வால்ட்டர் ரேலி
சர் வால்ட்டர் ரேலி (Sir Walter Raleigh, 1554 – 29 அக்டோபர் 1618) முதலாம் எலிசபெத் காலத்தில் வாழ்ந்த இராணுவ வீரர், கடலோடி கவிஞர், உரைநடை எழுத்தாளர், அமெரிக்கக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டியவர்.
மேற்கோள்கள்
தொகு- நன்றாக ஆளப்பெறும் மக்கள். வேறு சுதந்தரம் எதையும் தேடக்கூடாது. ஏனெனில், நல்ல அரசாங்கத்தைப்பார்க்கினும் அதிகமான சுதந்தரம் வேறு இருக்க முடியாது.[1]
- பணக்காரனுக்கும் ஏழைக்கும் இதுதான் வேற்றுமை, முன்னவன் தான் விரும்பிய பொழுது உண்பான். பின்னவன் உணவு கிடைத்த பொழுதுதான் உண்பான்.[2]
- யாராவது ஒரு நண்பர் தமக்கு ஜாமீனாய் இருக்கும்படி வேண்டினால், உன்னால் இயன்ற தொகையைக் கொடுத்து உதவிசெய், அதற்கு மேலும் அவர் உன்னை வற்புறுத்தினால், அவர் உன் நண்பர் அல்ல, உங்கள் நட்பும் கெடும்.[3]
- அதிகமாய்ப் பேசுதல் செருக்கின் அடையாளம் சொற்களை அள்ளிக் கொட்டுபவன் செயலில் கருமியாயிருப்பான்.[4]
- பொய்யின் பயன் யாரும் நம்மை நம்பாமை. நாம் உண்மையைச் சொல்லும் பொழுதும், அதையும் பிறர் நம்பமாட்டார்.[5]
குறிப்புகள்
தொகு- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 43-46. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 122. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 267-268. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 284. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 287-289. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.