பொய்மை
பொய்மை என்பது குறித்த மேற்கோள்கள்
- உண்மையாயிருக்கத் தைரியம் கொள்ளுங்கள். பிறகு எதற்கும் பொய் சொல்ல வேண்டியிராது. - ஹெர்பெர்ட்[1]
- பொய்யின் பயன் யாரும் நம்மை நம்பாமை. நாம் உண்மையைச் சொல்லும் பொழுதும், அதையும் பிறர் நம்பமாட்டார். - சர் வால்டர் ராலே[1]
- கோழைகளைத் தவிர வேறு எவரும் பொய் சொல்லுவதில்லை. -மர்ஃபி[1]
- ஒரு பொய்யைச் சொல்பவன் எவ்வளவு பெரிய வேலையை மேற்கொள்கிறான் என்பதை உணர்வதில்லை; அந்தப் பொய்யை நிலை நாட்டுவதற்கு அவன் மேலும் இருபது பொய்களை உண்டாக்க வேண்டும். - போப்[1]
- உலகில் இவ்வளவு அதிகமாகப் பொய் பரவியிருப்பதற்குக் காரணம், வேண்டுமென்றே; ஆர்வமன்று' உண்மையைப்பற்றிய கவனமின்மைதான் காரணம். - ஜான்ஸன்[1]
- எதற்காகவும் நாம் பொய் பேசாதிருக்க வேண்டும். ஒன்று. தீமையில்லாத பொய் என்றும், மற்றொன்று. மனமாரச் சொன்னதன்று என்றும் எஎண்ண வேண்டாம். அவை அனைத்தையும் வெளியே தள்ளிவிடுங்டுங்கள். அவை சாதாரணமாயும் தற்செயலாயும் ஏற்பட்டிருருக்கலாம். ஆனால், அவை புகை படிந்த ஆபாசங்கள் நம் இதயங்களில் அவை ஒட்டியிராமல் கத்தமாக வெளியேற்றிவிட வேண்டும். அவைகளுள் எது பெரிது. எது மிகவும் மோசமானது என்று கவலையே வேண்டியதில்லை. - ரஸ்கின்[1]
- ஒருவன் பொய் சொல்லுவதை ஒரு நண்பன் கண்டுகொண்டு விட்டால், அது நட்புக்கே பெரிய அதிர்ச்சியாகும். அதுமுதல் நம்பிக்கையும் குறைந்து போகும். - ஹாஸ்லிட்[1]
- பாதி உண்மை முழுப் பொய்யாகும். உண்மையைப் பொய்யால் சோடனை செய்து தவறான முறையில் கூறுவோனே பொய்யர்களுள் இழிவானவன். - இ. எல். மகூன்[1]
- எல்லாவற்றிற்கும் மேலே இதை வைத்துக்கொள் நீ உனக்கு உண்மையாக நடந்துகொள்: பிறகு இரவைப் பகல் தொடர்வது போல, நீ வேறு எந்த மனிதனுக்கும் பொய்யனாக மாட்டாய். -ஷேக்ஸ்பியர்[1]
- பொய்யன் கடவுளிடமும் தைரியமாயிருப்பான். ஆனால், மனிதர்களிடம் கோழையாகவே இருப்பான். - மாண்டெயின்[1]
- பொய்யினால் ஒருவன் அடையும் ஆதாயமெல்லாம் இதுதான். அவன் உண்மையைச் சொல்லும் போதும் எவரும் நம்பமாட்டார். - அரிஸ்டாட்டில்[1]
- ஒருவன் ஒரு பொய்யைச் சொல்லிவிட்டால், அவனுக்கு நல்ல நினைவு இருக்க வேண்டும். - கார்னீலி
- பொய்யர்கள் எல்லா வெட்கத்தையும் விட்டவர்கள். அத்னால் எல்லா உண்மைகளையும் கைவிட்டவர்கள்.[1]
- துருக்கி நாட்டுச் சட்டத்தில் பல விஷயங்கள் எனக்கு உவப்பானவை: அங்கே பிரசித்தமாகப் பொய் சொன்னதாக நிரூபிக்கப்பெற்றவர்களின் நெற்றியிலே சூடான இரும்பு கம்பியால் சூடு போடுகிறார்கள். - மாண்டேகு சீமாட்டி[1]
- பொய்யை எங்கே கண்டாலும் மிதித்து அணைத்துவிட வேண்டும். என்னைச் சுற்றி எங்காவது பொய் நடமாடுவதாய்ச் சந்தேகம் ஏற்பட்டால், தொற்று நோய்களுக்குச் செய்வது போல காற்றிலே புகையூட்டி வைப்பேன். - கார்லைல்[1]
- பாவத்திற்குப் பல கருவிகளுண்டு; ஆனால், அவை அனைத்திற்கும் பொருந்தக்கூடிய கைப்பிடி பொய்தான். - ஆ. வெ. ஹோம்ஸ்[1]