கபடம் குறித்த மேற்கோள்கள்

  • தீயோன் ஒருவன் துறந்த ஞானி போல நடிக்கும் பொழுது மேலும் மோசமாகிறான். - பேக்கன்[1]
  • பாசாங்குக்காரரிலும் பொய்யரிலும், எந்த மனிதன் மன ஆறுதலுக்காகத் தனக்குத்தானே பொய் சொல்லிக்கொள்கிறானோ அவனே மிகவும் இழிவானவன். - ஹிலோ பெல்லக்[1]
  • வெளியே ஞானியார், வீட்டிலே சயித்தான். - பனியன்[1]
  • கடவுளைத் தவிர வேறு எவரும் காணமுடியாதபடி உலவும் தீமை பாசாங்கு ஒன்றுதான். - மில்டன்[1]
  • ஒருவன் (முகமலர்ந்து) சிரித்துக்கொண்டேயிருக்கலாம் அந்நிலையில் துரோகியாகவும் இருக்கலாம். - ஷேக்ஸ்பியர்[1]
  • கோயிலில் எண்ணற்ற பாசாங்குக்காரர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக நீ போகாமல் இருக்கவேண்டாம், கூட ஒருவருக்கு அங்கே எப்பொழுதும் இடமுண்டு. - ஏ. ஆர். ஆடம்ஸ்[1]
  • தீங்கே எண்ணாத உள்ளமுடையார்க்குத் தலையணை வேதனையளிப்பதில்லை. -கௌப்பர்[1]
  • அகத்தில் பரிசுத்தமாயிருப்பவர்களைப் புறத்தில் அதுவே பித்தளைச் சுவராக நின்று காக்கும். - ஹொஸ்ரே[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 151-152. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கபடம்&oldid=20828" இலிருந்து மீள்விக்கப்பட்டது