும் உரிமையே சுதந்தரம். அவை தடுத்துள்ளவைகளை ஒரு பிரஜை செய்தால், அது சுதந்தரமாகாது. ஏனெனில், மற்றவர்களும் அவ்வாறே செய்ய உரிமை கொண்டாடுவார்கள். -மாண்டெஸ்கியு[1]
  • சட்டத்துக்கு அடங்கிய சுதந்தரம் அடுப்பிலுள்ள நெருப்பானால், சட்டத்துக்கு அடங்காத சுதந்தரம் தரைமீது பரவிய நெருப்பாகும். - ஷில்லாட்[1]
  • சுதந்தரம் ஒரு சமூகத்தை நோக்கி இறங்கி வராது. சமூகமே அதை நோக்கி மேலெழ வேண்டும் அதைச் சிரமப்பட்டு அடைந்து அனுபவிக்கவேண்டும். - கோல்டன்[1]
  • சுதந்தரம் இல்லாமல் ஒரு நாடு சிறப்பாக வாழ முடியாது. - ரூஸோ[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 185-187. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சுதந்திரம்&oldid=21411" இலிருந்து மீள்விக்கப்பட்டது