சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ்
சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் (21 அக்டோபர் 1772 – 25 சூலை 1834) ஓர் ஆங்கில கவிஞராவார். அவரது சிறந்த நண்பர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்துடன் இணைந்து ஆங்கில இயக்கத்தின் இன்பவியல் இலக்கியத்திற்கு அடிகோலியவர்களாகக் கருதப்படுகின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- போக்கிரி என்பவன் தலையைச்சுற்றி மூக்கைத் தொடும் முட்டாள்.[1]
- ஏறிக்கொள்ள அசுரனுடைய தோள்கள் கிடைக்குமானால் குள்ளன் அசுரனைவிட அதிகத் துரம் பார்க்க முடியும்.[2]
- சாத்தான் இளித்தான்- அவனுடைய மனதிற்குகந்த பாபம் தாழ்மைபோல் நடிக்கும் கர்வமே. [3]
- உரைநடையின் மொழிகள் கவனத்தைக் கவருமானால் அந்த உரைநடை தவறானது. பெரியோர் நூலில் எத்தனை பக்கங்கள் படித்தாலும் உரைநடையின் மொழிகளில் கவனம் செல்லாதிருக்கும்.[4]
- தத்துவ ஞானம் எல்லாம் ஆச்சரியத்தில் ஆரம்பித்து, ஆச்சரியத்தில் முடிவடையும். முதல் ஆச்சரியம் அறியாமையின் குழந்தை; மற்ற ஆச்சரியம் வணக்கத்தின் தாய். முன்னது நமது அறிவின் பிரசவக் கஷ்டம் இறுதியானது அதன் சுகமரணம்.[5]
- வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம்.[6]
குறிப்புகள்
தொகு
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவீனம். நூல் 61- 63. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கர்வம். நூல் 112- 113. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/உரைநடை. நூல் 176-178. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/தத்துவ ஞானம். நூல் 42- 44. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வணக்கம். நூல் 70. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.