கூட்டம்
கூட்டம் அல்லது கும்பல் என்பது அதிகளவு மக்கள் ஒரு காரணத்தோடு கூடியிருப்பதைக் குறிக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ஜனக் கூட்டங்களின் மனங்களைப் போல அவ்வளவு நிச்சய மில்லாதவை வேறொன்றுமில்லை. -லீய்ஸ்[1]
- ஐக்கியப்பட்டு வேலை செய்யும்படி இணைக்கப்பெறாத ஜனக் கூட்டம் வெறும் குழப்பமாகும். ஜனக்கூட்டத்தை ஆதாரமாய்க் கொள்ளாத ஐக்கியம் கொடுங்கோன்மையாகும். - பாஸ்கல்[1]
- கூட்டம் எப்பொழுதும் தவறாகவே யிருக்கும். ரோஸ்காமன்[1]
- பொதுமக்களின் நம்பிக்கை அதற்கு ஆதாரமில்லாத போதிலும், உண்மையைப் போன்றே பயனுண்டாக்கிவிடும் சந்தர்ப்பங்களும் உண்டு. -ஷில்லர்[1]
- ஜனக் கூட்டத்திற்குத் தன்னம்பிக்கையும், தனித்த செயல் திறமையும் கிடையாதென்பதால், வலிமை பெற்றவர்களுக்கு வாய்ப்புண்டாகிறது. - எமர்ஸன்[1]
- சமுதாயம் கொந்தளிக்கும் பொழுது, மேலே கிளம்பி வருவது அடித்தளத்திலுள்ள கும்பல்கள்தாம். - டிரைடன்[1]
- ஜனக்கும்பல் பயமில்லாதிருக்கையில் கொடுமையாகப் பாயும்: ஒரு முறை அஞ்சிவிட்டால், மிக இழிவாயும் வெறுக்கத்தக்க முறையிலும் இறங்கிவிடும். -மேலெட்[1]
- கூட்டம் தன் அபிமானத்தைக்கொண்டே சிந்தனை செய்யும். அறிவைக் கொண்டு சிந்திக்காது. - டபுள்யு ஆர் ஆல்ஜெர்[1]