இன்பம்

உன்னத மகிழ்ச்சி மனநிறைவு கொண்ட ஒர் உணர்ச்சி

இன்பம் (happiness) என்பது வாழ்வின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று. வாழ்வில் இன்பத்திற்கு புறக் காரணிகள் முக்கிய கூறுகளாக அமைந்தாலும், இன்பம் முதன்மையாக ஒர் அக உறுதிப் பொருளே. இன்பம் உன்னத மகிழ்ச்சி மனநிறைவு கொண்ட ஒர் உணர்ச்சி. இன்பத்தினைச் சிற்றின்பம், பேரின்பம் என இரண்டு வகையாக பண்டைய தமிழ் இலக்கியங்கள் பிரித்துக் குறிப்பிட்டுள்ளன.

மேற்கோள்கள்தொகு

  • இன்பம் என்கிறபொழுது ஒருவனும் ஒருத்தியுமாக கலந்து பெறும் புலனின்பமே ஆகும். - சோ. ந. கந்தசாமி
  • அன்புள்ள இதயம் இன்பத்தின் ஊற்று; அதைச் சுற்றியுள்ளவர்களின் முகங்களெல்லாம் புன்னகையுடன் விளங்கும். - வாசிங்டன் இர்விங்
  • இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது அதைப் பற்றி சிந்தனை செய். - அரிஸ்டாட்டில்
  • கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று: ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதும் இன்பம் அளிப்பதுமாகும்! - ரஸ்கின் பாண்ட்
  • இம்மையில் தம்மை இயக்க இன்பம் தரும் ஒர் இலக்கு வேண்டும். - பெ. சுந்தரம் பிள்ளை

வெளியிணைப்புக்கள்தொகு

விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


விக்சனரியில் இருக்கும் இன்பம் என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இன்பம்&oldid=15917" இருந்து மீள்விக்கப்பட்டது