அமைதி
அமைதி என்பதற்குப் பல பொருள்கள் தமிழில் உள்ளன எனினும் இக் கட்டுரையில் இது போர், பகைமை, வன்முறை என்பவற்றுக்கு எதிர்ச்சொல்லாகவே பயன்படுத்தபட்டுள்ளது. தற்காலப் பயன்பாட்டில் அமைதி என்பது, பகைமை இல்லாத ஒரு நிலையைக் குறிக்கும் ஒரு கருத்துருவாகும்.
மேற்கோள்கள்
தொகு- அமைதி மனிதனுக்கு இயற்கையாயுள்ள இன்பநிலை போர் அவனுக்கு இழிவு அவமானம் - தாம்ஸன்[1]
- அமைதி மதிப்புயர்ந்த ஒரு நகை சத்தியத்தைத் தவிர வேறு எதைக் கொடுத்தாவது நான் அதை வாங்க விரும்புகிறேன். - எம். ஹென்றி[1]
- பகைகொள்ளல் எனக்கு மரணம் போன்றது. நான் அதை வெறுக்கிறேன். எனக்கு நல்லார் அனைவருடைய அன்பும் தேவை. - ஷேக்ஸ்பியர்[1]
- அமைதியே கலைகளை வளர்த்து செழிப்பை உண்டாக்கி. இன்பமான புத்துயிரளிக்கும் செவிலித்தாய். - ஷேக்ஸ்பியர்[1]
- உன்னைத் தவிர உனக்கு அமைதியை வேறு எதுவும் கொண்டுவர முடியாது தத்துவங்களின் வெற்றியாலேயே அமைதி ஏற்படும். - எமர்ஸன்[1]
- போருக்கு ஆயத்தமாயிருத்தல் அமைதியைக் காக்கத் தலை சிறந்த வழியாகும். - வாஷிங்டன்[1]
- நான் அமைதியான மனிதன். அமைதியை நான் எவ்வளவு விரும்புகிறேன் என்பதை ஆண்டவர் அறிவார். ஆனால், நான் கொடுமையைக் கண்டு அதுவே அமைதி என்று தவறாகக் கருதும் கோழையல்லன். -கோஸத்[1]