வணக்கம்
தமிழ் மரபு
வணக்கம் குறித்த மேற்கோள்கள்
- உயர்ந்ததினிடம் உண்டாகும் பக்தியிலும் உயர்ந்த உணர்ச்சி கிடையாது. -கார்லைல்[1]
- வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம். -கோல்ரிட்ஜ்[1]
- மக்கள் அனைவரும் பக்தர்களே. சிலர் புகழையும் பலர் பெரும்பாலோர் சுகத்தையும் வணங்குவர். - கிரீஷியன்[1]
- அன்பும் நம்பிக்கையும் உடையவரே ஆண்டவனை வணங்குபவர். -அகஸ்டைன் ஞானி[1]
- ஆண்டவன் சந்நிதியில் நடுவில் மூன்றடி விடுதல் வேண்டும். புறத்தில் நின்றே வணங்கல் வேண்டும். எதிரே நிற்றலாகாது. எதிரிலிருப்பவனே எதிரி என்று கூறுதல் வழக்கமல்லவா? பக்கங்களில் நின்று வணங்கல் வேண்டும். —ஞானியாரடிகள் (கந்தர்சட்டிச் சொற்பொழிவில்)[2]
குறிப்புகள்
தொகு
- ↑ 1.0 1.1 1.2 1.3 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வணக்கம். நூல் 70. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.