வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்

வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (7 ஏப்ரல் 1770 – 23 ஏப்ரல் 1850) ஒரு முக்கியமான ஆங்கில இன்பத்துப்பால் கவிஞராவார் இவர் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜுடன், இணைந்து 1798 ஆம் ஆண்டு கூட்டு பதிப்பாக வெளியிடப்பட்ட வசன கவிதைகள் கொண்டு ஆங்கில இலக்கியத்தில் அகத்திணைக் காலத்தைத் தொடங்க உதவியிருக்கிறார்.

Wordsworth (1842)
  • மனித வாழ்வின் புனிதமான பாகம் அன்பு மறந்து போன அருள்நிறைந்த சிறு அக உணர்வின்செயல்கள் என்று விலை மதிப்பே அற்ற உணர்வை மனிதனுக்குள் சுரக்கச் செய்கிறார்.[1]
  • உண்மை அறிவு அன்பில் கொண்டு சேர்க்கும்.[2]
  • அறியாமை ஆண்டவன் சாபம், அறிவு தேவர் உலகத்திற்குக் கொண்டு செல்லும் சிறகு.[2]
  • பெரிய கவிஞன் ஒவ்வொருவனும் ஒரு ஆச்சாரியனே. அவ்விதம் கருதப்படவே நானும் விரும்புகின்றேன்.[3]
  • இலக்கிய ஊழியர் மட்டுமல்ல, எந்தப் பொது ஜன ஊழியரும் எளிய முறையிலேயே வாழவேண்டும் என்பது என் அபிப்பபிராயம்.[3]
  • உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.[3]
  • குற்றமான செயல் என்ற உடலிலிருந்து பயங்கள். பழைய நினைவுகளாகிய ஆயிரம் ஆவிகள் கிளம்பி வருகின்றன.[4]
  • நல்லவர்கள் முன்னதாக இறந்துவிடுகின்றனர்: கோடை காலத்துப் புழுதி போல உலர்ந்த இதயங்களையுடையவர்கள் விளக்கில் திரி தீருகிறவரை எரிந்துகொண்டிருப்பார்கள்.[5]

வாழ்க்கை

தொகு
  • எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை........

குறிப்புகள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12. 
  2. 2.0 2.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. 3.0 3.1 3.2 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கவிதை. நூல் 159-163. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 163-164. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 24-25. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.